என்னா ஸ்பீடு!! இந்தியாவின் முதல் மாடிஃபை 2020 ஹூண்டாய் ஐ20 கார் இதுதான்!

இந்த நவம்பர் மாத துவக்கத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகமான புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரை வாடிக்கையாளர் ஒருவர் அதற்குள்ளாக மாடிஃபை செய்து பிரமிப்பூட்டியுள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

என்னா ஸ்பீடு!! இந்தியாவின் முதல் மாடிஃபை 2020 ஹூண்டாய் ஐ20 கார் இதுதான்!

இந்தியாவில் மாடிஃபை வாகனங்களை விரும்புபவர்கள் அதிக பேர் உள்ளனர். இதன் காரணமாக பலர் தங்களது வாகனங்களை மாடிஃபை செய்து இயக்கி வருவதை சாலையில் அதிகளவில் பார்க்க முடிகிறது.

என்னா ஸ்பீடு!! இந்தியாவின் முதல் மாடிஃபை 2020 ஹூண்டாய் ஐ20 கார் இதுதான்!

இவ்வாறான மாடிஃபை பணிகளுக்கு பெரும்பாலும் பழைய, விற்பனை நிறுத்தப்பட்ட வாகனங்கள் தான் உட்படுத்தப்படுகின்றன. ஆனால் சிலரோ அப்போதுதான் சந்தையில் புதியதாக அறிமுகமான கார்களை வாங்கி அப்போதே மாடிஃபை செய்துவிடுகின்றனர்.

என்னா ஸ்பீடு!! இந்தியாவின் முதல் மாடிஃபை 2020 ஹூண்டாய் ஐ20 கார் இதுதான்!

இதற்கு மற்றொரு உதாரணமாகவே இந்த செய்தியில் மாடிஃபை செய்யப்பட்ட 2020 ஹூண்டாய் ஐ20 காரை பார்க்க போகிறோம். இந்த மாடிஃபை ஹேட்ச்பேக் காரில் மிக முக்கிய அம்சமாக சந்தைக்கு பிறகான விக்டர் வீல்ஸ்-இன் 17 இன்ச் கஸ்டம் அலாய் ரிம்கள் பொருத்தப்பட்டுள்ளன.

என்னா ஸ்பீடு!! இந்தியாவின் முதல் மாடிஃபை 2020 ஹூண்டாய் ஐ20 கார் இதுதான்!

புதிய ஐ20-ல் இத்தகைய மாடிஃபை பணிகளை லூதியானாவை சேர்ந்த டயர்கள் மற்றும் ரிம்களுக்கு நிபுணத்துவம் பெற்ற கேபி டயர்கள் என்ற கஸ்டம் கார் கேரேஜ் மேற்கொண்டுள்ளது. சந்தைக்கு பிறகான இந்த மல்டி-ஸ்போக் சக்கரங்கள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளன.

என்னா ஸ்பீடு!! இந்தியாவின் முதல் மாடிஃபை 2020 ஹூண்டாய் ஐ20 கார் இதுதான்!

Image Courtesy: KB TYRES

உண்மையில் இவைதான் காருக்கு ஸ்போர்டியான தோற்றத்தை வழங்குகின்றன. மேலும் இதுதான் மாடிஃபை செய்யப்பட்ட முதல் மூன்றாம்-தலைமுறை ஐ20 காராகும். 2020 ஐ20 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற மூன்று விதமான என்ஜின் தேர்வுகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

என்னா ஸ்பீடு!! இந்தியாவின் முதல் மாடிஃபை 2020 ஹூண்டாய் ஐ20 கார் இதுதான்!

இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி என்ற கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படும் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 88 பிஎஸ் (மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் 83 பிஎஸ்) 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதுவே டர்போ-டீசல் மற்றும் டர்போ-பெட்ரோல் என்ஜின்கள் முறையே 100 பிஎஸ் & 240 என்எம் மற்றும் 120 பிஎஸ் & 172 என்எம் டார்க்திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளன.

என்னா ஸ்பீடு!! இந்தியாவின் முதல் மாடிஃபை 2020 ஹூண்டாய் ஐ20 கார் இதுதான்!

இவற்றில் டர்போ-டீசல் என்ஜின் உடன் ஒரே ஒரு 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மட்டும் வழங்கப்பட, டர்போ-பெட்ரோல் என்ஜினிற்கு 6-ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என்ற என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப் என இந்த ஹேட்ச்பேக் காரில் ப்ரீமியம் தரத்திலான வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

என்னா ஸ்பீடு!! இந்தியாவின் முதல் மாடிஃபை 2020 ஹூண்டாய் ஐ20 கார் இதுதான்!

ரூ.6.79 லட்சத்தில் இருந்து ரூ.11.32 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலைகளை கொண்டுள்ள புதிய தலைமுறை ஐ20 காருக்கு விற்பனையில் போட்டியாக மாருதி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்ஸா மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்கள் உள்ளன.

Most Read Articles

English summary
India’s First Modified New-Gen Hyundai i20 Gets 17-Inch Aftermarket Alloys
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X