நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

டாடா நெக்ஸான் கார் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த கார்கள், வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா பிரச்னையால், கார்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ள போதிலும் கூட, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 8,267 வெனியூ கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

செக்மெண்ட்டில் முதல் இடத்தை பிடித்திருந்தாலும் கூட, ஹூண்டாய் வெனியூ விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 967 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9,234 வெனியூ கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது 10.47 சதவீத வீழ்ச்சியாகும்.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரில் சமீபத்தில் ஐஎம்டி எனப்படும் புதிய வகை கியர் பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. வெனியூ காரின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்கு இந்த புதிய மாடல் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெனியூவிற்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் 2வது இடத்தை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா பிடித்துள்ளது.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

கடந்த ஆகஸ்ட் மாதம் 6,903 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7,109 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 206 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2.90 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

மூன்றாவது இடத்தை டாடா நெக்ஸான் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 5,179 நெக்ஸான் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 2,275 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 2,904 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 127.65 சதவீத வளர்ச்சியாகும்.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்ற முதல் இந்திய கார் டாடா நெக்ஸான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாலும், டாடா நெக்ஸான் அதிகம் விரும்பப்படுகிறது. இந்த பட்டியலில் 4வது இடத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிடித்துள்ளது.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

கடந்த ஆகஸ்ட் மாதம் மஹிந்திரா நிறுவனம் 2,990 எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2,532 எக்ஸ்யூவி300 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 458 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 18.09 சதவீத வளர்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

டாடா நெக்ஸானை போல், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. டாடா நெக்ஸானுக்கு பிறகு 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிடித்திருந்தாலும் கூட, பாதுகாப்பில் நெக்ஸானை காட்டிலும், மஹிந்திரா எக்ஸ்யூவி300தான் சிறந்ததாக உள்ளது.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

இந்த பட்டியலில் 5வது மற்றும் கடைசி இடத்தை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஃபோர்டு நிறுவனம் 2,757 ஈக்கோஸ்போர்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2,882 ஈக்கோஸ்போர்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 125 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 4.34 சதவீத வீழ்ச்சியாகும்.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

கூடிய விரைவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி இன்னும் அனல் பறக்க போகிறது. ஏனெனில் கியா சொனெட் (Kia Sonet) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser) என இரண்டு புதிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் விரைவில் களமிறங்கவுள்ளன. இதில், கியா சொனெட் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நம்பவே முடியல... ஆச்சரியத்தை ஏற்படுத்திய டாடா கார்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போதே கியா சொனெட் காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. விற்பனைக்கு வந்தவுடன் இந்த செக்மெண்ட்டில் முதல் இடத்தை கியா சொனெட் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவியை போல், கியா சொனெட்டும் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தென்படுகின்றன.

Most Read Articles

English summary
Top Selling Compact SUVs In August 2020. Read in Tamil
Story first published: Saturday, September 5, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X