பெட்ரோல்-டீசல் காரைவிட இதில்தான் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை சிஎன்ஜி கார்கள்...

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து பெஸ்ட் சிஎன்ஜி கார்களின் பட்டியலைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

அண்மைக் காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருளின் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து வருகின்றது. சமீபத்தில், வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோலின் விலையை டீசல் முந்தியது. ஏற்கனவே, கொரோனா வைரசின் பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகி வரும் மக்களுக்கு கூடுதல் இன்னலை வழங்கும் விதமாக நாளுக்கொரு புதிய உச்சத்தை எரிபொருளின் விலைத் தொட்டு வருகின்றது.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த தலைவலியில் இருந்து லேசான விளக்கு அளிக்கும் வகையில் மின்சாரம் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் சந்தையில் களமிறக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பராமரிப்பது டீசல், பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் மிக சுலபம். எனவே, மக்களின் பார்வை மாற்று வாகனங்களின் பக்கம் திரும்பி வருகின்றது.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

அந்தவகையில், தற்போதைய நிலையில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் குறைவு என்பதால் சிஎன்ஜி வாகனங்களுக்கு மக்கள் சற்று முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு பயனளிக்கும் விதமாக குறைந்த விலையில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி ரக வாகனங்களின் பட்டியலைதான் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

மாருதி சுசுகி வேகன் ஆர் சிஎன்ஜி

விலை: ரூ. 5.25 முதல் ரூ. 5.32 லட்சம்

மாருதி சுசுகி நிறுவனம் விற்பனைச் செய்து வரும் சிஎன்ஜி மாடலிலேயே குறைந்த விலைக் கொண்ட காராக வேகன் ஆர் இருக்கின்றது. நாட்டில் விற்பனையில் இருக்கும் மலிவு விலை சிஎன்ஜி காரிலும் இதே முதல் இடத்தில் இருக்கின்றது. எனவேதான் இக்கார் நமது பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

வேகன் ஆர் காரில், 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் ஆகிய தேர்வுகள் கிடைத்து வருகின்றன. இதில், வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்படி சிஎன்ஜி கிட்டை மாருதி வழங்கி வருகின்றது. அவ்வாறு சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட பெட்ரோல்-சிஎன்ஜி பவரூட்டப்பட்ட கார் அதிகபட்சமாக 60 பிஎஸ் பவரையும், 78 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

மாருதி சுசுகி செலிரியோ சிஎன்ஜி

விலை: ரூ. 5.6 லட்சம் முதல் ரூ. 5.68 லட்சம் வரை

மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றுமொரு சிஎன்ஜி தயாரிப்பே செலிரியோ. இது பிரிமியம் ரக கார் என்பது வேகன் ஆர் மாடலைக் காட்டிலும் சற்று உயர்ந்த விலையைக் கொண்டிருக்கின்றது. இந்த கார் சிறிய ஹேட்ச்பேக் ரகமாகும். இந்த காரில் பிஎஸ்6 தரத்திலான 998 சிசி திறன் கொண்ட் 3 சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

இது அதிகபட்சமாக 60 பிஎஸ் பவரையும், 78 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த சிஎன்ஜி தேர்வை மிட் ஸ்பெக் மாடல்களான விஎக்ஸ்ஐ மற்றும் பிஎக்ஸ்ஐ (ஓ) தேர்வுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இவை ரூ. 5.6 லட்சத்தில் இருந்து ரூ. 5.68 லட்சம் வரையிலான விலையைக் கொண்டிருக்கின்றன. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

ஹூண்டாய் சேன்ட்ரோ சிஎன்ஜி

விலை: ரூ. 5.84 லட்சம் முதல் ரூ. 6.2 லட்சம்

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக களமிறக்கிய கார் சேன்ட்ரோ. இது 1998ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றது. இது இந்தியாவில் நல்ல வெற்றியைப் பெற்ற ஹேட்ச்பேக் ரக மாடலாகும். இதனால், ஹூண்டாய் நிறுவனம் சேன்ட்ரோவில் சிஎன்ஜி தேர்வை வழங்குகின்றது.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

சிஎன்ஜி பொருத்தப்பட்ட சேன்ட்ரோ கார் அதிகபட்சமாக 60 பிஎஸ் பவரையும், 85 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த வேரியண்ட் சேன்ட்ரோவின் - மக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய இரு தேர்வுகளில் கிடைக்கின்றது. மேலும், ரூ. 5.84 லட்சம் முதல் ரூ. 6.2 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

கிராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி

விலை: ரூ. 6.64 லட்சம் முதல் ரூ. 7.18 லட்சம் வரை

ஹூண்டாய் நிறுவனம் அதன் கிராண்ட் ஐ10 நியாஸ் மாடலிலும் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்கி வருகின்றது. இந்த தேர்வை கடந்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தாலும், நடப்பாண்டின் ஆரம்பத்தில்தான் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் நான்கு விதமான பவர்டிரெயின் தேர்வை வழங்கி வருகின்றது. அவை, 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டீசல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி ஆகியவை ஆகும். இத்துடன், இந்த சிஎன்ஜி கிட்டை இரு வேரியண்டுகளில் ஹூண்டாய் வழங்கி வருகின்றது. அதில், மக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய தேர்வுகள் அடங்கும்.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

ஹூண்டாய் அவுரா

விலை: ரூ. 7.28 லட்சம்

ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றுமொரு சிஎன்ஜி தயாரிப்பாக அவுரா செடான் ரக கார் உள்ளது. இந்த கார் சற்று அதிக விலையைக் கொண்டிருப்பதால் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், இதனை கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலைப் போன்று அல்லாமல் ஒரே தேர்வில் மட்டுமே விற்பனைக்கு ஹூண்டாய் வழங்குகின்றது.

பெட்ரோல்-டீசல் காரைவிட இதில் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 சிஎன்ஜி கார்கள்... உங்க பர்ஸ காப்பாத்திக்கோங்க...

மேலே நாம் பார்த்த மாடல்கள்தான் தற்போது இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்களாகும். இவை பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜினுடைய வாகனங்களுக்கு மாற்றமாக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றைப் பராமரிப்பது எப்படி சுலபமோ, அதேபோன்று அக்கார்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்த முடியும்.

Most Read Articles
English summary
Top 5 Low Budget CNG Cars In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X