அதே பிரம்மாண்டம்... கூடுதல் வசீகரம்... புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் அறிமுகம்

அதிக வசதிகள் மற்றும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடல் குறித்த விபரங்கள், படங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 அதிக சிறப்பம்சங்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் முகப்பில் பல மாற்றங்களுடன் அதிக வசீகரமாக மாற்றப்பட்டுள்ளது. கூடுதலாக எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. பெரிய க்ரில் அமைப்பு, பிரம்மாண்டத்தை கூட்டும் வகையில் மாற்றப்பட்ட பம்பரும் இடம்பெற்றுள்ளது.

 அதிக சிறப்பம்சங்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள், புதிய டிசைனுடன் 18 அங்குல அலாய் வீல்கள், ஸ்லிம்மாக மாறி இருக்கும் புதிய எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 அதிக சிறப்பம்சங்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

அத்துடன், பின்புறத்தில் பம்பர் மறுவடிவமைப்புடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இருமருங்கிலும் ரிஃப்லெக்டர்களும் இடம்பெர்றுள்ளன. கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் சட்டம் காரை சுற்றிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரட்டை வண்ண வெளிப்புறமும் சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது. ரூஃப் ஸ்பாய்லர், சுறா துடுப்பு வடிவிலான ஆன்டென்னா ஆகியவையும் இதர முக்கிய விஷயங்களாக கூறலாம்.

 அதிக சிறப்பம்சங்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் தென்படவில்லை. இந்த புதிய மாடலில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும்.

 அதிக சிறப்பம்சங்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

சற்றே மாறுதல்கள் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

 அதிக சிறப்பம்சங்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

இந்த காரில் க்ரூஸ் கன்ட்ரோல், மோதலை தடுக்கும் விசேஷ தொழில்நுட்பம், நெடுஞ்சாலைகளில் செல்லும்போது தடம் மாறுதல் குறித்த எச்சரிக்கை வழங்கும் தொழில்நுட்பம் என பாதுகாப்பிலும் மிரட்டுகிறது.

 அதிக சிறப்பம்சங்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் தற்போதைய 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் தக்கவைக்கப்படும் என்று தெரிகிறது. தற்போது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

 அதிக சிறப்பம்சங்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

ஆனால், புதிய மாடலில் இந்த எஞ்சின் 204 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் தக்கவைக்கப்படும்.

 அதிக சிறப்பம்சங்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலானது இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 4, 2020, 22:31 [IST]
English summary
Toyota has unveiled the 2021 Fortuner facelift in Thailand. The new (2021) Toyota Fortuner facelift SUV comes with a host of changes and updates, along with a number of added features as well.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+