கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

கொரோனா தடுப்பு பணிகளுக்கான முயற்சிகளில் டொயோட்டா கார் நிறுவனமும் தீவிரமாக களமிறங்கி உள்ளது.

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கொரோனா தடுப்புப் பணிகளுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

இந்த நிலையில், கொரோனோ தடுப்புப் பணிகள் ஒருபுறம் இருந்தாலும், பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலான பணியாக உள்ளது. இதில், தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது, போர் களத்திற்கு செல்லும் வீரனை போல, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் செயலாற்றி வருகின்றனர்.

MOST READ: அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

இந்த நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது.

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

இதற்காக, அதிக அளவில் விசேஷமான முக கவசங்கள் மற்றும் உடைகள் தேவைப்படுகின்றன. தேவை மிக அதிகமாக இருக்கும் நிலையில், போர்க்கால அடிப்படையில் இந்த தேவையை நிறைவு செய்வதற்கு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்து இருக்கின்றன.

MOST READ: ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க...

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

இதனை மனதில் வைத்து மஹிந்திரா, மாருதி சுஸுகி உள்ளிட்ட பல்வேறு கார் நிறுவனங்களும் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவி மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான முக கவசங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

அந்த வகையில், தற்போது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும் இணைந்துள்ளது. அந்நிறுவனத்தின் உதிரிபாக சப்ளையரான ஸ்டம்ப் செய்லி அண்ட் சோமப்பா ஸ்பிரிங்க்ஸ் நிறுவனத்தின் மூலமாக முக கவசங்களை தயாரிக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

MOST READ: பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்வதற்கு காலக்கெடு மீண்டும் நீட்டிக்க வாய்ப்பு!

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

ஆரம்ப கட்டமாக நாள் ஒன்றுக்கு 275 முக கவசங்களை தயாரித்த இந்த நிறுவனம் தற்போது நாள் ஒன்றுக்கு 5,500 முக கவசங்களை தயாரித்து வருகிறது. இதனை நாள் ஒன்றுக்கு 10,000 யூனிட்டுகள் என்ற அளவில் உயர்த்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

ஆலைக்கு தொழிலாளர்கள் வருவதற்கான போக்குவரத்து, முக கவசத்தின் டிசைனில் செய்ய வேண்டியிருக்கும் மாறுதல்கள், சப்ளையர்களின் பிரச்னைகளை சரிசெய்து தருவதாகவும், விரைவில் 10,000 இலக்கை எட்டி முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

MOST READ: ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

இதுகுறித்து ஸ்டம்ப் செயுலி அண்ட் சோமப்பா ஸ்பிரிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஸ் மசானி கூறுகையில்," இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களால் முடிந்த உதவிகளையும், ஒத்துழைப்பையும் அரசுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி.

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

முக கவசங்கள் தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் போதிய ஒத்துழைப்பை டொயோட்டா நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால், எங்களது தயாரிப்பு முறை மிக எளிதாகி இருக்கிறது," என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

MOST READ: எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

இதனிடையே, கொரோனா தடுப்புப் பணிகளுக்கான கர்நாடக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடைக்கான காசோலையை டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவிடம் நேரில் வழங்கி இருக்கிறது.

 கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!

இதுதவிர்த்து, அரசு சார்பில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு பயன்படும் வகையில், 3,000 கொரோனா தடுப்பு கவச உடைகளையும், தினசரி பணியாளர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி உள்ளது. தனது 14 பஸ்களையும் சுகாதாரப் பணியாளர்கள் போக்குவரத்திற்காக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
TKM supplier partner has started face shields for public health workforce and planning to reach 10,000 units per day.
Story first published: Wednesday, April 15, 2020, 16:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X