போக்குவரத்து விதிமீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை.. நீங்கள் நினைத்தாலும் ரெட் சிக்னலை மீறவே முடியாது..
போக்குவரத்து விதமீறலை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகப் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட டெஸ்லா நிறுவனம். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், மின்சார வாகனங்களை மட்டுமே மையமாகக் கொண்டு வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது.

உலக நாடுகள் பலவற்றில் இந்நிறுவனத்தின் வாகனங்களுக்கு ஏகபோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் முன்னணி நிறுவனங்களையே வீழ்த்தும் வகையில் விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது டெஸ்லாவின் தயாரிப்புகள்.

இத்தகைய வரவேற்பை டெஸ்லா பெறுவதற்கு, அதில் இடம்பெற்றிருக்கும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளும், அதிக ரேஞ்ச் வழங்கும் திறன் உள்ளிட்டவையே காரணமாக இருக்கின்றது.
அதுமட்டுமின்றி, ஆடம்பர ரகத்தில் விற்பனைக்கு கிடைக்கும் எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பம்சம் கொண்டவையாக டெஸ்லா மின் வாகனங்கள் இருக்கின்றன. இதனாலயே, சில உலக நாடுகள் பலவற்றில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

ஆனால், இந்தியாவில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இங்கு எப்போது டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பு அதிகமாகவே உள்ளது.
டெஸ்லாவின் வாகனங்கள் அனைத்தும் மின்சார வாகனங்கள் என்பதைக் காட்டிலும் அவை தானியங்கி திறன் கொண்டவை என்பதுதான் கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

இந்த திறன் மூலம் குறைந்தபட்ச மனித தலையீட்டைக் கொண்டு காரை தானாகவே இயக்க முடியும்.
அதாவது, டிரைவர் இல்லாமலே பார்க்கிங் செய்தல், நேவிகேஷன் உதவி மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர்தல், க்ரூஸ் கன்ட்ரோலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றை டெஸ்லா மின்சார கார் தனியங்கி மோடின்மூலம் அதுவாகவே செய்து கொள்ளும்.

இந்த சிறப்பு திறன்களை கூடுதலாக அப்டேட் செய்யும் பணியில் இறங்கியிருக்கின்றது டெஸ்லா நிறுவனம். இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், புதிய அப்டேட் மூலம் இயங்கும் டெஸ்லா மின்சார கார், சிவப்பு சிக்னலுக்கு மதிப்புக் கொடுத்து, அது முடியும் வரை காத்திருந்து பின்னர் அங்கிருந்து செல்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன.

எனவே, தானியங்கி மோடில் இயங்கும் டெஸ்லா மின்சார காரை சிவப்பு சிக்னலின்போது இயக்க முடியாது என்பது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பது டெஸ்லா மாடல் 3 மின்சார கார் என கூறப்பட்டுள்ளது. தானியங்கி திறனில் இயங்கும் இந்த கார் சாலையில் இருக்கும் ஒவ்வொரு சிக்னலுக்கும் மதிப்பு கொடுத்துச் செல்வதை நம்மால் வீடியோவின் வாயிலாக காண முடிகின்றது.

குறிப்பாக, எந்தொவரு சிரமும் இல்லாமல் அந்த கார் செல்வதை நம்மால் உணர முடிகின்றது. இந்த திறனை புதிய அப்டேட்டின் வாயிலாக டெஸ்லா நிறுவனம், அதன் கார்களுக்கு வழங்கி வருகின்றது. இதில், தானியங்கி சேவைகள் பல முன்பைக் காட்டிலும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, வேகத்தை அதிகரிக்கின்ற அப்டேட்டுகளையும் டெஸ்லா வழங்கி வருகின்றது. இந்த சிறப்பு வசதியை டெஸ்லாவின் மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே அந்நிறுவனம் வழங்கியிருந்தது. இதனால், அவை 50பிஎச்பி வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றன. இது முன்பைக் காட்டிலும் பல அதிக திறன் ஆகும்.

டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியாக பல நிறுவனங்கள் தானியங்கி திறன் கொண்ட மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால், அவற்றைக் காட்டிலும் டெஸ்லாவின் மின்வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்த நிலையிலேயே இருக்கின்றது.
இந்நிறுவனம், இப்போது நான்கு மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. அவை, மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ், மாடல் ஒய் ஆகியவை ஆகும்.
இதுதவிர, எதிர்காலத்தில் ரோட்ஸ்டர், செமி மற்றும் சைபர் ட்ரக் உள்ளிட்ட மின் வாகனங்களையும் களமிறக்க அது திட்டமிட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








