அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்...

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்...

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார்களுக்கு என எப்போதுமே ஒரு தனி மவுசு உள்ளது. இதனை இந்தியாவில் வேறு எந்த நிறுவனத்தை காட்டிலும், மாருதி சுஸுகிதான் நன்றாக பயன்படுத்தி கொண்டு, சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதமும் அதற்கு விதிவிலக்கு கிடையாது.

அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்...

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 24,589 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 19,401 ஆக மட்டுமே இருந்தது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்...

இது 27 சதவீத வளர்ச்சியாகும். அக்டோபருக்கு முந்தைய செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டாலும், ஸ்விஃப்ட் காம்பேக்ட் ஹேட்ச்பேக் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 22,643 ஸ்விஃப்ட் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், அதன்பின் வந்த அக்டோபரில் இந்த எண்ணிக்கை 24,589 ஆக உயர்ந்துள்ளது.

அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்...

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் நெக்ஸா பிரீமியம் டீலர்ஷிப்களில் இருந்து அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையும் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கிற்கு உள்ளது. ஹார்ட்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 5 சீட்டர் கார், கடந்த அக்டோபர் மாதம் 21,971 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்...

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 16,237 ஆக மட்டுமே இருந்தது. இது 35 சதவீத வளர்ச்சியாகும். அதே சமயம் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால் அக்டோபரில் மாருதி சுஸுகி பலேனோ கார்களின் விற்பனை 13 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி வேகன்ஆர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்...

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 18,703 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. 2019ம் ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் இது 30 சதவீத வளர்ச்சியாகும். நடப்பாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை மாருதி சுஸுகி ஆல்டோ பிடித்துள்ளது.

அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்...

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரான ஆல்டோ நடப்பாண்டு அக்டோபர் மாதம் 17,850 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 17,903 ஆக இருந்தது. ஆல்டோ விற்பனையில் பெரிய வளர்ச்சியோ, வீழ்ச்சியோ இல்லை.

அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்...

இந்த பட்டியலில் 5வது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரும் (14,003 யூனிட்கள் விற்பனை), 6வது இடத்தை மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரும் (10,612 யூனிட்கள் விற்பனை) பிடித்துள்ளன. அதே சமயம் 8,399 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் 7வது இடத்தை ஹூண்டாய் எலைட் ஐ20 காரும், 7,574 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் 8வது இடத்தை மாருதி சுஸுகி செலிரியோவும் பிடித்துள்ளன.

அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்... மாருதி சுஸுகி ஆதிக்கம்...

9வது இடத்தை டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் டாடா நிறுவனம் 6,730 அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்துள்ளது. 10வது மற்றும் கடைசி இடத்தை அதே டாடா நிறுவனத்தின் டியாயோ பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 6,003 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Top 10 Most Sold Hatchback Cars In October 2020. Read in Tamil
Story first published: Wednesday, November 11, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X