ஏப்ரல் மாதம் லான்ச்... டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் 2வது மாருதி கார்... எதுன்னு தெரியுமா?

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வர தயாராகி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏப்ரல் மாதம் லான்ச்... டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் 2வது மாருதி கார்... எதுன்னு தெரியுமா?

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் க்ளான்சா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் இருந்து ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முதல் தயாரிப்பு இதுதான். மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் டொயோட்டா க்ளான்சா.

ஏப்ரல் மாதம் லான்ச்... டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் 2வது மாருதி கார்... எதுன்னு தெரியுமா?

7.05 லட்ச ரூபாய் முதல் 9 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் (எக்ஸ்ஷோரூம்), டொயோட்டா க்ளான்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. G மற்றும் V வேரியண்ட்களில் மட்டும் டொயோட்டா க்ளான்சா கார் விற்பனையாகிறது. தனது செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய கார்களுக்கு பிறகு, அதிகம் விற்பனையாகும் 3வது மாடலாக க்ளான்சா உருவெடுத்தது.

ஏப்ரல் மாதம் லான்ச்... டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் 2வது மாருதி கார்... எதுன்னு தெரியுமா?

ஆனால் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அல்ட்ராஸின் வருகையால், டொயோட்டா க்ளான்சாவிற்கு பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த சூழலில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட 2வது தயாரிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டொயோட்டா தற்போது தயாராகி வருகிறது.

ஏப்ரல் மாதம் லான்ச்... டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் 2வது மாருதி கார்... எதுன்னு தெரியுமா?

வரும் ஏப்ரல் மாதம் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்தான் அடுத்ததாக டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஏப்ரல் மாதம் லான்ச்... டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் 2வது மாருதி கார்... எதுன்னு தெரியுமா?

ஆனால் இந்த கார் என்ன பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது? என்பது இன்னும் தெரியவரவில்லை. எனினும் க்ளான்சாவை போல், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், சிறு சிறு காஸ்மெட்டிக் அப்டேட்களுடன் மட்டுமே இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதம் லான்ச்... டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் 2வது மாருதி கார்... எதுன்னு தெரியுமா?

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில் முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் வெகு விரைவில் விற்பனைக்கும் வரவுள்ளது. இந்த காரில், பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான 1.5 லிட்டர் கே-சீரிஸ் நான்கு-சிலிண்டர் எஸ்எச்விஎஸ் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது.

ஏப்ரல் மாதம் லான்ச்... டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் 2வது மாருதி கார்... எதுன்னு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 104.7 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகளில், விட்டாரா பிரெஸ்ஸா கார் கிடைக்கும். விட்டாரா பிரெஸ்ஸா காரின் டொயோட்டா வெர்ஷனிலும் இதே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள்தான் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் மாதம் லான்ச்... டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் 2வது மாருதி கார்... எதுன்னு தெரியுமா?

அதேபோல் வசதிகளும் கூட கிட்டத்தட்ட ஒன்று போலவேதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு விட்டாரா பிரெஸ்ஸா சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தருகிறது. கடும் போட்டிகளுக்கு மத்தியிலும், வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் தேர்வாக இந்த கார் உள்ளது. ஆனால் டொயோட்டா பிராண்டில் விற்பனை எப்படி இருக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Saturday, February 15, 2020, 21:11 [IST]
English summary
Toyota-Badged Vitara Brezza India Launch Details. Read in Tamil
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+