இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

உலகளவில் டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு. எலக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்துவரும் இந்நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் எதுவும் அதிகாரப்பூர்வமாக கிடைப்பதில்லை.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

இருப்பினும் இந்தியாவில் உள்ள இரு பணக்காரர்கள் டெஸ்லா மாடலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உபயோகித்து வருகின்றனர். அவர்களையும், அவர்கள் பயன்படுத்தும் டெஸ்லா மாடல்களை பற்றியும் தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

ப்ரஷாந்த் ருயா - டெஸ்லா மாடல் எக்ஸ்

எஸ்ஸார் க்ரூப் நிறுவனத்தின் சிஇஒ-வான ப்ரஷாந்த் ருயா தான் முதன்முதலாக டெஸ்லா நிறுவனத்தின் காரை இந்தியாவில் பயன்படுத்த ஆரம்பித்தவர். 2017ல் மும்பை துறைமுகம் வழியாக இவர் இந்தியாவில் இறக்குமதி செய்த முதல் டெஸ்லா கார் மாடல் எக்ஸ் ஆகும்.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

உலகிலேயே வேகமான எலக்ட்ரிக் எஸ்யூவி என்ற பெயர் பெற்ற இந்த டெஸ்லா மாடல் எக்ஸ் காரில் 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒன்று முன்புற சக்கரங்களை ட்ரைவ் செய்வதற்கும், மற்றொன்று பின் சக்கரங்களை ட்ரைவ் செய்வதற்கும் பயன்படும்.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

இவை காருக்கு வழங்கும் ஆற்றல் அளவு 750 பிஎச்பி பவர் மற்றும் 967 என்எம் டார்க் திறன் ஆகும். 0-லிருந்து 100kmph என்ற வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும் இந்த எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும்.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

டெஸ்லா நிறுவனம் மாடல் எக்ஸ் காரின் பி90டி வேரியண்ட்டில் மட்டும் கூடுதலாக 'லுடிக்ரௌஸ்' என்ற மோட்டை வழங்கியுள்ளது. இந்த மோட்டில் 0-100kmph என்ற வேகத்தை காரானது வெறும் 3.2 வினாடிகளில் அடைந்துவிடும்.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

முகேஷ் அம்பானி- டெஸ்லா மாடல் எஸ் 100டி

முகேஷ் அம்பானிக்கும் கார்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை பற்றி நான் கூறி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், பாண்டம் இடபிள்யூபி, பென்ட்லீ பெண்டாய்கா உள்பட ஏகப்பட்ட உயர்ரக கார்களை வைத்திருக்கும் இவர், கடந்த ஆண்டில் தனது கார் சேமிப்பில் டெஸ்லா மாடல் எஸ் 100டி காரையும் ஒன்றாக இணைத்து கொண்டுள்ளார்.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

பவர்ஃபுல்லான சக்கரங்களை கொண்ட இந்த டெஸ்லா மாடல் எஸ் 100டி காரில் 423 பிஎச்பி பவர் மற்றும் 660 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் இந்த காரின் அனைத்து சக்கரங்களுக்கு சீராக செல்கிறது.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

0-லிருந்து 100kmph என்ற வேகத்தை 4.3 வினாடிகளில் அடைந்துவிடும் இந்த கார், எலக்ட்ரிக் கார்களுக்கு அதிகப்பட்சமாக வரையறுக்கப்பட்டுள்ள 250kmph என்கிற வேகம் வரையில் இயங்கக்கூடியது. சிங்கிள் சார்ஜில் இந்த கார் அதிகப்பட்சமாக 495கிமீ வரை செல்லும் ஆற்றல் கொண்டது.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

இவர்கள் இருவர் மட்டும் தான் தற்சமயம் இந்திய சாலையில் டெஸ்லா எலக்ட்ரிக் காரை ஓட்டி வருகின்றனர். இவர்கள் தவிர்த்து, தல அஜித்தின் ஆசை படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த நடிகை பூஜா பத்ராவும் சொந்தமாக மாடல் 3 என்கிற டெஸ்லா காரை வைத்துள்ளார்.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

ஆனால் இவர் அமெரிக்காவில் வசித்து வருவதால் டெஸ்லா காரும் அங்கு தான் உள்ளது. பூஜா பத்ரா வைத்துள்ள டெஸ்லா மாடல் 3 கார், 4-கதவுகள் செடான் வகையை சேர்ந்தது. சிங்கிள் சார்ஜில் 386 கிமீ தூரம் வரை இயங்கக்கூடிய இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 200kmph ஆகும். 0-100kmph என்கிற வேகத்தை இந்த மாடல் 3 கார் 5 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

நடிகை பூஜா பத்ரா மட்டுமில்லாமல், நடிகை ஜெனிலியாவின் கணவரான பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்-கும் தனது பயன்பாட்டிற்கு டெஸ்லா மாடல் எக்ஸ் காரை வைத்துள்ளார். ஆம் ப்ரஷாந்த் ருயா வைத்துள்ள அதே டெஸ்லா மாடல் தான். என்ன, ருயாவின் டெஸ்லா கார் நீல நிறத்தில் இருக்கும். தேஷ்முக்கின் கார் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு இந்த காரை அவரது மனைவி ஜெனிலியா பிறந்தநாள் பரிசாக வழங்கினார். இடதுப்புற ட்ரைவிங் ஸ்டைலை கொண்டுள்ள இந்த டெஸ்லா மாடல் 3 காரில் 259 பிஎச்பி பவர் மற்றும் 503 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடிய இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேஷ்முக்கின் இந்த டெஸ்லா காரும் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

இந்தியாவில் தொழிற்சாலை ஒன்றை துவங்க டெஸ்லா நிறுவனமும் கடந்த சில வருடங்களாக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சிஇஒ எலான் மஸ்க், இந்தியாவில் விற்பனை வரியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் எதாவது நடக்கிறதா என்று பார்ப்போம் என கடந்த வருட ஏப்ரல் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் டெஸ்லா காரை சொந்தமாக வைத்துள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்..!

அதற்கு அடுத்து 2019 மே மாதத்தில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இந்த வருடத்தில் (2019) டெஸ்லாவின் இந்திய அறிமுகம் இருக்கும். இது நடக்கவில்லையெனில், கண்டிப்பாக அடுத்த வருடத்தில் இருக்கும் என கூறியிருந்தார். இதனால் இந்திய சந்தையில் டெஸ்லா கார்களின் அறிமுகங்களை இந்த வருடத்தின் இறுதியில் இருந்து எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India’s famous Tesla owners
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X