Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 3 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் இவைதான்... முதல் இடம் யாருக்கு தெரியுமா?
இந்தியாவில் இருந்து கடந்த ஜூலை மாதம் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-5 கார்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து கடந்த ஜூலை மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஜூலை மாதம் 46 வெவ்வேறு கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த கார்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக கடந்த ஜூலை மாதமும் கார் ஏற்றுமதி மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பெரும்பாலான கார்கள், 2019 ஜூலையுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளன. இந்த பட்டியலில் உள்ள 46 கார்களில், சுமார் 70 சதவீத கார்கள் ஏற்றுமதியில் சரிவை சந்தித்துள்ளன. அதுவும் இரட்டை இலக்கத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக கடந்த ஜூலை மாதம் 34,183 கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 60,854ஆக இருந்தது. இது 43.83 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சரிபாதியாக குறைந்துள்ளது.

இந்த பட்டியலில் ஃபோர்டு நிறுவனத்தின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரான ஈக்கோஸ்போர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் இருந்து மொத்தம் 5,767 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3,616 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.

இது 59.49 சதவீத வளர்ச்சியாகும். ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இந்தியாவிலும் கூட மிகவும் பிரபலமாக உள்ள கார்தான். என்றாலும் அதன் போட்டியாளர்களான மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் மற்றும் எக்ஸ்யூவி300 ஆகிய கார்களுடன் ஒப்பிடும்போது, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கொஞ்சம் பின்தங்கியே உள்ளது.

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களின் எண்ணிக்கை 2,438 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது ஃபோக்ஸ்வேகன் வெண்டோ. மொத்தம் 5,455 வெண்டோ கார்களை கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் இருந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 4,612ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ கார் ஏற்றுமதியில் 18.28 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உள்நாட்டு சந்தையுடன் ஒப்பிடும்போது சர்வதேச சந்தைகளில் தேவை அதிகரித்துள்ள கார்களில் ஃபோக்ஸ்வேகன் வெண்டோவும் ஒன்று.

உள்நாட்டு சந்தையில் தனது போட்டியாளர்களான மாருதி சுஸுகி சியாஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுடன் ஒப்பிடும்போது, வெண்டோ பின்தங்கியே காணப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட வெண்டோ கார்களின் எண்ணிக்கை வெறும் 210 மட்டும்தான்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை செவர்லே பீட் (Chevrolet Beat) பிடித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 4,595 செவர்லே பீட் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6,854 செவர்லே பீட் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. இது 32.96 சதவீத வீழ்ச்சியாகும். 4வது இடத்தை புது வரவான கியா செல்டோஸ் பிடித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 2,405 செல்டோஸ் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கியா செல்டோஸ் எஸ்யூவி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே அதன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் அதன் ஏற்றுமதி எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. இந்திய சந்தையில் கியா செல்டோஸ் எஸ்யூவி மிக பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5வது இடத்தை மற்றொரு புது வரவான மாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ பிடித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள மாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பம் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த காரையும் கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிட முடியாது. நடப்பாண்டு ஜூலையில் 2,182 எஸ் பிரெஸ்ஸோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.