இந்த கியா செல்டோஸ் தான் இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த செல்டோஸ் காராம்...!
கியா நிறுவனத்தின் ஒரே ஒரு இந்திய மாடலான செல்டோஸ் எஸ்யூவி மிகவும் உயர்ரக தரத்தில் மறு உருவாக்கம் (கஸ்டமைஸ்ட்) செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்சமயம் இந்தியாவில் உள்ள செல்டோஸ் மாடல்களையே மிகவும் சக்தி வாய்ந்த செல்டோஸ் கார் என்கிற பெருமையை இந்த கஸ்டமைஸ்ட் செல்டோஸ் மாடல் பெற்றுள்ளது.
தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் மிக விரைவாக வளர்ச்சி அடைவதற்கு முழு காரணம், இந்நிறுவனத்தின் முதல் இந்திய மாடலாக அறிமுகமான செல்டோஸ் மாடல் தான்.

எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட இந்த காருக்கு தற்சமயம் இந்திய சந்தையில் தேவை அதிகமாக உள்ளது. இதனால் கியா நிறுவனம் செல்டோஸ் மாடலுக்கு காத்திருப்பு காலத்தை அதிகமாக நிர்ணயித்துள்ளது.

இதற்கிடையில் செல்டோஸ் மாடலை வைத்திருக்கும் சில வாடிக்கையாளர்கள் தங்களது காரை வித்தியாசமான கலர் மற்றும் அப்டேட்டான தொழிற்நுட்பங்களுக்கு கஸ்டமைஸ்ட் செய்து வருகின்றன. மேலும் அத்தகைய செல்டோஸ் மாடலின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆட்டோபோட் என்ற ஹரியானாவை சேர்ந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர் ஒருவரின் கியா செல்டோஸ் மாடலை உயர்ரக தரத்திற்கு இணையாக மறு உருவாக்கம் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ள கார், கியா செல்டோஸின் 1.4 லிட்டர் டர்போ ஜிடி லைன் வேரியண்ட்டாகும்.

வெளியிடப்பட்டுள்ள இதன் புகைப்படங்களின் மூலம் இந்த காரில், 3 மீட்டர் கருப்பு ரோஸ் வ்ராப், 255/40 அளவில் பைரெல்லி பி ஜீரோ நீரோ டயர்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்டியான 19 இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை கஸ்டமைஸ்ட் மாற்றங்களாக வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

இவற்றை தவிர இந்த காரின் முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. பின்புறத்தில் மிகவும் கவனிக்கத்தக்க மாற்றமாக எலக்ட்ரிக் டெயில் கேட்டை இந்த கஸ்டமைஸ்ட் செல்டோஸ் மாடல் பெற்றுள்ளது.

முழுவதும் கருப்பு நிற பெயிண்ட் அமைப்பை பெற்றுள்ள இந்த காரின் பின்புற பம்பரும் எதிரொலிக்கும் எல்இடி லைட்டை பெற்றுள்ளது. வெளிபுறத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாம் சிறிய அளவு தான். ஏனெனில் இந்த கஸ்டமைஸ்ட்டின் முதன்மை நோக்கமே காரை அதிக எரிபொருள் திறன் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என்பது தான்.

இதனால் இந்த காரின் இசியூ இங்கிலாந்தில் உள்ள பிரபலமான குவாண்டம் ட்யூனிங்க்ஸ் சர்வீஸ் செண்டரின் உதவியின் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் கே&என் பர்ஃபார்மன்ஸ் ஃபில்டர் மற்றும் ரெமுஸ் வால்வ்ட்ரோனிக் எக்ஸாஸ்ட் போன்ற நவீன தொழிற்நுட்பங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

உட்புறத்தில் இந்த காரின் கேபின் முழுவதும் கார்பன் ஃபைபர் துணியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தான் இந்த கார் உயர்ரக தோற்றத்தில் ஜொலிக்க முக்கிய காரணமாக உள்ளது. கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ள இந்த செல்டோஸ் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் விற்பனை மாடலில் அதிகப்பட்சமாக 140 பிஎச்பி பவரையும் 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. ஆனால் இந்த கஸ்டமைஸ்ட் காரின் இசியூ மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், இந்த பெட்ரோல் என்ஜின் 170 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் அளவிற்கு அப்டேட்டாகியுள்ளது.

இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், 7-ஸ்பீடு இரட்டை ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் கொடுக்கப்படுகிறது. மேலும் இரு என்ஜின் தேர்வுகளிலும் கியா செல்டோஸ் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் ஒன்றாக உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகப்பட்சமாக 114 பிஎச்பி, 142 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது. இந்த என்ஜின் தேர்வுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மற்றொரு என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 115 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் யூனிட்டுடன் வெளிப்படுத்துகிறது.

இந்திய சந்தையில் சிறந்த விற்பனை எஸ்யூவி மாடலாக உள்ள செல்டோஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் எஸ்யூவி கார்களின் விற்பனையில் முதலிடத்தை பிடித்திருந்தது. மார்க்கெட்டில் இந்த காருக்கு கடுமையான விற்பனை போட்டியினை ஹூண்டாய் க்ரெட்டா மாடல் கொடுத்து வருகிறது.
Image Courtesy: Autobotsindia/Instagram


Click it and Unblock the Notifications








