திரை பிரபலங்கள் பயன்படுத்தம் மலைக்க வைக்கும் விலையுடைய கார்.. இந்த லிஸ்ட்ல இவருமா இருக்காரு..?

உலகின் அதிக விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்தும் திரை நட்சத்திரங்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

உலக புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனங்களில் ரோல்ஸ் ராய்ஸ் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஈடு இணையற்ற வரவேற்பு உலகம் முழுவதிலும் கிடைக்கின்றது.

இந்த கார் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவு தொகையைக் கொண்டிருப்பதால் பெரும் செல்வந்தர்களிடத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றது. குறிப்பாக, இந்நிறுவனத்தின் ஆரம்பநிலை கார்களே பால கோடி ரூபாய் விலையைக் கொண்டதாக இருக்கின்றன.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

இதுபோன்ற காரணத்தினாலேயே தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் ஆகியோரிடத்தில் மட்டும் ரோல்ஸ் ராய்ஸ் கார் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றது.

அப்படி என்னங்க அந்த கார்ல இருக்கு. ஏன், இந்தளவிற்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கு என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கான பதில், பல நட்சத்திர சொகுசு விடுதிகளில் காணக் கிடைக்காத லக்சூரியஸ் வசதிகள் இந்த காரில் இடம்பெற்றிருப்பதாகும்.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

குறிப்பாக, இந்த காரில் பயணிக்கும்போது கப்பலில் மிதப்பது போன்ற உள்ளுணர்வு ஏற்படும். அதிலும் பள்ளம், மேடுகள் என்பது இந்த காரில் பயணிக்கும்போது துளியளவும் தெரியாது.

மாறாக பள்ளம், மேடுகளில் செல்லும்போது தாலாட்டுவதைப் போன்றே உணர்வே இருக்கும். இதனாலயே பெரும்பாலான செல்வந்தர்கள் மத்தியில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவுகின்றது.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

அந்தவகையில், இந்திய திரையுலக பிரபலங்களான இளையதளபதி விஜய், டைரக்டர் சங்கர், அமிதாப் பச்சன், அமிர்கான், அக்ஷய்குமார், சஞ்சய் தத்தின் மனைவி மன்யட்டா தத், பிரியங்கா சோப்ரா, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரிடம் இந்த விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

இதில், நாம் தற்போது பாலிவுட் திரைப் பிரபலங்களிடத்தில் இருக்கும் ரோல்ஸ் ராயஸ் காரை பற்றிய தகவலை பார்க்கவிருக்கின்றோம். குறிப்பாக, அவர்கள் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் வேரியண்ட் மற்றும் திறன் உள்ளிட்ட சிறப்பு தகவல்களை இந்த பதிவின் வாயிலாக பார்க்கவிருக்கின்றோம்.

அமிதாப் பச்சன் போன்ற ஒரு சில முக்கிய பிரபலங்களுடைய ரோல்ஸ் ராய்ஸைப் பற்றிய தகவலை ஏற்கனவே பலமுறை பார்த்துவிட்டதால் மிஞ்சிய பாலிவுட் நடிகர்களின் காரைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன் ஓர் மூத்த பாலிவுட் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரையுலகில் மட்டுமின்றி வாகன உலகில் அதிகம் ஆர்வம் நிலவுகின்றது. இதன் வெளிப்பாடாக அவரிடத்தில் ஏகப்பட்ட விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் குறிப்பிடும் வகையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் இருக்கின்றது.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

இது, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிட்ட முதல் எஸ்யூவி ரக காராகும். இந்த காரையே அவர் லேட்டஸ்டாக வாங்கியதாக கூறப்படுகின்றது.

இந்த காரை தனது அன்றாட பயணங்கள் மற்றும் விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்க பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் பல முறை இந்த காரில் வலம் வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலை தளத்தில் வைரலாகின.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

ஹ்ரிதிக் ரோஷன்

பாலிவுட்டில் பெண்களை அதிகம் வசியம் செய்த ஹீரோக்களில் ஹ்ரிதிக் ரோஷனும் ஒருவர். இவருக்கென பாலிவுட்டில் தனி சந்தையே இருக்கின்றது. இவரின் 42வது பிறந்தநாளில் தனக்குத் தானே ரோல்ஸ் ராய்ஸ் காரை கிஃப்ட் செய்து கொண்டார். நீல நிறத்திலான இந்த காரின் பானட்டிற்கு மட்டும் சில்வர் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது கோஸ்ட் செரீஸ் II மாடல் ஆகும்.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

இந்த கார் எக்ஸ்-ஷோரூமிலேயே ரூ. 5.65 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதனை ஆன்ரோடில் வாங்கினால் ரூ. 6 கோடிக்கு நிகரான விலையைப் பெற்றுவிடும்.

ஆனால், ஹ்ரிதிக் வாங்கிய கோஸ்ட் செரீஸ்II காரோ ரூ. 7 கோடி மதிப்புடையதாக இருக்கின்றது. ஏனென்றால், ஹ்ரிதிக் தனக்கு தேவையான சில சொகுசு அம்சங்களை கூடுதலாக அதில் இணைத்துள்ளார். இதனாலயே இந்த காரின் விலை மலையளவு உயர்ந்திருக்கின்றது.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

இந்த கோஸ்ட் செரீஸ் II காரில் 6.6 லிட்டர் ட்வின் டர்போ வி12 பெட்ரோல் எஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனுடையது.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

அக்ஷய் குமார்

பாலிவுட் உலகின் பிரபல ஸ்டார்களில் அக்ஷய் குமாரும் ஒருவர். இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பேந்தம் கார் இருக்கின்றது. இந்த காரிலேயே இவர் அதிகம் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இவர் வைத்திருக்கும் இதே காரைதான் அமிதாப் பச்சனும் வைத்திருக்கின்றார். இவர் வைத்திருக்கும் பாந்தம் 8ம் தலைமுறை மாடல் ஆகும். இது அதிகபட்சமாக 460 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வ12 எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றது.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

பிரியங்கா சோப்ரா

பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இவர் இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவில் புகழ்வாய்ந்தவராக இருக்கின்றார். குறிப்பாக அமெரிக்காவின் டிவி ஷோவில் தற்போது கலை கட்டி வருகின்றார். அப்போது, நிக் ஜோனஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்துகொண்டார்.

இவர் இந்தியாவில் பயணிக்கும்போது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரையே அதிகம் பயன்படுத்துவார்.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

இந்த கார் இந்தியாவில் ரூ. 4.5 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த காரைதான் அவார்ட் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போதும் பயன்படுத்தி வருகின்றார்.

இந்த கோஸ்ட் காரில் 6.6 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜினை பிஎம்டபிள்யூ நிறுவனத்திடம் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 562 பிஎச்பி மற்றும் 780 என்எம் டார்க்கை வெளிப்படுத்தம் திறனைக் கொண்டது.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

சஞ்சய் தத்

சஞ்சய் தத் கடந்த 2010ம் ஆண்டே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் காரை வாங்கியதாக கூறப்படுகின்றது. அப்போது அவரை ஷோரூமில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் இப்பவும் ஃபேமஸ்தான். ஆனால், அவர் அந்த காரை தனக்காக வாங்கவில்லை. அவரது மனைவி மன்யதா தத் அவர்களுக்காகவே வாங்கியுள்ளார். இருப்பினும், அவ்வப்போது வெளியே செல்லும்போது இருவரும் இந்த காரிலேயே பயணிக்கின்றனர்.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

பூஷன் குமார்

பூஷன் திரைப்பட நடிகர் அல்ல. இவர் டி செரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். மேலும், பாலிவுட்டில் அதிகம் செல்வாக்கு உடையவராகவும் திகழ்கின்றார். இவர் மிக மிக விலையுயர்ந்த கார்களைப் பயன்படுத்தி வருகின்றார். பாலிவுட் உலகில் ரோல்ஸ் ராய்ஸ் காரை முதன் முதலாக வாங்கிய நபர் என்ற பெறுமைக்குரியவர் இவரே.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

தொடர்ந்து, ரோல்ஸ் ராய்ஸின் புதிய மாடலான கல்லினன் எஸ்யூவி ரக காரையும் அவர் கடந்த ஆண்டு வாங்கியிருக்கின்றார்.

இந்த எஸ்யூவி ரக காரில் 6.8 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 560 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது இந்தியாவில் ரூ. 6.95 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது தற்போது இந்தியாவில் விற்பனையாகும் அதிக விலைக் கொண்ட எஸ்யூவி ரக காராகும்.

பிரபல ஸ்டார்களின் வாயை பிளக்க வைக்கும் விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ்.. இவரு இந்த லிஸ்ட்லயுமா?

இதில், சஞ்சய் தத் மற்றும் அஜய் தேவ்கன் போன்ற நடிகர்கள் வேறு சில விலையுயர்ந்த கார்களைப் பயன்படுத்துவோரின் பட்டியிலிலும் இடம்பெற்றிருக்கின்றனர்.

ஆகையால், அவர்களிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறவனத்தின் விலையுயர்ந்த கார்களைப் போலவோ, வேறு சில உலக புகழ்வாய்ந்தத நிறுவனங்களின் கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, February 29, 2020, 16:55 [IST]
English summary
Top 6 Rolls Royce Owners Of Bollywood. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+