ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கல்லினன் மற்றும் பேந்தம் ஆகிய இரு கார்களின் உருவத்தை தனக்குள் ஏந்தியவாறு டொயோட்டாவின் லக்சூரி கார் ஒன்று மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

மேற்கத்திய நாடுகளில் காணப்பட்டு வந்த வாகன மாடிஃபிகேஷன் கலாச்சாரம் அண்மைக் காலங்களாக இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, இந்தியாவில் வாகனங்களை மாற்றியமைப்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், இதற்கு இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதியளிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இருப்பினும், பலர் தங்களது வாகனங்களை கஸ்டமைஸ் செய்து பயன்படுத்து வருகின்றனர்.

ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

ஆனால், நாம் இங்கு பார்க்கவிருப்பது இந்தியாவைச் சார்ந்த மாடிஃபிகேஷனைப் பற்றிய தகவல் அல்ல. ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட கஸ்டமைசேஷன் தகவலைதான் இங்கு பார்க்கவிருக்கின்றோம்.

பலரை கவரும் வகையில் இந்த மாடிஃபிகேஷன் சம்பவம் இருக்கின்ற காரணத்தினாலயே இதனை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷனுக்கு என்றே பிரத்யேகமாக இயங்கிவரும் டிசி2 நிறுவனத்தைப் போல், ஜப்பானிலும் பல நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் ஓர் புகழ்வாய்ந்த நிறுவனமாக இருந்து வருகின்றது வெயில்சைட். இந்நிறுவனம்தான் சிறப்பான மாடிஃபிகேஷன் சம்பவத்தை தற்போது நிகழ்த்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

இது, டொயோட்டா நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் ஒன்றான லக்சூரி எம்பிவி ஆல்ஃபார்ட் மாடலை ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இணையாக மாற்றியமைத்துள்ளது.

இந்த பிரத்யேக வடிவமைப்பே பலரையும் கவரும் விஷயமாக அமைந்துள்ளது. மேலும், வாகன உலகின் பேசு பொருளாகவும் மாறியிருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

இந்நிறுவனம் இதுபோன்று மாடிஃபிகேஷன் செய்வது முதல் முறையல்ல. இது மாடிஃபை செய்த வாகனம் ஒன்றைதான் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தில், டோக்யோவில் நடைபெறும் ட்ரிஃப்ட் காட்சியில் பயன்படுத்தப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

இந்த சிறப்பு வாய்ந்த நிறுவனமே ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இணையான ஸ்டைலில் டொயோட்டாவின் லக்சூரி எம்பிவி-யை மாற்றியமைத்துள்ளது. இதற்காக, காரின் முன் பக்க உடற்கூட்டை நீக்கிய அது, டொயோட்டா ஆல்ஃபார்டுக்காகவே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கிட்டை நிறுவியிருக்கின்றது. இதனால் லக்சூரி எம்பிவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கல்லினன் எஸ்யூவி மற்றும் பேந்தம் ஆகிய மாடல்களின் கலவையாக மாறியிருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

அதேசமயம், இதன் முகப்பு பகுதியில் மட்டுமின்றி பின் பக்கத்திலும் லேசான மாடிஃபிகேஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பின்பக்க பம்பர் மற்றும் மின் விளக்குகள் சிலவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, மிக ஸ்டைலான அமைப்பு கொண்ட அலாய் வீலும் அதில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

இந்த மாடிஃபிகேஷன்கள் அனைத்தும் ஓர் கிட்டாக ஜப்பானிய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. டோமினேட்டர் என்ற விற்பனைக்குச் செய்யப்படுகின்றது.

வெளிப்புறத் தோற்றத்தைப் போலவே காரின் உட்புறத்திலும் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா., என்ற தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும், பிரிமியம் வசதிகள் சிலவற்றில் மாறுதல் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

டொயோட்டா நிறுவனத்தின் ஆல்ஃபார்டு எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. அதேசமயம், இதன் சகோதர மாடலான வெல்ஃபயர் லக்சூரி எம்பிவி ரகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்திய மார்க்கெட்டில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோல்ஸ் ராய்ஸ் கலவையாக மாறிய டொயோட்டாவின் லக்சூரி கார்... அட இது என்னப்பா புது அவதாரமா இருக்கு..?

டொயோட்டாவின் இந்த வெல்ஃபயர் காரில், 7 பேர் சௌகரியமாக பயணிக்கும் வகையில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு மத்திய வரிசையில், 2 பைலட் இருக்கைகளாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வெண்டிலேட்டட் இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், இரு சன் ரூஃப்கள் மற்றும் மூன்று-ஸோன் ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகிய வசதிகளும் டொயோட்டா வெல்ஃபயர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Image Courtesy: Veilside

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota Alphard Luxury MPV Modified Like Rolls Royce. Read In Tamil.
Story first published: Wednesday, April 29, 2020, 15:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X