டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் கவர்ச்சிகரமான டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் டிஆர்டி லிமிடேட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் கவர்ச்சிகரமான டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டின் நம்பர்-1 தேர்வாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி உள்ளது. ஆளுமையானத் தோற்றம், நீடித்த உழைப்பு, நம்பகத்தன்மை, செயல்திறன் மிக்க எஞ்சின், அந்தஸ்தை உயர்த்தும் மதிப்பு ஆகியவை இந்த காருக்கான சந்தையை மிக வலுவாக வைத்திருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் கவர்ச்சிகரமான டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் அதிக ஆக்சஸெரீகள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக TRD என்ற விசேஷ மாடல் விற்பனை செய்யப்படுகிறது. எக்கச்சக்கமான கவர்ச்சிகர அம்சங்கள் இடம்பெற்றிருப்பதால், இந்த சிறப்பு பதிப்பு ஃபார்ச்சூனர் மாடலுக்கு எப்போதுமே வாடிக்கையாளர் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வருகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் கவர்ச்சிகரமான டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், இந்த சிறப்பு பதிப்பு மாடல் விசேஷ காலங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் வகையில், ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் டிஆர்டி எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் கவர்ச்சிகரமான டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி எடிசன் மாடலானது இரட்டை வண்ணத் தேர்வில் கிடைக்கும். அதேபோன்று, கருப்பு வண்ண 18 அங்குல டிஆர்டி எடிசன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சிறிய மாறுதல்கள் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு, பம்பர் இடம்பெற்றுள்ளது. மேலும், விசேஷ டிஆர்டி பேட்ஜ் சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்துகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் கவர்ச்சிகரமான டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த டிஆர்டி ஃபார்ச்சூனரில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், வெல்கம் டோர் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் கவர்ச்சிகரமான டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், 360 டிகிரி கேமரா, ஒளி பின்னணியை வழங்கும் விதத்திலான ஸ்கஃப் பிளேட், தானாக மடங்கிக் கொள்ளும் சைடு மிரர்கள் வசதி, இரட்டை வண்ண டேஷ்போர்டு, நுண்கிருமிகள், தூசி, தும்பட்டிகள், புகை உள்ளிட்டற்றை கவர்ந்து சுத்திகரிக்கப்பட்ட காற்றை பயணிகள் பெறுவதற்கான ஏர் ஐயோனைசர் கருவி ஆகியவை இந்த ஸ்பெஷல் மாடலில் இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் கவர்ச்சிகரமான டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி மாடலில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 175 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு உள்ளது. பேடில் ஷிஃப்ட் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் ஐட்லிங் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதியும் உள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் கவர்ச்சிகரமான டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி லிமிடேட் எடிசன் மாடலின் 2 வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.34.98 லட்சம் விலையும், 4 வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.36.88 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் பிரிமீயம் எஸ்யூவி வாங்க திட்டமிடுவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 6, 2020, 18:30 [IST]
English summary
Toyota has launched Fortuner TRD Limited Edition In India and prices starting at Rs.34.98 Lakh (Ex-Showroom).
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+