இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் ஐந்து பறக்கும் கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்!

விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களைப் போலவே விரைவில் பறக்கும் கார்களும் பொது பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. ஆனால், அது எப்போது என்பது பலரின் கேள்வியாக இருந்து வருகின்றது. குறிப்பாக, வாகன ஆர்வலர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் மத்தியில் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. எனவேதான் ஜாம்பவான் நிறுவனங்கள் முதல் ஆரம்பநிலை நிறுவனங்கள் வரை தங்களின் கவனத்தை பறக்கும் கார்கள்மீது திருப்பியுள்ளன.

இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்!

அந்தவகையில், எந்தெந்த நிறுவனங்கள் விரைவில் பறக்கும் கார்களைக் களமிறக்க இருக்கின்றன?, அந்த பறக்கும் கார்களின் சிறப்பு என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

நிஜ வாழ்க்கையில் ஒன்றல்ல.., இரண்டல்ல.., ஒட்டுமொத்தமாக ஐந்து பறக்கும் கார்கள் கார்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன.

இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்!

பறக்கும் கார்கள் என்ற உடனேயே இந்தியாவிற்கு அதெல்லாம் எங்க இருந்து வரப்போகுது என நினைத்துவிடாதீர்கள். இந்தியாவிலும் பால்-வி எனும் நிறுவனம் பறக்கும் கார்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவிருக்கின்றன. அந்த பறக்கும் கார் பற்றிய தகவலும் இந்த லிஸ்டில் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்!

இதோ பறக்கும் கார்களின் பட்டியல்:

ஆஸ்ட்ரோ எல்ராய்:

இது ஒரு தானியங்கி பறக்கும் காராகும். இந்த பறக்கும் காரை எந்த மாதிரியான அடர்த்தியான நகரப்பகுதியிலும் பயன்படுத்த முடியுமாம். அதாவது, இந்த காரைப் பயன்படுத்த தனி ஓடு தளம் அல்லது பாதை வேண்டும் என்ற அவசியம் இருக்காது என குறிப்பிடப்படுகின்றது. இந்த கூற்றிற்கு ஏற்ப ஆஸ்ட்ரோ எல்ராய் மிகச் சிறியதாகவும், பறப்பதற்கு ஏதுவான அமைப்பையும் கொண்டிருக்கின்றது.

இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்!

இக்கார் வெகுவிரைவில் பயன்பாட்டிற்கு வரவிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், எப்போது என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலை பல்வேறு நிறுவனங்களின் வாகன தயாரிப்பிற்கு தற்காலிக முற்று புள்ளி வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், ஆஸ்ட்ரா எல்ராய் பறக்கும் காரின் உற்பத்தியிலும் வைரஸ் பரவல் லேசான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என நம்பப்படுகின்றது.

இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்!

லிஃப்ட் ஹெக்ஸா

இது மின்சார பறக்கும் காராகும். இதில் ஒருவர் மட்டுமே பயணியாக பறக்க முடியும். டூரிஸ்ட் மற்றும் குறைந்த இடைவெளியில் பறக்க விரும்புவோர்களுக்கு விதமாக இந்த பறக்கும் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அல்ட்ராலைட்களால் பவரூட்டப்பட்ட மின்சார வாகனம் என்பது கூடுதல் சிறப்பளிக்கும் விஷயமாக உள்ளது. இத்துடன், இந்த பறக்கும் காரை இயக்க விமானிக்கான உரிமத்தைப் பெற வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்!

ஹோவர்சர்ஃப்:

உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் அதிநவீன கார்களைப் பயன்படுத்தி வரும் துபாய் நாட்டு போலீஸார்களின் கவனத்தை ஈர்த்த பறக்கும் காராக ஹோவர்சர்ஃப் உள்ளது. எனவே இதன் அறிமுகத்திற்கு பின்னர் நிச்சயம் துபாய் போலீஸாரின் பயன்பாட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இவிடிஓஎல் (eVTOL) சான்று பெற்ற மின்சார பறக்கும் காராகும்.

இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்!

அகுஸ்டா வெஸ்ட்லேண்ட் ஏடபிள்யூ609

இந்த பறக்கும் வாகனம் விஐபி-க்களின் பயன்பாட்டிற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஹோவர் ரக பைக்காகும். இதனை செங்குத்தாக தரையிறக்க மற்றும் டேக்-ஆஃப் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த வாகனத்தின் மூலம் நெடுந்தூர பயணத்தைக்கூட மேற்கொள்ள முடியும் கூறப்படுகின்றது. இதற்கு இதன் ரெக்கைகளை விமானத்தின் ரெக்கைப் போல் திருப்பினால் மட்டுமே போதும். அதிக வேகம் மற்றும் நெடுந்தூரத்தை எளிதில் கடக்க முடியும்.

இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்!

பால்-வி

இது டட்ச் நாட்டு நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த நிறுவனத்தின் பறக்கும் காரே விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது. இந்தியாவிலும் வர்த்தக ரீதியாக பால்-வி மின்சார பறக்கும் கார்கள் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதனை பறக்கும் காராக அல்லது சாலையில் பறக்கும் காராக பயன்படுத்திக் கொள்ள முடியும். இருவித பயன்பாட்டுடன் விரைவில் வரவிருக்கும் இந்த காரில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும்.

இவைதான் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் பறக்கும் கார்கள்... ஆச்சரியமூட்டும் தகவல்!

மேற்கூறிய இந்த ஐந்து பறக்கும் கார்களே விரைவில் பொது பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. இதில், ஒரு சில மட்டுமே டூரிஸ்ட்டுகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பால்-வி போன்ற பறக்கும் கார்கள் வர்த்தக ரீதியாகவும், மக்கள் பயன்பாட்டிற்காகவும் களமிறக்கப்பட இருக்கின்றன.

Most Read Articles

English summary
Top 5 Flying Cars Closer To Reality. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X