அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கொண்ட கார்களைப் பற்றிய தகவலைத் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் இந்த புதிய விதிக்கு மாறின. ஆகையால் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து வாகனங்களிலும் புதிய பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

புதிய விதிக்கு ஏற்ப டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனத்தை உருவாக்குவது அதிக பலனை வழங்காது என கருதிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதன் தயாரிப்பைக் கைவிடுவதாகக் கூறின. இருப்பினும், ஒரு சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து புதிய விதிக்கு ஏற்ற டீசல் எஞ்ஜின்களைக் களமிறக்கி வருகின்றன.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

அந்தவகையில், தற்போது பிஎஸ்6 தர எஞ்ஜினுடன் விற்பனைக்குக் கிடைக்கும் எந்த கார் அதிக மைலேஜை வழங்குகின்றது என்ற தகவலை இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

5. ஹூண்டாய் வெர்னா:

ஹூண்டாய் வெர்னா, இது ஓர் மிட்-சைஸ் செடான் ரக காராகும். மிக சமீபத்திலேயே பிஎஸ்6 தர எஞ்ஜினுடன் இக்காரை ஹூண்டாய் களமிறக்கியது. இக்கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஏஎம்டி வேரியண்ட் டீசல் லிட்டர் ஒன்றிற்கு 21.3 கி.மீட்டரையும், மேனுவல் வெர்ஷன் 25 கிமீ மைலேஜையும் வழங்குகின்றது.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

இக்கார், ரூ. 10.73 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து ரூ. 15.18 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் எஞ்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி திறனை வெளிப்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

4. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்:

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் 1.2 லிட்டர் யு2 சிஆர்டிஐ எஞ்ஜினுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது மிகச்சிறிய டீசல் எஞ்ஜின் தேர்வு கொண்ட கார் ஆகும். இதன் 3 சிலிண்டர் கொண்ட எஞ்ஜின் 75 பிச்பி திறனை வெளிப்படுத்தக் கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் திறன் கொண்ட நியாஸ், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 25.1 கிமீ தூரத்தை வழங்கக்கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

ஏஎம்டி வெர்ஷனில் கிடைக்கும் கிராண்ட் ஐ10 நியாஸ் காரின் மைலேஜம் விபரம் தெரியவில்லை. இது மேனுவல் வேரியண்டைக் இரண்டு அல்லது மூன்று கீமீட்டர் குறைந்த மைலேஜே வழங்கும். இக்கார் இந்தியாவில் ரூ. 7.60 லட்சம் முதல் ரூ. 8.35 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் மதிப்பு மட்டுமே ஆகும்.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

3 டாடா அல்ட்ராஸ்:

இந்தியாவின் 5 நட்சத்திர பாதுகாப்பு வசதிக் கொண்ட டாடா அல்ட்ராஸ் மாடலும் ஒன்று. டீசல் எஞ்ஜின் பிரியர்களைக் கவரும் வகையில் இக்காரில் 1.5 லிட்டர் ரிவோடார்க் எஞ்ஜினை டாடா வழங்கி வருகின்றது. இக்கார் லிட்டர் ஒன்றிற்கு 25.11 கிமீ மைலேஜை வழங்கக்கூடியது.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

இது, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 6.99 லட்சத்தில் இருந்து ரூ. 9.09 லட்சம் வரையிலான அல்ட்ராஸ் விற்கப்பட்டு வருகின்றது. இது ஓர் பிரீமியம் வசதிக் கொண்ட கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

2. ஹூண்டாய் ஐ20:

ஹூண்டாய் நிறுவனம் மிக சமீபத்திலேயே இக்காரின் மூன்றாம் தலைமுறை மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்ஜின் தேர்விலும் இக்கார் கிடைக்கின்றது. இதன் டீசல் எஞ்ஜின் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ சார்ஜட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாகும். இது அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கு 25.2 கிமீ மைலேஜை வழங்கக் கூடியது.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

இந்த காரும் பிரீமியம் வசதிகளுடன் காணப்படுவதால் இதன் விலை சற்று அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. இக்காருக்கு ஆரம்ப விலையாக ரூ. 8.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிகபட்ச விலையாக ரூ. 10.60 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும்.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

1. ஹூண்டாய் அவ்ரா:

பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் தேர்வில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் கார்களிலேயே அதிக மைலேஜைத் தரக்கூடியதாக இக்கார் இருக்கின்றது. இது லிட்டர் ஒன்றிற்கு 25.53 கிமீ வரையிலான மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது. இக்காரில் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்காருக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 6.99ம், அதிகபட்ச விலையாக ரூ. 9.09 லட்சங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?

மேற்கூறிய அனைத்து கார்களின் மைலேஜ் விபரமும் அராய் அமைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் ஆகும். ஆகையால், இந்த தகவல் நம்பகத் தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது.

Most Read Articles

English summary
Top 5 Fuel Efficient BS6 Diesel Engine Cars In India. Read In Tamil.
Story first published: Wednesday, December 30, 2020, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X