ஷாக் வைத்தியம் அளிக்கும் அம்பானியின் புது முக கார்கள்... ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை...

சமீபத்தியில் அம்பானி குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக களமிறக்கப்பட்ட விலையுயர்ந்த ஆடம்பர கார்களின் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணாலம்.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

ஆசிய கண்டத்தில் இருக்கும் மிக முக்கியமான பணக்காரர்களில் முகேஷ் அம்பானியும் ஒருவர். பகட்டான வாழ்க்கைக்கு பெயர்போனவர். இதற்கு அவரின் இல்லமும், அதில் உள்ள கார்களுமே முக்கிய சான்றாக இருக்கின்றன.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

இந்தியாவில் இருக்கும் வீடுகளிலேயே அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட வீடுகளில் இதுவும் ஒன்று. இந்த இல்லத்தில் கார்களை நிறுத்துவற்கென தனி தளமே நிறுவப்பட்டு இருக்கின்றது. ஏன், இதன் மேல் தளத்தில் ஹெலிகாப்டரைகூட தரையிறக்குவதற்கான வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

முகேஷ் அம்பானியிடம் இருக்கும் அனைத்து கார்களுமே அவரின் இல்லத்திற்கு இணையான சொகுசு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி, அந்த கார்கள் அதீத பாதுகாப்பு திறன் கொண்டவையாகவும் காட்சியளிக்கின்றன.

அதிலும், அண்மையில் இணைக்கப்பட்ட ஒரு சில கார்கள் துப்பாக்கியின் குண்டு மழையைகூட அசால்ட் செய்கின்ற அளவிற்கு அதீத திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

அந்தவகையில், அண்மையில் முகேஷ் அம்பானியின் கராஜில் அவருடைய குடும்பத்தினருக்காக இணைக்கப்பட்ட விலையுயர்ந்த மற்றும் சொகுசு கார்களின் புதிய வரவாக இருக்கும் ஐந்து கார்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் நாம காணலாம்.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

பென்ட்லீ பென்டேகா வி

பென்ட்லீ நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்ட இரண்டாவது மாடலாக பென்ட்லீ பென்டேகா கார் இருக்கின்றது. முகேஷ் அம்பானியின் கராஜில் காணப்படும் விலைகுறைந்த கார்களில் இதுவும் ஒன்று. ரூ. 4 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது உங்க ஊர்ல விலை குறைந்த மாடலா..? என்று கேட்கத் தோன்றலாம். அம்பானி குடும்பத்தினரின் காட்சியளிக்கும் மற்ற கார்கள் அனைத்தும் இதைவிட அதிக விலைக் கொண்டதாக உள்ளது.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

இந்த சொகுசு நிறைந்த எஸ்யூவி காரை அம்பானியின் மகன் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. அதை உறுதி செய்யும் வகையிலேயே பல முறை அந்த காரில் அவர் வலம் வருவதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இந்த காரில் சூரிய ஒளிக்கு ஏற்ப நிறத்தை மாற்றி தோற்றுவிக்கும் திறன் கொண்ட psychedelic wrap செய்யப்பட்டுள்ளது.

இந்த காரில் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 542 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII இடபிள்யூபி

முகேஷ் அம்பானி குடும்பத்தினர் கடந்த ஆண்டே இந்த காரை டெலிவரி பெற்றனர். இதுவே, ரோல்ஸ் ராய்ஸ் வரிசையில் காணப்படும் விலையுயர்ந்த கார்களில் ஒன்றாக இருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII இடபிள்யூபி காரின் ஆரம்பநிலை காருக்கே ரூ. 13.5 கோடி என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது ஆன் ரோடில் இதைவிடவும் அதிகமான விலையைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி12 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 563 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு சேடல்லைட் அட்டாச்ட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தில் இயங்குகின்றது. இது 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 5.4 நொடிகளில் தொட்டுவிட உதவுகின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்

அம்பானி குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக இணைக்கப்பட்டுள்ள கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினனும் ஒன்று. இந்த கார் தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து எஸ்யூவி கார்களைக் காட்டிலும் அதிக விலைக் கொண்ட காராக உள்ளது. இதுமட்டுமின்றி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வரும் முதல் எஸ்யூவி ரக கார் என்ற சிறப்பை இந்த கல்லினன் பெற்றிருக்கின்றது.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

இந்த காரில் 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 563 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

இந்த காரை அவ்வப்போது அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி பயன்படுத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. அண்மையில்கூட இந்த காருடன் அவர் சாலையில் வலம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63

அம்பானியின் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக இணைக்கப்பட்ட புதிய வாகனங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜி63 காரும் ஒன்றாக இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 2.2 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், ஆன்ரோடில் பல்வேறு வரிகள் விதிகப்பட்டு ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையை பெற்றுவிடுகின்றது.

ஆஃப்ரோடர் பயன்பாட்டிற்கான சிறப்பம்சங்களுடன் விற்பனைக் கிடைக்கும் இந்த கார் பல்வேறு சொகுசு வசதிகளையும் உள்ளடக்கியதாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, பானட் மவுண்ட் ஸ்பேர் வீல் மற்றும் பான்னட் மவுண்டட் இன்டிகேட்டர்கள் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 காருக்கு பிரம்மிப்பான தோற்றத்தை வழங்குகின்றது.

இந்த காரில் 4.0 லிட்டர் பிஐ-டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 585 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

டெஸ்லா மாடல் எஸ் 100டி

டெஸ்லா நிறுவனத்தின் இந்த காரை தற்போது இந்தியாவில் இரண்டே நபர்கள் மட்டுமே பன்படுத்தி வருகின்றனர். அதில், அம்பானி குடும்பத்தினரும் ஒருவர்.

டெஸ்லா நிறுவனத்தின் எந்தவொரு காரும் இன்னும் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்படவில்லை. ஆகையால், அம்பானியின் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக இது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இந்த காரை அவர் வேறொருவரின் பெயரில் களமிறக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை... அம்பானி குடும்பத்தினர் களமிறக்கிய புது முக கார்கள்... டெஸ்லா முதல் ஜே வேகன் வரை...

டெஸ்லாவின் அதீத திறன் கொண்ட கார்களில் மாடல் எஸ் 100டி காரும் ஒன்று. இதில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் 423 பிஎஸ் பவரையும், 660 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்த கார் 0 த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 4.3 நொடிகளிலேயே தொட்டுவிடும். அதேபோன்று, இந்த கார் உச்சபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 495 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

Article Published On: Monday, February 17, 2020, 12:35 [IST]
English summary
Top 5 Ambani Latest Luxury Cars. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+