அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப்-10 செடான்கள்... எந்த காரை பலர் விரும்பி வாங்குகிறார்கள் தெரியுமா?

கடந்த அக்டோபர் மாதம், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப்-10 செடான்கள்... எந்த காரை பலர் விரும்பி வாங்குகிறார்கள் தெரியுமா?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி டிசையர் காம்பேக்ட் செடான் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான செடான் இதுதான். மாருதி சுஸுகி நிறுவனம் மொத்தம் 17,675 டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளது.

அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப்-10 செடான்கள்... எந்த காரை பலர் விரும்பி வாங்குகிறார்கள் தெரியுமா?

இரண்டாவது இடம் பிடித்த ஹூண்டாய் அவ்ராவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையில் மாருதி சுஸுகி டிசையர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் 5,677 அவ்ரா கார்களை விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் அவ்ரா உள்நாட்டு சந்தையில் கடந்த ஜனவரி மாதம் நுழைந்தது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப்-10 செடான்கள்... எந்த காரை பலர் விரும்பி வாங்குகிறார்கள் தெரியுமா?

அப்போது முதல் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. மூன்றாவது இடத்தை ஹோண்டா அமேஸ் பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் கடந்த மாதம் 4,708 அமேஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. நான்காவது இடத்தையும் ஹோண்டா நிறுவனமே பிடித்துள்ளது. இந்த இடத்தை தன்வசப்படுத்தியிருப்பது ஹோண்டா சிட்டி ஆகும்.

அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப்-10 செடான்கள்... எந்த காரை பலர் விரும்பி வாங்குகிறார்கள் தெரியுமா?

கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 4,124 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா நிறுவனம் சிறப்பான விற்பனை எண்ணிக்கைக்கு அமேஸ் மற்றும் சிட்டி கார்களை அதிகம் சார்ந்துள்ளது. இந்த பட்டியலில் 5வது இடத்தை ஹூண்டாய் வெர்னா பிடித்துள்ளது. கடந்த மாதம் ஹூண்டாய் நிறுவனம் 2,166 வெர்னா கார்களை விற்பனை செய்துள்ளது.

அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப்-10 செடான்கள்... எந்த காரை பலர் விரும்பி வாங்குகிறார்கள் தெரியுமா?

6வது இடத்தை டாடா நிறுவனத்தின் டிகோர் பிடித்துள்ளது. டாடா நிறுவனம் கடந்த மாதம் 1,501 டிகோர் கார்களை விற்பனை செய்துள்ளது. சப்-4 மீட்டர் செடான் காரான டாடா டிகோர், மாருதி சுஸுகி சியாஸை விட அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. ஆனால் சியாஸ் சற்றே பிரீமியமான செக்மெண்ட்டை சேர்ந்தது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப்-10 செடான்கள்... எந்த காரை பலர் விரும்பி வாங்குகிறார்கள் தெரியுமா?

ஏழாவது இடத்தை மாருதி சுஸுகி சியாஸ் பிடித்துள்ளது. கடந்த மாதம் மொத்தம் 1,422 சியாஸ் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எட்டாவது இடத்தை ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் பிடித்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 1,024 ரேபிட் கார்களை விற்பனை செய்துள்ளது.

அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப்-10 செடான்கள்... எந்த காரை பலர் விரும்பி வாங்குகிறார்கள் தெரியுமா?

9வது இடத்தை ஃபோர்டு அஸ்பயர் காரும் (446 யூனிட்கள்), 10வது மற்றும் கடைசி இடத்தை டொயோட்டா யாரிஸ் (373 யூனிட்கள்) காரும் பிடித்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் வீழ்ச்சியடைந்திருந்த கார் விற்பனை தற்போதுதான் சரிவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கு தீபாவளி பண்டிகை காலம் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப்-10 செடான்கள்... எந்த காரை பலர் விரும்பி வாங்குகிறார்கள் தெரியுமா?

இதுதவிர கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை மக்கள் தவிர்க்க தொடங்கியிருப்பதும் கார்களின் விற்பனை அதிகரிப்பிற்கு மற்றொரு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. ஆனால் செடான் ரக கார்களின் விற்பனை ஓரளவிற்குதான் உள்ளது.

Most Read Articles

English summary
Top 10 Sedans Sold In October 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X