சோதனை காலத்தில் டொயோட்டா ஆலை! விடாமல் விரட்டும் வைரஸ்! இவங்களுக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ?

கொரோனா வைரஸ் டொயோட்டாவின் முக்கிய ஆலையான பிடதி உற்பத்தியாலையை விடாது கருப்புபோல் வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

கொரோனா வைரஸ் இந்தியாவில் விடாப்பிடியாக அதி தீவிரமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக தொற்றின் எண்ணிக்கையில் கடைக் கோடியில் இருந்த இந்தியா தற்போது முதல் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது. வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கம் மக்களின் வாழ்க்கையை மட்டுமே முடக்கியிருக்கின்றது.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

அது, வைரஸ் பரவலை முடக்க தவறிவிட்டது. மேலும், சாமானியர்களின் வாழ்க்கையும் அது மிகக் கடுமையாக பாதிப்படையச் செய்திருக்கின்றது. குறிப்பாக, பலரின் வேலை பறிபோவதற்கு இந்த பொது முடக்கமே மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

மேலும், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றழைக்கப்படும் இந்திய வாகனத்துறையையும் அது விட்டு வைக்கவில்லை. இதனால், வாகனத்துறை அதன் வரலாற்றிலேயே சந்தித்திராத ஓர் வீழ்ச்சியை சந்தித்தது. தற்போதும் அதே வீழ்ச்சியில் சிக்கி அது தவித்து வருகின்றது.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

இதற்கு பொது முடக்கம் ஓர் முக்கிய காரணமாக இருந்தாலும், கொரோனா வைரசே மிக முக்கியமான காரணகர்த்தாவாக இருக்கின்றது. இவ்வாறு வாகனம் சார்ந்த வணிகத்தை ஆட்டிப்படைத்ததுப் போதாதென்று, தற்போது அதில் பணியாற்றுபவர்களையும் நோய் தொற்றால் வதைத்தெடுக்க ஆரம்பித்திருக்கின்றது. ஆம், கொரோனா வைரஸ் அதன் உக்கிரத்தை உற்பத்தியாலைகளிலும் காட்டத் தொடங்கியிருக்கின்றது.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு அருகில் டொயோட்டா நிறுவனத்தின் பிடாடி உற்பத்தி ஆலை இயங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதிச் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியும், ஜூலை மாதம் 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பணியாற்றியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை அரசு வழிகாட்டுதலின்படி தனிமைப்படுத்தியிருக்கின்றது டொயோட்டா நிறுவனம். இத்துடன், அவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

இதுமட்டுமின்றி, அந்த மூன்று பணியாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய தகவல்களையும் டொயோட்டா நிர்வாகம் சேகரிக்க தொடங்கியிருக்கின்றது. அவர்களுக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என கருதி இந்த நடவடிக்கையில் அது ஈடுபட்டுள்ளது. இதன்படி, மூன்று பணியாளர்களுடன் நேரடி மற்றும் நேரடி அல்லாமல் தொடர்பில் இருந்தவர்களை அது ஆராய்ந்து வருகின்றது.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

டொயோட்டா நிறுவனம் கொரோனா பதற்றம் ஆரம்பித்த தினத்தில் இருந்தே அதன் ஆலையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளது. அது வழக்கமான சுத்தம் செய்யும் முறையைக் காட்டிலும் பல மடங்கு ஆழமான சுத்தப்படுத்துதல் என கூறப்படுகின்றது. இதன்படி, பணியாளர்கள் அதிகம் புழங்கும் பகுதிகள் மற்றும் அவர்கள் அதிகம் கையாளும் கருவிகள் அனைத்தும் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

இருப்பினும், ஆலையில் பணிபுரியும் மூவரை புதிதாக அந்த வைரஸ் பாதித்திருக்கின்றது. இதற்கு முன்னதாகவும் டொயோட்டா உற்பத்தியாலையின் பணியாளர்களைக் கொரோனா வைரஸ் பாதிதது குறிப்பிடத்தகுந்தது. அதன்படி, இதுவரை டொயோட்டா ஊழியர்கள் 23 பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 14 நாட்கள் மருத்துவ வசதியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

அவ்வாறு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை அவ்வப்போது டொயோட்டா நிர்வாகம் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருவதாக கூறப்படுகின்றது. அத்துடன், குறிப்பிட்ட சில வசதிகளையும் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

இதுபோன்று பாதிப்புகள் காரணமாக,லேசான தளர்வுகளுக்கு பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பித்த பிடாடி உற்பத்தியாலை கடந்த ஜூலை மாதம் 14 மற்றும் 20 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் தற்காலிக இழுத்து மூடலைச் சந்தித்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில்தான் உற்பத்தியாலை திறக்கப்பட்டது. மேலும், தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சோதனை காலத்தில் டொயோட்டா பிடாடி ஆலை... விடாது கருப்புபோல் விரட்டும் கொரோனா...

இதற்குள்ளாக மீண்டும் தொற்று சம்பவம் அரங்கேறி, அந்நிறுவனத்தின் வயிற்றில் புளியைக் கரைக்கச் செய்திருக்கின்றது. இதுகுறித்து டொயோட்டா நிர்வாகம் கூறியதாவது, "கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் எங்கள் நிர்வாகம் அதிக முக்கியத்துவம் காட்டுகின்றது. ஊழியர்கள் ஒவ்வொரு தினமும் பணிக்கு திரும்பும்போது அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, தினந்தோறும் ஆலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றது. ஆலை பணியாளர்களின் நலனில் அதிக அக்கறையை நாங்கள் கொண்டுள்ளோம்" என தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
COVID-19 Pandemic: Toyota Registers Three New Positive Cases At Its Plant In Bidadi, Karnataka. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X