பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

பாதுகாப்பான கார்களின் டாப்-10 பட்டியலில், இந்திய நிறுவனங்களின் 7 கார்கள் இடம்பெற்றிருப்பது இந்தியர்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். கார்கள் பாதுகாப்பானவையாக இருந்தால், இந்த எண்ணிக்கை வெகுவாக குறையும்.

பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

ஆனால் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலைமை அப்படி இருக்கவில்லை. பாதுகாப்பு வசதிகளை, சொகுசு வசதிகளுக்கு இணையாக கருதிய நிலைமைதான் இங்கு இருந்து வந்தது. அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கூட சொகுசு கார்கள் மற்றும் ஒரு காரின் விலை உயர்ந்த வேரியண்ட்களில் மட்டும்தான் வழங்கப்பட்டு வந்தன.

பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

ஆனால் குளோபல் என்சிஏபி அமைப்பின், 'இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்கள்' பிரச்சாரம் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கிய பின்னர் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. கார்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க தொடங்கின.

பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

இதன் விளைவாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு தரம் தற்போது வெகுவாக மேம்பட்டுள்ளது. முன்பெல்லாம் புதிய கார் வாங்கும்போது எரிபொருள் சிக்கனம், விலை ஆகியவற்றுக்கு மட்டும்தான் வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் தற்போது பாதுகாப்பு வசதிகள் என்னென்ன உள்ளது? என்பதையும் பார்க்க தொடங்கியுள்ளனர்.

பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு மேம்பட்டிருப்பதற்கு, குளோபல் என்சிஏபி அமைப்பிற்கு நாம் கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும். குளோபல் என்சிஏபி அமைப்பு சோதனை செய்த 38 கார்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மற்றும் குறிப்பிட்ட காலத்தில் விற்பனையில் இருந்த கார்கள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் கார்களில், 7 கார்கள் இந்திய நிறுவனங்களுடையது என்பது இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். முதல் இடத்தை மஹிந்திரா நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 கார், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது.

பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

இதன்மூலம் இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையை மஹிந்திரா எக்ஸ்யூவி300 பெறுகிறது. 2வது, 3வது, 4வது மற்றும் 5வது இடங்களை டாடா மொத்தமாக தட்டிச்சென்றுள்ளது. 2வது இடத்தை டாடா அல்ட்ராஸ் காரும், 3வது இடத்தை டாடா நெக்ஸான் காரும் (2019ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்டது) பிடித்துள்ளன.

பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

நான்காவது இடமும் டாடா நெக்ஸான் காருக்குதான் கிடைத்துள்ளது. இது 2019ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதிக்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட கார் ஆகும். 5வது இடத்தை டியாகோ/டிகோர் கார்கள் பிடித்துள்ளன. டாடா நெக்ஸான் இரு முறை வருவது ஏன்? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். முதலில் சோதனை செய்தபோது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களை மட்டுமே டாடா நெக்ஸான் பெற்றது.

பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

ஆனால் டாடா நிறுவனத்திற்கு இது திருப்தியை அளிக்கவில்லை. எனவே நெக்ஸான் காரின் பாதுகாப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் டாடா நிறுவனம் ஒரு சில மாற்றங்களை செய்து மீண்டும் சோதனைக்கு அனுப்பியது. இரண்டாவது முறை சோதனை செய்தபோது, டாடா நெக்ஸான் 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தி விட்டது.

பாதுகாப்பான கார்களின் பட்டியல்... 10ல் 7 இந்திய நிறுவனங்களுடையது... கெத்து காட்டிய டாடா, மஹிந்திரா

டாடா அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகிய இரண்டு கார்களுமே பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் முறையே 5 நட்சத்திரங்களையும், 3 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளன. 6வது, 7வது, 8வது, 9வது மற்றும் 10வது இடங்களை முறையே ஃபோக்ஸ்வேகன் போலோ, மஹிந்திரா மராஸ்ஸோ, டொயோட்டா எட்டியோஸ், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா ஜெஸ்ட் ஆகிய கார்கள் பிடித்துள்ளன.

Most Read Articles

English summary
Top 10 Safest Cars In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X