விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த புள்ளிங்கோ இளைஞர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக திருப்பூர் மாநகர காவலர்கள், விநோதமான தண்டனையை வழங்கியுள்ளனர். அதாவது, கொரோனா நோயாளியுடன் ஒரு மணி நேரம் என்ற புதிய கான்செப்டில் தண்டித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

இந்த வீடியோவ பார்த்துவிட்டு சிரிக்காம இருக்கவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் (டா), என்று தைரியமாக கூறுமளவிற்கு மிக வித்தியாசமான சம்பவத்தை திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் செய்திருக்கின்றனர். உயிர் கொல்லி கொரோனா வைரஸ்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விநோதமான முயற்சியை அவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கின்றது. இதன் வீரியத்தைப் பற்றி உணராத பொதுமக்கள் பலர் தற்போதும் வெளியில் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

இதுபோன்று ஜாலியாக வெளியில் சுற்றி திரிந்ததன் காரணத்தினாலயே இத்தாலி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மரண ஓலங்கள் ஓயாமல் ஒலித்த வண்ணம் இருக்கின்றது. இம்மாதிரியான நிலை இந்தியாவிற்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது மத்திய மற்றும் மாநில அரசுகள்.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

குறிப்பாக, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக தேசியளவிலான ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. ஏறத்தாழ இந்த உத்தரவு ஒரு மாதங்களுக்கும் அதிகமாக நீடித்து வருகின்றது. இதுவரை உலக மக்கள் யாரும் வரலாற்றில்கூட படித்திராத அளவிலான ஊரடங்காக இது கருதப்பட்டு வருகின்றது.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

ஏனென்றால், ஏதோ ஓர் தேசத்தின் ஏதோ ஒரு மூலையில் மட்டும் இந்நிலை காணப்படவில்லை. உலகம் தழுவிய அளவில் இந்த நிலையேக் காணப்படுகின்றது.

காரணம், கொரோனா வைரஸ் தொற்றின் பின்விளைவுகள் நாம் எதிர்பாராத அளவிற்கு மிக கொடூரமானதாக இருப்பதுதான்.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

இருப்பினும், பலர் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், இந்த வைரஸ் நம்மை என்ன செய்துவிடப்போகின்றது என்ற அலட்சியப் போக்கின் காரணமாகவும் ஜாலியாக ஊரை வலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இத்தகையோருக்கு பாடம் புகட்டும் விதமாகவே திருப்பூர் போலீஸார் தரமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர்.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

அதுதான், உத்தரவை மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு மணி நேரம் என்கிற கான்செப்ட்.

வாருங்கள் அப்படி என்னதான் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட போலீஸார் மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை வீடியோ வாயிலாகவே கீழே பார்த்துவிடலாம். ப்ளீஸ் கொஞ்சம் சிரிக்காம மட்டும் பாருங்க...

என்னங்க... இவ்ளோ சொல்லியும் இப்படி சிரிச்சுட்டு இருக்கீங்க. இந்தளவிற்கு காமெடியா இருந்தா யார்தான் சிரிக்காம இருப்பா... தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோ இதற்கு முன்பு வெளியாகிய ட்ரோன் கேமிரா வீடியோக் காட்சிகளைக் காட்டிலும் மரண காமெடியாக இருக்கின்றது.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

குறிப்பாக, இளைஞர்கள் மூவரும் ஆம்புலன்சிற்குள் படுத்திருக்கும் நபரைப் பார்த்து, ஜன்னல் வழியெல்லாம் எகிறி குதிக்க முற்படுவது, நம்மை வயிறு குலுங்க (வலிக்க) சிரிக்க வைக்கின்றது.

முக மூடி அணியாமல் சாலையில் சென்றால் எத்தகைய விபரீதம் ஏற்படும் என்பதை விளக்குவதற்காகவே போலியான கொரோனா நோயாளியை வைத்து போலீஸார், இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றனர். உண்மையில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நாம் இங்கு வேண்டும்.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

வீடியோவில், உயிருக்கு பயந்து இளைஞர்கள் அய்யோ... அம்மா... என கத்தும்போது நாம் சிரித்திருப்போம். ஆனால், உண்மையில் இந்த வைரஸ் நம்மை தொற்றினால் இதைவிட மோசமாக கதற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதனை உணர்த்துவதற்காகவே புது ட்ரிக்கை காவல்துறையினர் பயன்படுத்தியிருக்கின்றனர். நிச்சயம் அந்த இளைஞர்களுக்கு மரண பயம் என்றால் என்னவென்பது இப்போது தெரிந்திருக்கும்.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

ஆரம்பத்தில் ஒற்றை இலக்கில் மட்டுமே காணப்பட்ட வைரஸ் தொற்று தற்போது ஆயிரக் கணக்கிற்கு பரந்து விரிந்து காணப்படுகின்றது. குறிப்பாக சமீபகாலமாக இதன் தீவிரம் பல மடங்கு வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால், கடைநிலை இடத்தில் இருந்த தமிழகம் தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றது.

விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

இதனை இப்போதே கட்டுப்படுத்தவில்லை என்றால் எத்தகைய மோசமான நிலைமைக்குள் நாம் தள்ளப்போடுவோம் என்பது யாரும் அறியாத ஒன்று. ஆகையால், வெளியே வருவதற்கு முன்னர் நம்மை பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு தற்காத்தவாறு வருவது மிகச் சிறந்தது. மேலும், தேவையற்ற காரணங்களுக்கு வெளியே வருவது தவிர்த்தால், தற்போது சம்பவங்களைப் போன்ற நிகழ்வுகளில் இருந்து காத்துக் கொள்ளவும் உதவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tiruppur Police New Awareness Concept For Coronavirus. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X