செம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த டொயோட்டா... என்னனு தெரியுமா?

சத்தமே இல்லாமல் தரமான சம்பவம் ஒன்றை டொயோட்டா செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த டொயோட்டா... என்னனு தெரியுமா?

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரண்டு ஜாம்பவான் நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் இருந்து வெளிவந்த முதல் தயாரிப்பு டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக உள்ள மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா.

செம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த டொயோட்டா... என்னனு தெரியுமா?

டொயோட்டா க்ளான்சா கார் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட அப்படியே மாருதி சுஸுகி பலேனோ போன்றேதான் உள்ளது. ஆனால் புதிய முன்பக்க க்ரில் அமைப்பு மற்றும் புதிய பேட்ஜ்கள் ஆகியவற்றுடன் தோற்றத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இந்திய மார்க்கெட்டில் மாருதி சுஸுகி பலேனோ விற்பனையில் அசத்தி வருகிறது.

செம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த டொயோட்டா... என்னனு தெரியுமா?

அதனுடன் ஒப்பிடும்போது டொயோட்டா க்ளான்சா மிகவும் பின்தங்கியுள்ளது. இருந்தாலும் மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டொயோட்டா க்ளான்சா பதிவு செய்து வருகிறது. இந்த சூழலில் டொயோட்டா க்ளான்சா கார் விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது.

செம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த டொயோட்டா... என்னனு தெரியுமா?

ஆம், 25,000 யூனிட்கள் விற்பனை என்ற புதிய மைல்கல்லை டொயோட்டா க்ளான்சா கார் கடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம்தான் இந்த புதிய மைல்கல் எட்டப்பட்டது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை அதாவது 10 மாதங்களில், 25,002 க்ளான்சா கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

செம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த டொயோட்டா... என்னனு தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 2,104 க்ளான்சா கார்களை விற்பனை செய்தது. இதன் மூலமாக க்ளான்சா காரின் மொத்த விற்பனை எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. இந்திய மார்க்கெட்டில் மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட மாடல்களுடன் டொயோட்டா க்ளான்சா நேருக்கு நேராக போட்டியிட்டு வருகிறது.

செம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த டொயோட்டா... என்னனு தெரியுமா?

மாருதி சுஸுகி பலேனோ பெட்ரோல் மற்றும் டீசல் (சமீப காலம் வரை) என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், க்ளான்சா கார் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டும்தான் கிடைக்கிறது. அதே சமயம் பிஎஸ்-6 சகாப்தத்தில், இந்த இரண்டு கார்களும் ஒரே இன்ஜின் ஆப்ஷன் உடன்தான் விற்பனை செய்யப்படவுள்ளன.

செம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த டொயோட்டா... என்னனு தெரியுமா?

டொயோட்டா க்ளான்சா காரில் மிகவும் புகழ்பெற்ற சுஸுகி 1.2 லிட்டர் கே12பி பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமான இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எஸ்எச்விஎஸ் 1.2 லிட்டர் ட்யூயல்ஜெட் ட்யூயல்-விவிடிஐ பெட்ரோல் வேரியண்ட்டையும் கூட வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

செம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த டொயோட்டா... என்னனு தெரியுமா?

இது அதிகபட்சமாக 90 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மாருதி சுஸுகி பலேனோ காரும், டொயோட்டா க்ளான்சா காரும் பெரும்பாலான விஷயங்களில் ஒன்று போலவே இருக்கின்றன. க்ளான்சாவை தொடர்ந்து, டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் இருந்து இன்னும் பல்வேறு கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Glanza Premium Hatchback Sales Cross 25,000 Mark. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X