மஹிந்திரா தார் காரின் பக்கம் குவியும் பிரபலங்கள்.. இப்போவே இத்தன பேர் இந்த காரை வாங்கியிருக்காங்களா?

மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி காரின் பக்கம் பிரபலங்கள் குவந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா தார் காரின் பக்கம் குவியும் பிரபலங்கள்... இப்போவே இத்தன பேர் இந்த காரை வாங்கியிருக்காங்களா?

பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி கார் கடந்த மாதம் 2ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இக்காருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது.

மஹிந்திரா தார் காரின் பக்கம் குவியும் பிரபலங்கள்... இப்போவே இத்தன பேர் இந்த காரை வாங்கியிருக்காங்களா?

தினசரி மற்றும் குடும்பத்துடன் பயணத்தை மேற்கொள்வோர்கள் மத்தியிலும் இக்காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதற்கான தார் எஸ்யூவி காரின் கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் மட்டுமே காரணம் ஆகும். இத்துடன், இதன் குறைந்த விலையும் தார் அமோகமான வரவேற்பைப் பெறுவதற்கு காரணமாக உள்ளது.

மஹிந்திரா தார் காரின் பக்கம் குவியும் பிரபலங்கள்... இப்போவே இத்தன பேர் இந்த காரை வாங்கியிருக்காங்களா?

இந்த காருக்கு பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி சில பிரபலங்களிடத்தில் இருந்து நல்ல அமோகமான வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் உதய்பூர் இளவரசருக்கு மஹிந்திரா தார் மாடலின் 700 லிமிடெட் எடிசன் டெலிவரிக் கொடுக்கப்பட்டது.

மஹிந்திரா தார் காரின் பக்கம் குவியும் பிரபலங்கள்... இப்போவே இத்தன பேர் இந்த காரை வாங்கியிருக்காங்களா?

இவரைப் போலவே இன்னும் பல பிரபலங்கள் இக்காரை தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றனர். அவர்கள் யார் என்பது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். பெரும்பாலான பிரபலங்கள் வட மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ரோஹித் ராய் எனும் இந்தி தொலைக்காட்சி தொகுப்பாளர், பஞ்சாபி பாடகர் ரஞ்ஜித் பாவா மற்றும் நடிகர் அமி விர்க் ஆகியோர் புதிதாக தார் எஸ்யூவி பெற்றிருக்கின்றனர்.

மஹிந்திரா தார் காரின் பக்கம் குவியும் பிரபலங்கள்... இப்போவே இத்தன பேர் இந்த காரை வாங்கியிருக்காங்களா?

இவர்களைப் போன்று மேலும் பல பிரபலங்கள் மஹிந்திரா தார் காரை வாங்கியிருப்பதாகவும், அவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ வெளியாகமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதுபோன்ற அனைத்து தரப்பிலும் இக்காருக்கு எதிர்பார்த்திராத வகையில் வரவேற்பு கிடைத்து வருவதால், இதற்கான காத்திருப்பு காலம் 7 மாதங்களாக அதிகரித்துள்ளது.

மஹிந்திரா தார் காரின் பக்கம் குவியும் பிரபலங்கள்... இப்போவே இத்தன பேர் இந்த காரை வாங்கியிருக்காங்களா?

ஆமாங்க, இப்போ நீங்க மஹிந்திரா தார் காரை புக் செஞ்சீங்கனா உங்கள் கைகளுக்கு அந்த கார் வந்து சேர குறைந்தது 7 மாதங்கள் ஆகிவிடும். நாம் தேர்வு செய்யும் வேரியண்டைப் பொருத்து இந்த கால தாமதம் அமையும். இக்கார், ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் ஆகிய இரு விதமான சீரிஸ்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 11.90 லட்சங்கள் ஆகும்.

மஹிந்திரா தார் காரின் பக்கம் குவியும் பிரபலங்கள்... இப்போவே இத்தன பேர் இந்த காரை வாங்கியிருக்காங்களா?

அதேசமயம், இதன் அதிகபட்ச விலை ரூ. 12.95 லட்சங்களாக இருக்கின்றது. வேரியண்ட் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாஃப்ட் டாப், கன்வெர்டபிள் டாப் மற்றும் ஹார்ட் டாப் ஆகிய தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

மஹிந்திரா தார் காரின் பக்கம் குவியும் பிரபலங்கள்... இப்போவே இத்தன பேர் இந்த காரை வாங்கியிருக்காங்களா?

மஹிந்திரா நிறுவனம், தார் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டி-ஜிடிஐ எம்ஸ்டால்லியன் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜின் ஆகிய இரு விதமான எந்திர தேர்வுகளை வழங்கி வருகின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. இதேபோன்று, டீசல் 130 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
These Celebrities Also Bought New Mahindra Thar: Here Is Full List. Read In Tamil.
Story first published: Tuesday, November 10, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X