Just In
- 43 min ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 50 min ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 1 hr ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- 2 hrs ago
தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்!! 2020 இறுதியிலும் தொடர்ந்துள்ளது!
Don't Miss!
- News
நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என்று முழங்கிய நேதாஜி... இபிஎஸ், ஓபிஎஸ் புகழாஞ்சலி
- Lifestyle
உங்க ராசிப்படி நீங்க எந்த வகையான நண்பர் தெரியுமா? நீங்க தேவாவா இல்ல சூர்யாவா? தெரிஞ்சிக்கோங்க...!
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த இரு மின்சார கார்கள்... ஓடுகளத்தையே நடுங்க வைத்த வேகம்... வீடியோ!
டெல்ஸா மாடல் எஸ் மற்றும் போர்ஷே டேகான் டர்போ எஸ் ஆகிய இரு மின்சார கார்களும் டிராக் ரேஸ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. துரதிர்ஷ்டவசமாக இக்கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், இக்கார் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு சில இந்திய தொழிலதிபர்கள் இக்காரை பல மடங்கு வரிச் செலுத்தி பயன்பாட்டிற்காக களமிறக்கியிருக்கின்றனர். அதில், முகேஷ் அம்பானியும் அடங்குவார்.

இவ்வாறு உலக மக்களை கவர்ச்சியான உருவம் மற்றும் அதிக ரேஞ்ஜ் திறனால் கவர்ந்து வரும் டெஸ்லா நிறுவனத்தின் ஓர் மின்சார காரே, ஸ்போர்ட்ஸ் கார்களைத் தயாரித்து வரும் போர்ஷே நிறுவனத்தின் டேகான் டர்போ எஸ் மாடலுடன் அதி வேக (டிராக் ரேஸ்) பந்தயத்தில் ஈடுபட்டிருக்கின்றது.

போட்டியில் ஈடுபட்டது டெஸ்லாவின் மாடல் எஸ் மின்சார காராகும். இதனுடன் போட்டியில் ஈடுபட்ட மற்றொரு போர்ஷே டேகான் டர்போ எஸ் மின்சார காராகும். இந்த போட்டியின்போது வெளியாகிய ஆச்சரியமிகு தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இரு கார்களும் மின்சார வாகனங்களாக இருந்தாலும் இவற்றிற்கிடையே விலை, ரேஞ்ஜ் மற்றும் மின் மோட்டாரின் திறன் வெளிப்பாடு உள்ளிட்டவை வெவ்வேறானாதாக உள்ளன. இதுகுறித்து ஆராயும் வகையிலேயே மேட் வாட்சன் கார்ஸ் எனும் யுட்யூப் பயனர் ஒருவர், இரு கார்களையும் டிராக் ரேஸ் செய்து பார்த்துள்ளார். இதற்காக அவர், வாகனங்களின் ஓடுதளத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை கார் வாவ் யுட்யூப் பக்கத்திலேயே அவர் வெளியிட்டும் இருக்கின்றார். இந்த போட்டி இரண்டு சுற்றுகள் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டன. இதில், குவார்டர்-மைல் டிராக் ரேஸ் போட்டியே முதல் போட்டியாகும். இதில், சந்தேகத்திற்கு இடமின்றி ஃபோர்ஷே டேகான் மின்சார காரே வெற்றிப் பெற்றது. ஆரம்பத்தில் இரு கார்களும் மிக சீராக இயங்குவதைப் போன்று தென்பட்டாலும், இறுதியில் போர்ஷே காரே வெற்றி வாகைச் சூடியது.

இரண்டாம் சுற்றில் பார்த்தோமேயானால் நம்முடைய கண்களை ஏமாற்றும் வகையில் போர்ஷே டேகான் சீறிப்பாய்ந்தது. ஆம், இந்த போட்டியிலும் இக்காரே வெற்றியைத் தழுவியது. ஆனால், ஆரம்பத்தில் போர்ஷே கார், டெஸ்லா மின்சார காரைக் காட்டிலும் பின் தங்கிய வேகத்திலேயே சென்றது. திடீரென அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்து அக்கார் வெற்றி இலக்கைத் தொட்டது.

இது, டெஸ்லா மின்சார காரை இயக்கிய ஓட்டுநருக்கு ஷாக் வைத்தியம் அளிக்கும் வகையில் இருந்தது. டெஸ்லா மாடல் எஸ் மின்சார வாகனச் சந்தையில் ஃபெர்ஃபார்மன்ஸ் காராகவே பார்க்கப்படுகின்றது. இக்கார், அதிகபட்சமாக 825 எச்பி மற்றும் 1,300 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதில், இரு மின் மோட்டார்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

அவையே, மாடல் எஸ் மின்சார காரின் அனைத்து வீல்களுக்கும் இயங்கும் திறனை வழங்குகின்றது. இதன் எடை 2,241 கிலோவாக உள்ளது. இந்த காருடன் போட்டியிட்ட ஃபோர்ஷே விலையைத் தவிர மற்ற அனைத்திலும் குறைந்த திறனைக் கொண்டதாகவே உள்ளது. இக்கார், அதிகபட்சமாக 761 எச் மற்றும் 1,050 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இதிலும், நான்கு வீல் இயங்கு திறன் மற்றும் இரு மின் மோட்டார்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த திறன்களைக் கொண்டே டெஸ்லா மாடல் எஸ் மின்சார காரை அது டிராக் ரேஸில் துவம்சம் செய்திருக்கின்றது. இதற்கு போர்ஷே நிறுவனத்தின் பிக்-அப் திறனே முதன்மைக் காரணமாக உள்ளது.

போர்ஷே டேகான் டர்போ எஸ், டெஸ்லா மாடல் எஸ் காருக்கு போட்டியாக களமிறக்கப்பட்டிருப்பதால் இக்காரில் 2 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பின்பக்க ஆக்சில்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவே, மாடல் எஸ் மின்சார காருக்கு சற்றும் விட்டுக் கொடுக்காமல் டேகான் டர்போ எஸ் மாடலை வெற்றியடையச் செய்திருக்கின்றது.
இக்கார்களின் மதிப்பை ஜிபிபி மதிப்பில் பார்க்கலாம். மாடல் எஸ் கார் ஜிபிபி மதிப்பில் 105,000-க்கு கிடைக்கின்றது. இது. தோராயமாக இந்திய மதிப்பில் ரூ. 1.03 கோடி ஆகும். இதேபோன்று போர்ஷே டேகான் டர்போ எஸ் மின்சார கார் ஜிபிபி மதிப்பில் 1,39,000-க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது இந்திய மதிப்பில் ரூ. 1.36 கோடியாகும்.