2011-20 வருடங்களில் இந்தியாவில் இருந்து விடை பெற்ற டாப்10 கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

2011 தொடங்கி 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்திய வாகன சந்தையை விட்டு வெளியேறிய கார்கள் என்னென்ன என்பதை சிறப்பு தொகுப்பாக வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

இந்தியா ஓர் மிகப்பெரிய வாகனச் சந்தை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இங்கு விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களும் மக்கள் மனதைக் கவர்ந்துவிடுவதில்லை. அந்தவகையில், இந்தியர்கள் மனதைக் கவர தவறி நாட்டை விட்டு வெளியேறிய கார்கள் பல இருக்கின்றன.

2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

இதில், ஒரு தசாப்தம் எனப்படும் பத்தாண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறிய கார்களைப் பற்றிய தகவலைதான் நாம் இப்போது இப்பதிவில் பார்க்கவிருக்கின்றோம். அதாவது, 2011ம் ஆண்டு தொடங்கி நடப்பு 2020ம் ஆண்டு (இன்று) வரை இந்திய வாகன சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள் என்னென்ன என்பதையே காணவிருக்கின்றோம்.

2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

குறிப்பாக, அவை எப்போது விற்பனைக்கு வந்தன. எப்போது வெளியேறின என்பது பற்றிய முக்கிய தகவலையே இப்பதிவில் பட்டியலாக காணவிருக்கின்றோம். 2020ம் ஆண்டின் இறுதியை முன்னிட்டு இச்சிறப்பு தகவலை இங்கு வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

ஒட்டுமொத்தமாக 20 கார்கள் 2011 தொடங்கி 2020 ஆண்டுகளுக்குள் வெளியற்றப்பட்டிருக்கின்றன. இதில், அதிகபட்சமாக 2020ம் ஆண்டில் 6 கார்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 இந்த வருடத்தில்தான் நடைமுறைக்கு வந்தது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் அதிகம் விற்பனையாகும் கார்களைக் கூட வெளியேற்றின.

2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

அந்தவகையில் மாருதி சுசுகி நிறுவனம் நான்கு கார்களையும், ஹோண்டா நிறுவனம் ஆறு கார்களையும், டாடா நிறுவனம் நான்கு கார்களையும், நிஸான் மற்றும் ஃபியாட் தலா இரு கார்களையும், செவ்ரோலே மற்றும் ஃபோர்டு ஆகிய இரு நிறுவனங்களும் தலா ஒரு கார்களையும் இந்திய வாகன சந்தையை விட்டு தங்களின் பிரபல கார்களை வெளியேற்றியிருக்கின்றன.

2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

இதில், சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ 800 காரும், டாடா நிறுவனத்தின் நானோ, இன்டிகா மற்றும் இன்டிகோ ஆகிய கார்கள் வெளியேற்றப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த கார்கள் கடந்த காலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையான கார்களாகும். குறிப்பாக, சுசுகி வெளியேற்றிய 800 இந்தியர்களின் விருப்பமான கார் என்றே கூறலாம்.

2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

இதனை புதிய விதிகளின் காரணமாக சுசுகி வெளியேற்றிய பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இக்காரை 1983 ஆண்டில் இருந்து நிறுவனம் விற்பனைச் செய்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இதற்கே 2014ம் ஆண்டு முற்று புள்ளியை வைத்தது. இந்த வருடத்திலேயே இக்கார் கடைசியாக விற்கப்பட்டது. இதையடுத்து மிக பழமையான கார் என்றால் டாடாவின் இன்டிகாவே இருக்கின்றது.

2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

இக்கார், 1999ம் ஆண்டிலேயே முதல் முறையாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. இக்காரின் விற்பனை 2018 ஏப்ரல் மாதத்தில் முடக்கப்பட்டது. இது கால் டாக்சி மற்றும் சில தனியாரின் கைகளில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்தியர்களின் மிகவும் விருப்பமான கார் என்றால் இதுவும் ஒன்று.

2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

இதுபோன்ற பல்வேறு சிறப்புமிக்க கார்களை இந்த தசாப்தத்தில் இந்தியா இழந்துள்ளது. அவற்றைப் பற்றிய தகவலை முழு விபரமாக பட்டியலில் காணலாம்.

2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

பட்டியல்:

எண் கார் அறிமுகமான வருடம் வெளியேற்றப்பட்ட ஆண்டு மற்றும் மாதம்
1 மாருதி ஏ-ஸ்டார் டிசம்பர் 2008 பிப்ரவரி 2014
2 மாருதி ஜென் எஸ்டிலோ டிசம்பர் 2006 பிப்ரவரி 2014
3 மாருதி 800 டிசம்பர் 1983 ஜனவரி 2014
4 மாருதி SX4 மே 2007 ஏப்ரல் 2014
5 ஹோண்டா பிரியோ செப்டம்பர் 2011 பிப்ரவரி 2019
6 ஹோண்டா அக்கார்ட் ஜூலை 2001 ஏப்ரல் 2020
7 ஹோண்டா பிஆர்-வி மே 2016 ஏப்ரல் 2020
8 ஹோண்டா மொபிலியோ ஜூலை 2014 மார்ச் 2017
9 ஹோண்டா சிவிக் ஜூலை 2006 (8th Gen) / மார்ச் 2019 (10th Gen) ஆகஸ்ட் 2012 (8th Gen) / டிசம்பர் 2020 (10th Gen)
10 ஹோண்டா சிஆர்-வி நவம்பர் 2004 டிசம்பர் 2020
11 நிஸான் சன்னி செப்டம்பர் 2011 ஏப்ரல் 2020
12 நிஸான் மைக்ரா ஜூலை 2010 ஏப்ரல் 2020
13 டாடா நானோ மார்ச் 2008 பிப்ரவரி 2019
14 டாடா இன்டிகா ஜனவரி 1999 ஏப்ரல் 2018
15 டாடா இன்டிகோ ஜனவரி 2003 ஏப்ரல் 2018
16 டாடா ஜெஸ்ட் ஆகஸ்ட் 2014 ஏப்ரல் 2019
17 ஃபோர்டு ஃபிய்டா அக்டோபர் 2005 செப்டம்பர் 2015
18 செவ்ரோலே பீட் ஜனவரி 2010 டிசம்பர் 2017
19 ஃபியட் புன்டோ ஜூன் 2009 ஏப்ரல் 2020
20 ஃபியட் லினியா ஜனவரி 2009 ஏப்ரல் 2020
2011-20 வரை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்கள்... அட இந்த கார எப்போங்க வெளியேத்தினாங்க!!

ஒட்டுமொத்தமாக 2011 முதல் 2020 வரை 20 கார்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் இந்தியர்களின் விருப்பமான காராக இருந்து வெளியேறியவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Top 20 Cars Evicted Between 2011 & 2020. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X