பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி மின்சார கார் மாடல் 3 பாதசாரிகளை எச்சரிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் தானியங்கி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, உலகளவில் புகழ்பெற்ற நிறுவனமாக இருக்கின்றது.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இன்னும் இந்தியாவில் விற்பனைக்க அறிமுகம் செய்யப்படவில்லை என்பது கவலைக்குரிய விசயமாக இருக்கின்றது. இருப்பினும், அதன் சிஇஓ எலன்மஸ்க் விரைவில் டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இருக்கின்றார்.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் அவர், தயாரிப்புகளின் தரத்தை உயர்த்தும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றார்.

அந்தவகையில், அண்மையில் முற்றிலும் வித்தியாசமான தோற்றம் கொண்ட ஓர் பிக்-அப் டிரக்கை அவர் அறிமுகம் செய்திருந்தார். முன்னதாக, செடான் மற்றும் எஸ்யூவி ரக கார்களை மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருந்த இந்நிறுவனம், தனது சந்தையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் பிக்-அப் டிரக்கை அறிமுகம் செய்தது.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

இத்துடன், பஸ் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான பணியில் அது களமிறங்கியிருக்கின்றது.

இந்நிலையில், எலன் மஸ்க் அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டெஸ்லா காரின் எதிர்கால தொழில்நுட்பம் பற்றிய தகவல் அடங்கியுள்ளது. அது, டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் விரைவில் பயணிகள் விருப்பத்தின்படி பேசும் என்பதே ஆகும்.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

ஆகையால், டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் விரைவில் உரையாடும் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், டெஸ்லா மாடல் 3 கார் பேசுவதைப் போன்ற எலன் மஸ்க் வெளியிட்ட வீடியோவை இங்கே க்ளிக் செய்வதன் உங்களால் பார்க்க முடியும். அதில், சாலையில் இருக்கும் பாதசாரிகளை எச்சரிக்கும் வகையில், "நல்லது, இங்கே நிற்காதீர்கள்" என டெஸ்லா மாடல் 3 கூறுகின்றது.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

டெஸ்லா கார்களில் புதிதாக தரிசனம் அளிக்கவிருக்கும் இந்த வசதி ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடியதாகும். ஆகையால், சென்சார் முறையில் செயல்படும் இது, பாதையின் குறுக்கே யாரேனும் இருப்பாரானால் அவர்களை வழி விடச் செய்யும் வகையில் எச்சரிக்கும். மேலும், பயணிகளுக்கு தேவையான சீட் பெல்ட் மற்றும் பாதுகாப்பு பற்றிய அறிவுரையை வழங்கி வழி நடத்தும் என தெரிகின்றது.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

நாம் ஏற்கனவே கூறியதைப்போன்று, டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி மின்சார கார்கள் இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கின்றன. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும், இதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவ்வப்போது டுவிட்டரின் மூலமாக எலன் மஸ்க் தெரிவித்து வருகின்றார்.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

ஆகையால், எப்போது வேண்டுமானாலும் டெஸ்லா கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம்.

இந்நிறுவனம், அண்மையில் காட்சிப்படுத்திய பிக்-அப் டிரக் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவையனைத்தையும் முறியடித்து புக்கிங் புதிய உத்வேகத்தைப் பெற்று வருகின்றது. அதிலும், அந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றே தினங்களில் புக்கிங் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்தது.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

முக்கியமாக டெஸ்லா சைபர்டிரக்கின் சிறப்பம்சங்களே இத்தகைய வரவேற்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், இந்த எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடலில் குண்டு துளைக்காத ஜன்னல் கண்ணாடிகள், வலிமையான கட்டமைப்பு, அதிக பாரம் சுமக்கும் திறன், நீண்ட தூரம் பயணிக்கும் சக்தி என பாதுகாப்பு மற்றும் எஞ்ஜின் திறனில் இந்த எலெக்ட்ரிக் டிரக் படுஅமர்க்களமானதாக காட்சியளிக்கின்றது. ஆகையால், இதுவும் இந்த காருக்கு தற்போது கிடைத்திருக்கும் அதிக வரவேற்பிற்கு காரணமாக இருக்கின்றது.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

குறிப்பாக ஆன்லைனில் முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 48 மணி நேரத்தில் 1.46 லட்சம் யூனிட்டுகளுக்கான புக்கிங்குகள் குவிந்தன. இவ்வாறு, தொடர்ந்து மூன்று நாட்களில் மட்டும் 1.87 லட்சம் புக்கிங்குகளை அள்ளி குவித்துக் கொண்டது.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

இந்த எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் மூன்று விதமான தேர்வுகளில் கிடைக்கின்றது. ஒன்று ஒற்றை மின் மோட்டாரிலும், மற்றொன்று இரட்டை மின் மோட்டாரிலும் கிடைக்கிறது. இதில், ஒற்றை மின் மோட்டார் கொண்ட டிரக் ஒரு முழுமையான சார்ஜில் 402 கிமீ ரேஞ்சையும், இரட்டை மோட்டார் கொண்ட மாடல் 482 கிமீ ரேஞ்சையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.

பாதசாரிகளை எச்சரிக்கும் டெஸ்லா... டுவிட்டரில் வீடியோ பகிர்ந்த சிஇஓ எலன் மஸ்க்...!

இத்துடன், மூன்று மின் மோட்டார்கள் கொண்ட மாடலிலும் இந்த பிக்-அப் டிரக் கிடைக்கின்றது. அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்ட இந்த எலெக்ட்ரிக் டிரக் ஒரே ஒரு முழுமையான சார்ஜில் 804 கிமீ ரேஞ்சை வழங்கும். இப்போது தெரிகின்றதா ஏன் இந்த காருக்கு புக்கிங் இமாலய அளவில் குவிந்து வருகின்றது என்று.

இது இந்திய மதிப்பில் ரூ. 29 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Model 3 Talks With Pedestrians. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X