டொயோட்டாவின் புதிய தயாரிப்பு மாடல் சி-எச்ஆர்... முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான சி-எச்ஆர், பெங்களூர் அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

டொயோட்டாவின் புதிய தயாரிப்பு மாடல் சி-எச்ஆர்... முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இந்த புதிய டொயோட்டா காரின் அறிமுகம் விரைவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த புதிய சி-எச்ஆர் மாடல் சோதனை ஓட்டத்தில் எந்தவொரு தகவலும் வெளியாகாதப்படி முற்றிலுமாக மறைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டாவின் புதிய தயாரிப்பு மாடல் சி-எச்ஆர்... முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

டொயோட்டா நிறுவனத்தின் டிஎன்ஜிஏ மாடுலர் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த சி-எச்ஆர் மாடல் சிபியூ அல்லது சிகேடி முறையில் இந்தியாவில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கார் டொயோட்டா நிறுவனத்தின் முக்கிய கார்களின் வரிசையில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

டொயோட்டாவின் புதிய தயாரிப்பு மாடல் சி-எச்ஆர்... முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இயந்திர பாகங்களை பொறுத்தவரை, சி-எச்ஆர் மாடலை ஏகப்பட்ட என்ஜின் தேர்வுகளுடன் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. இந்த புதிய காரின் என்ஜின் தேர்வுகளில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின், 1.8 லிட்டர் ஹைப்ரீட் மற்றும் 2.0 லிட்டர் ஹைப்ரீட் டைனாமிக் ஃபோர்ஸ் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

டொயோட்டாவின் புதிய தயாரிப்பு மாடல் சி-எச்ஆர்... முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

ஆனால் இந்த என்ஜின் தேர்வுகள் அனைத்தும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற சி-எச்ஆர் மாடலில் வழங்கப்பட்டு வருபவை. இவற்றை இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள மாடலில் டொயோட்டா நிறுவனம் வழங்குமா என்பது தெரியவில்லை.

டொயோட்டாவின் புதிய தயாரிப்பு மாடல் சி-எச்ஆர்... முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

என்ஜின் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள சி-எச்ஆர் மாடலுடன் 80 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 202 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் 216 வோல்டேஜ் ஆற்றலை வழங்கக்கூடிய 180 செல்களை கொண்ட நிக்கல்-மெட்டல் ஹைட்ரைட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

டொயோட்டாவின் புதிய தயாரிப்பு மாடல் சி-எச்ஆர்... முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இந்த எலக்ட்ரிக் மோட்டார், கார் எப்போது ரீ-ஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் மோடிற்கு செல்கிறதோ, அப்போது ஜெனரேட்டராக செயல்படுகிறது. இத்தகைய எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கமாக எலக்ட்ரிக் கார்களில் கேபினின் அளவை அதிகரிப்பதற்காக பின்புற இருக்கையின் அடியில் தான் பொருத்துவார்கள்.

டொயோட்டாவின் புதிய தயாரிப்பு மாடல் சி-எச்ஆர்... முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இதுதான் இந்த டொயோட்டா சி-எச்ஆர் மாடலிலும் நடந்துள்ளது. இவை மட்டுமில்லாமல் என்ஜினை குளிரூட்டும் தொழிற்நுட்பம் மற்றும் ஆற்றலை மீண்டும் உருவாக்கும் அகலமான சரகம் போன்ற தனது நவீன தொழிற்நுட்பங்களை டொயோட்டா நிறுவனம் இந்த காரில் வழங்கியுள்ளது. டிசைன் அமைப்பை பார்த்தால், சி-எச்ஆர் மாடலானது அதிகளவில் கம்பீரமான வெளிப்புற பாகங்களை கொண்டிருப்பதால் ஹேட்ச்பேக் வகை கார்களுக்கு உண்டான தோற்றத்தை பெற்றுள்ளது.

டொயோட்டாவின் புதிய தயாரிப்பு மாடல் சி-எச்ஆர்... முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

முன்புற லைடிங் சிஸ்டத்துடன் உள்ள எல்இடி ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், கருப்பு நிறத்தில் ரூஃப், நில நிற ஹைலைட்ஸ் உடன் முழுவதும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் அமைப்பு கொடுக்கப்பட்ட் உட்புறம் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கும் வசதி கொண்ட 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களாகும்.

டொயோட்டாவின் புதிய தயாரிப்பு மாடல் சி-எச்ஆர்... முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

எலக்ட்ரிக் கார்களின் அறிமுகம் ஒவ்வொன்றாக இந்திய சந்தையில் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் குறைந்தது ஒரு வாகனத்தையாவது எலக்ட்ரிக் அல்லது ஹைப்ரீட் வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளன. இதனால் டொயோட்டா சி-எச்ஆர் மாடல் சரியான நேரத்தில் அறிமுகமாகுவதுபோல் தான் தோன்றுகிறது. இதன் விற்பனை இந்தியாவில் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Image Courtesy: Electric Vehicle We

More from DriveSpark

Article Published On: Tuesday, January 7, 2020, 19:25 [IST]
English summary
Toyota C-HR Spied Testing In India Ahead Of Possible Launch: Spy Pics & Details
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+