ஆஃப்ரோடு பிரியர்களை மெர்சலாக்க வரும் புதிய மஹிந்திரா தார்... அட்டகாசமான 6 அம்சங்கள்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் பல முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இடம்பெறும் 6 முக்கிய அம்சங்கள்!

ஆஃப்ரோடு பிரியர்களின் மத்தியில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஆஃப்ரோடு விஷயங்கள் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், புதிய தலைமுறை தார் எஸ்யூவியானது நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை அசத்த வருகிறது. இதில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இடம்பெறும் 6 முக்கிய அம்சங்கள்!

01. எல்இடி பகல்வேளை விளக்குகள்

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியில் எல்இடி பகல்நேர விளக்குகள் வழங்கப்பட உள்ளன. இது நிச்சயம் ஆஃப்ரோடு பயணம் மற்றும் ஆன்ரோடு பயணத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் விஷயமாக இருக்கும்.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இடம்பெறும் 6 முக்கிய அம்சங்கள்!

02. புதிய இருக்கை அமைப்பு

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பை படங்களில் மற்றொரு சிறப்பம்சம் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. ஆம். புதிய தார் எஸ்யூவியில் முன்னோக்கி அமைந்த பின் இருக்கைகள் இடம்பெற இருக்கின்றன. இதுவும் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விஷயமாக இருக்கும்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இடம்பெறும் 6 முக்கிய அம்சங்கள்!

03. ஹார்டு டாப் தேர்வு

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை முன்பதிவு செய்யும்போதே, ஹார்டு டாப் அல்லது சாஃப்ட் டாப் எனப்படும் கூரையுடன் ஆர்டர் செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். இது நிச்சயம் வாடிக்கையாளர்களின் விருப்பம், பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இடம்பெறும் 6 முக்கிய அம்சங்கள்!

04. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் முதல்முறையாக தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ரியர் பார்க்கிங் கேமராவை சப்போர்ட் செய்யும் வசதியையும் தொடுதிரை அளிக்கும்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இடம்பெறும் 6 முக்கிய அம்சங்கள்!

05. ஆட்டோமேட்டிக் மாடல்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 4 வீல் டிரைவ் உள்ளிட்ட ஆஃப்ரோடு தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெறும். முக்கியமாக மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வரும் என தெரிகிறது.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இடம்பெறும் 6 முக்கிய அம்சங்கள்!

06. பாதுகாப்பு அம்சங்கள்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் பல நவீன பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறுகின்றன. டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். தற்போதைய மாடலைவிட பாதுகாப்பு தரத்தில் சிறப்பானதாக இருக்கும்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் இடம்பெறும் 6 முக்கிய அம்சங்கள்!

விரைவில் அறிமுகம்

அண்மையில் ஆட்டோமொபைல் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மஹிந்திரா அதிகாரி, விரைவில் புதிய தலைமுறை தார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். பழைய மாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மாடலாக உருவாக்கப்பட்டு இருப்பதால், விலையும் சற்றே அதிகமாக நிர்ணிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 25, 2020, 16:30 [IST]
English summary
Here is a list of the top 6 features of the new Mahindra Thar SUV.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+