டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா? - இதோ ஒரு சூப்பரான நியூஸ்!

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி வந்துள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா? - இதோ ஒரு சூப்பரான நியூஸ்!

கடந்த மாதம் அர்பன் க்ரூஸர் எஸ்யூவியுடன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா களமிறங்கியது. போட்டி நிறைந்த இந்த சந்தையில் டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளத இந்த புதிய கார் மாடல் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா? - இதோ ஒரு சூப்பரான நியூஸ்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அடிப்டையிலான ரீபேட்ஜ் மாடலாக வந்தாலும், டொயோட்டா பிரியர்களுக்கு இது சிறந்த சாய்ஸாக அமைந்துள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா? - இதோ ஒரு சூப்பரான நியூஸ்!

இந்த நிலையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி வந்துள்ளது. அதாவது, அர்பன் க்ரூஸர் எஸ்யூவியை டீலர்களுக்கு அனுப்பும் பணியை டொயோட்டா நிறுவனம் துவங்கி இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா? - இதோ ஒரு சூப்பரான நியூஸ்!

இதனால், மிக விரைவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் டெலிவிரி பணிகளும் துவங்கப்பட உள்ளது. முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தீபாவளிக்கு முன்னதாக தங்கள் வீடுகளுக்கு டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியை எடுத்துச் செல்லலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா? - இதோ ஒரு சூப்பரான நியூஸ்!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி Mid, High மற்றும் Premium என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. விலை உயர்ந்த வேரியண்ட்டில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. டொயோட்டா பேட்ஜில் வந்துள்ளதால், இந்த காம்பேக்ட் எஸ்யூவிக்கு தனி மதிப்பு இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா? - இதோ ஒரு சூப்பரான நியூஸ்!

இந்த எஸ்யூவியின் உட்புறம் மாருதி பிரெஸ்ஸாவிலிருந்து எந்த வேறுபாடுகளும் இல்லை. டொயோட்டா பேட்ஜ் இடம்பெற்றிருக்கிறது. மாருதி பிரெஸ்ஸாவில் வழங்கப்படும் அதே 7.0 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா? - இதோ ஒரு சூப்பரான நியூஸ்!

இந்த காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் ஆகியவை உள்ளன. பேஸ் வேரியண்ட்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இல்லை. அதற்கு பதிலாக புளூடூத் இணைப்பு வசதி கொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம் உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா? - இதோ ஒரு சூப்பரான நியூஸ்!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி புக் பண்ணியிருக்கீங்களா? - இதோ ஒரு சூப்பரான நியூஸ்!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியானது ரூ.8.40 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has dispatched the first batch of the Urban Cruiser crossover SUV ahead of the festive season. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X