ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் எஸ்யூவி கார்! வாங்குவதற்கு முண்டியடிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள்

ஹேட்ச்பேக் கார்களை விட குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிஸான் மேக்னைட் எஸ்யூவி காரை வாங்குவதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் எஸ்யூவி கார்! வாங்குவதற்கு முண்டியடிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள்

மேக்னைட் காருடன் இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிஸான் நிறுவனம் தற்போது நுழைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிஸான் மேக்னைட் கார், கடந்த டிசம்பர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நிஸான் நிறுவனத்திற்கு மேக்னைட் கார் புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் எஸ்யூவி கார்! வாங்குவதற்கு முண்டியடிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள்

அதற்கு ஏற்ப விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வெறும் 5 நாட்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை நிஸான் மேக்னைட் குவித்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நிஸான் மேக்னைட் காருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதற்கு, அதன் குறைவான விலைதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் எஸ்யூவி கார்! வாங்குவதற்கு முண்டியடிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள்

நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.99 லட்ச ரூபாய் மட்டுமே (அறிமுக சலுகை விலை). அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டிற்கு 9.45 லட்ச ரூபாய் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்). முக்கியமான போட்டியாளர்களான கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற கார்களுடன் ஒப்பிடும்போது நிஸான் மேக்னைட்டின் விலை மிகவும் குறைவு.

ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் எஸ்யூவி கார்! வாங்குவதற்கு முண்டியடிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள்

இன்னும் சொல்லப்போனால் ஒரு சில ஹேட்ச்பேக் கார்களை விட நிஸான் மேக்னைட்டின் விலை குறைவு என்பது ஆச்சரியமான விஷயம். ஹேட்ச்பேக் காரின் விலையில் எஸ்யூவி கார் கிடைத்தால் வரவேற்பு இல்லாமல் போகுமா என்ன? இதன் காரணமாகதான் நிஸான் மேக்னைட் காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் எஸ்யூவி கார்! வாங்குவதற்கு முண்டியடிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள்

நிஸான் நிறுவனம் எதிர்பார்த்ததை விட மேக்னைட் காருக்கு அதிக வரவேற்பு கிடைத்திருப்பதை போல் தெரிகிறது. தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் விலை குறைவான பேஸ் எக்ஸ்இ வேரியண்ட்டின் காத்திருப்பு காலம் 6 மாதங்களை தொட்டுள்ளதாக டீலர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் எஸ்யூவி கார்! வாங்குவதற்கு முண்டியடிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள்

அதே சமயம் டாப் வேரியண்ட்களுக்கு குறிப்பிட்ட நகரங்களில் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே நிஸான் நிறுவனம் மேக்னைட் காரின் உற்பத்தியை கூடிய விரைவில் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரைவாகவே காரை டெலிவரி பெற்று கொள்ள முடியும்.

ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் எஸ்யூவி கார்! வாங்குவதற்கு முண்டியடிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள்

டெலிவரி தாமதமானால் வாடிக்கையாளர்கள் ஆர்வம் இழக்க கூடும். அப்படி நடப்பதை நிஸான் நிறுவனம் விரும்பாது என நம்பலாம். நிஸான் மேக்னைட் காரில் இரண்டு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் முதலாவது இன்ஜின் 1.0 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், 3-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 ஹெச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஹேட்ச்பேக் காரை விட குறைவான விலையில் எஸ்யூவி கார்! வாங்குவதற்கு முண்டியடிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள்

இரண்டாவது இன்ஜின், 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-3 பெட்ரோல் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 10, 2020, 13:58 [IST]
English summary
The Nissan Magnite Compact SUV Now Has An 6 Month Waiting Period. Read in Tamil
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+