Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மறைந்த மசாலா கிங்கிடம் இத்தனை சொகுசு கார்களா..? உண்மையில் ஒரு அரசனை போலவே வாழ்ந்திருக்கார்!!
மறைந்த மசாலா கிங் பயன்படுத்தி வந்த சொகுசு கார்கள் பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான குலாத்தி வயது மூப்பின் காரணமாக கடந்த டிசம்பர் 3ம் தேதி அன்று காலை இயற்கை எய்தினார். இவரையே இந்த உலகம் 'மசாலா உலகின் அரசன்' -ஆக பார்த்து வந்தது. எனவே இவரின் மறைவு பலருக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. இவருக்கு வயது 98 ஆகும்.

எம்டிஎச் (மகாஷியன் டி ஹத்தி) எனும் பெயரில் குலாத்தி தயாரித்து வந்த மசாலாவிற்கு பலர் அடிமையாக மாறிவிட்டனர் என்றுகூட கூறலாம். அந்தளவிற்கு மிகுந்த தரமான மற்றும் சுவையான மசாலாக்களை தன் நிறுவனத்தின் மூலம் வழங்கியவர் குலாத்தி. எனவேதான் இவரை குலாத்தி என்று அழைப்பதற்கு பதிலாக 'மசாலா கிங்' என அழைத்தனர்.

எம்டிஎச் (மகாஷியன் டி ஹத்தி) எனும் பெயரில் குலாத்தி தயாரித்து வந்த மசாலாவிற்கு பலர் அடிமையாக மாறிவிட்டனர் என்றுகூட கூறலாம். அந்தளவிற்கு மிகுந்த தரமான மற்றும் சுவையான மசாலாக்களை தன் நிறுவனத்தின் மூலம் வழங்கியவர் குலாத்தி. எனவேதான் இவரை குலாத்தி என்று அழைப்பதற்கு பதிலாக 'மசாலா கிங்' என அழைத்தனர்.

இவர் இந்த உலகில் மசலாவின் கிங்காக வலம் வந்தபோது என்ன மாதிரியான கார்களை பயன்படுத்தினார் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கிவிருக்கின்றோம். உண்மையைக் கூற வேண்டுமானால் இவருக்கு மசாலா உலகம் கொடுத்த அடைமொழி பெயருக்கேற்ப ஓர் அரசன் போலவே வாழ்ந்து வந்திருக்கின்றார். இதற்கு உதாரணமாக அவர் பயன்படுத்திய ஒரு சில கார்கள் இருக்கின்றன.

அவற்றை பற்றிய தகவல் இதோ:
க்ரிஸ்லர் 300சி லிமோசைன்:
நாட்டின் முக்கியமான தலைவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வாகனமாக லிமோசைன் ரக கார்கள் இருக்கின்றன. இத்தகைய வாகனமாக பார்க்கப்படும் க்ரிஸ்லர் 300சி லிமோசைன் காரையே குலாத்தி நீண்ட காலமாக தனது சொகுசு பயணங்களுக்காக பயன்படுத்தி வந்தார். இக்கார் சுமார் ரூ. 1 கோடிக்கும் அதிகமான விலைக் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு கதவுகளைக் கொண்டிருக்கும் இக்காரின் உட்பகுதி மிகவும் பிரமாண்டமானதாகவும், பார்ப்பதற்கு மினி அரண்மனையைப் போன்றும் காட்சியளிக்கும். எனவேதான் உலக செல்வந்தர்களில் சிலர் இக்காரை தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர். விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில் மட்டுமே இந்த கார் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்:
இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 6.95 கோடிகள் ஆகும். இதனை சொகுசு கார் என்பதற்கு பதிலாக உல்லாச கப்பல் என்றே கூறலாம். இந்த கூற்றிற்கு ஏற்ப மிகுந்த சொகுசான பயண அனுபவத்தை இக்கார் வழங்கும். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பள்ளம், மேடுகள் நிறைந்த சாலைகளில் சென்றால்கூட தண்ணீரில் மிதப்பதைப் போன்ற அனுபவத்தை இக்கார் வழங்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் எம் கிளாஸ் எம்எல் 500:
குலாத்தி பயன்படுத்தி வந்த கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எம் கிளாஸ் எம்எல் 500 மாடலும் ஒன்று. இந்த கார் இந்தியாவில் ரூ. 45.35 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்ட காராகும். அதேசமயம், இந்த காரின் உயர்நிலை மாடலின் விலை ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். இத்தகைய விலையுயர்ந்த காரிலேயே குலாத்தி பல நேரங்களில் வலம் வந்திருக்கின்றார்.

டொயோட்டா இன்னோவா:
என்னதான் சொகுசு கார்கள் பல இருந்தாலும் சில நேரங்களில் மிகவும் சாதாரணமான கார்களில் பயணிக்கும் பழக்கத்தையும் குலாத்தி கொண்டிருந்தார். அந்தவகையில், அவர் அதிகம் பயன்படுத்திய காராக டொயோட்டா இன்னோவா இருக்கின்றது. இந்த கார் தற்போது ரூ. 15.7 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மேலே நாம் பார்த்த இந்த கார்களையே குலாத்தி அதிக நேரங்களில் பயன்படுத்தியிருக்கின்றார். இது தவிர அவரிடத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி போன்ற கார்களும் அவரின் பயன்பாட்டில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.