மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

மிகவும் பாதுகாப்பான டாப்-8 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம். இதில், டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

இந்தியாவில் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வாடிக்கையாளர்கள், கார் உற்பத்தி நிறுவனங்கள் என யாருமே கார்களின் பாதுகாப்பு வசதிகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கார் வாங்க செல்லும் ஒருவர் மைலேஜ், டிசைன் மற்றும் விலை போன்ற அம்சங்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பாரே தவிர, பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க மாட்டார்.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

ஆனால் இப்படிப்பட்ட மோசமான சூழல் தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. பாதுகாப்பு வசதிகளும் தற்போது கார் வாங்குவதை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக மாறியுள்ளன. எனவே வாகன நிறுவனங்களும், கார்களின் பாதுகாப்பை மேம்படுத்தி வருகின்றன. இந்த விஷயத்தில் டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய இரண்டு நிறுவனங்களையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

இந்த இரண்டு நிறுவனங்களின் கார்களும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் அமர்க்களப்படுத்தி வருகின்றன. இது இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம். குளோபல் என்சிஏபி மோதல் சோதனை அடிப்படையில், மிகவும் பாதுகாப்பான டாப்-8 'மேட் இன் இந்தியா' கார்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

1. மஹிந்திரா எக்ஸ்யூவி300 - 5 நட்சத்திரங்கள்

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளின் அடிப்படையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்தான், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மிகவும் பாதுகாப்பான கார். பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும் (பாதுகாப்பு ஸ்கோர் 16.42/17), குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும் (பாதுகாப்பு ஸ்கோர் 37.44/49) இந்த கார் பெற்றுள்ளது.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் டாப் வேரியண்ட்டில் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. இது பயணிகளின் பாதுகாப்பை இன்னும் அதிகரிக்கிறது. அத்துடன் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

2. டாடா அல்ட்ராஸ் - 5 நட்சத்திரங்கள்

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் டாடா அல்ட்ராஸ் 5 நட்சத்திரங்களை (பாதுகாப்பு ஸ்கோர் 16.13/17) முழுமையாக பெற்றுள்ளது. அதே சமயம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களை (பாதுகாப்பு ஸ்கோர் 29/49) பெற்றுள்ளது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும்.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

3. டாடா நெக்ஸான் - 5 நட்சத்திரங்கள்

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் டாடா நெக்ஸான்தான். அதன்பின் டாடா அல்ட்ராஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்கள், பாதுகாப்பு சோதனையில் டாடா நெக்ஸானை விட சிறப்பாக செயல்பட்டு, அதிக பாதுகாப்பு புள்ளிகளை ஸ்கோர் செய்தன.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும் (பாதுகாப்பு ஸ்கோர் 16.06/17), குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் (பாதுகாப்பு ஸ்கோர் 25/49) டாடா நெக்ஸான் பெற்றுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை போல், டாடா நெக்ஸானும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

4. மஹிந்திரா மராஸ்ஸோ - 4 நட்சத்திரங்கள்

பெரியவர்களுக்கான பாதுகாப்பு 4 நட்சத்திரங்களையும் (பாதுகாப்பு ஸ்கோர் 12.85/17), குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் (பாதுகாப்பு ஸ்கோர் 22.22/49) மஹிந்திரா மராஸ்ஸோ பெற்றுள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார்களில் ஒன்றாகும்.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

5. ஃபோக்ஸ்வேகன் போலோ - 4 நட்சத்திரங்கள்

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் (பாதுகாப்பு ஸ்கோர் 12.54/17), குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் (பாதுகாப்பு ஸ்கோர் 29.91/49) ஃபோக்ஸ்வேகன் போலோ பெற்றுள்ளது. பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ஹேண்ட்லிங் ஆகிய அம்சங்களுடன் பாதுகாப்பிலும் ஃபோக்ஸ்வேகன் போலோ சிறந்து விளங்குகிறது.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

6. டாடா டியாகோ/டிகோர் - 4 நட்சத்திரங்கள்

டாடா நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய இரண்டு கார்களும் பட்ஜெட் விலையில் கிடைத்தாலும், சிறப்பான பாதுகாப்பை வழங்குகின்றன. இந்த இரண்டு கார்களும் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் (பாதுகாப்பு ஸ்கோர் 12.52/17), குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் (பாதுகாப்பு ஸ்கோர் 34.15/49) பெற்றுள்ளன.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

7. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா - 4 நட்சத்திரங்கள்

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களை (பாதுகாப்பு ஸ்கோர் 12.51/17) பெற்ற ஒரே ஒரு கார் விட்டாரா பிரெஸ்ஸா மட்டுமே. ஆனால் இந்த கார் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் வெறும் 2 நட்சத்திரங்களை (பாதுகாப்பு ஸ்கோர் 17.93/49) மட்டுமே பெற்றுள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக திகழ்கிறது.

மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்...

8. ஃபோர்டு அஸ்பயர் - 3 நட்சத்திரங்கள்

இந்தியாவின் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் ஃபோர்டு அஸ்பயரும் இருந்தாலும் கூட, அதன் பாதுகாப்பு ஸ்கோர் அவ்வளவு பிரமாதமாக இல்லை. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் (பாதுகாப்பு ஸ்கோர் 10.49/17), குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 நட்சத்திரங்களையும் (பாதுகாப்பு ஸ்கோர் 14.22/49) இந்த கார் பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
Top 8 Safest Made-in-India Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X