அமெரிக்கர்களை கிறங்கடிக்க டொயோட்டா ஹேரியர் புது அவதாரம்... பெயர் மட்டுமல்ல தொழில்நுட்பங்களும் புதுசு
வட அமெரிக்காவில் டொயோட்டா நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்றான ஹேரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதிய பெயர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் அது களமிறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டொயோட்டா நிறுவனம், இந்திய சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் டாடா ஹாரியர் எஸ்யூவி காரை ஒத்தவாறு டொயோட்டா ஹேரியர் காரை சர்வதேச சந்தையில் விற்பனைச் செய்து வருகின்றது. இவ்விரு கார்களும் உருவம் மற்றும் பெயரில் ஒரே மாதிரியானதாகக் காணப்பட்டாலும் இவற்றிற்கிடையே எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இருப்பினும், தோற்றம் மற்றும் பெயர் பரீட்சயமானதாக இருப்பதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சர்வதேச சநதையில் அதன் ஹாரியர் காரை பஸார்ட் ஸ்போர்ட் என்ற பெயரில் களமிறக்கி வருகின்றது. இதேபோன்று, விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கும் 7 சீட்டர் கிராவிடஸ் காரை டாடா பஸார்ட் என்ற பெயரில் களமிறக்க இருக்கின்றது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இந்நிலையில், டாடா நிறுவனத்தைப் போலவே டொயோட்டா நிறுவனமும் அதன் ஹேரியர் க்ராஸோவர் காரை புதிய பெயரில் சர்வதேச சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில், வட அமெரிக்காவில் வென்சா என்ற பெயரில் அக்கார் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், ஏடபிள்யுடி மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், டொயோட்டா ஹேரியர் காரின் அசல் வடிவமைப்பில் இருந்து எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாலே அது வட அமெரிக்காவில் களமிறங்கியுள்ளது. அதேசமயம், அமெரிக்கர்களுக்கு இடது கை இயக்கியுடன் இது களமிறக்கப்பட்டுள்ளது.

எனவே, 2021 டொயோட்டா ஹேரியர் (வென்சா) காரில் இரு 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினே காணப்படுகின்றது. இது, 2.0 லிட்டர் டைனமிக் ஃபோர்ஸ் ஜிடிஐ தரத்திலும், 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் தரத்திலும் கிடைக்கின்றது. இதில், ஜிடிஐ வெர்ஷன் அதிகபட்சமாக 169 பிஎச்பி பவரையும், 207 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது டொயோட்டாவின் டைரக்ட் ஷிஃப்ட் சிவிடி யூனிட் மூலம் இயங்கும்.

இதேபோன்று, ஹைபிரிட் சிஸ்டத்துடன் கிடைக்கும் டொயோட்டா ஹேரியர் (வென்சா) 88 கிலேவாட்டை (118 பிஎச்பி) வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எரிபொருள் எஞ்ஜினுடன் இணைந்து இயங்கும்போது அதிகபட்சமாக 215 பிஎச்பி வரை வெளிப்படுத்தும்.

எஞ்ஜின் தரத்தில் மட்டுமின்றி இன்டீரியர் அம்சத்திலும் அமெரிக்கர்களைக் கிரங்கடிக்கும் வகையிலான சிறப்பு வசதிகளை இந்த கார் பெற்றிருக்கின்றது. அதாவது, 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், சாஃப்ட் டச் க்ளைமேட் கன்ட்ரோல் பொத்தான்கள், எலக்ட்ரோ க்ரோமிக் "ப்ரோஸ்ட் கன்ட்ரோல்" பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் ஐஆர்விஎம் மற்றும் பவர் டெயில்கேட் உள்ளிட்டவை இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.

இதுமட்டுமின்றி, ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், டிரைவ் அசிஸ்ட் போன்ற பிரிமியம் வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. சமீபகாலமாக உலக சந்தையில் க்ரோஸோவர் எஸ்யூவி ரக கார்களுக்கு நிலவி வரும் டிமாண்டைத் தொடர்ந்தே டொயோட்டா நிறுவனம், அதன் பிரபல கார்களை உலகளவில் சந்தைப்படுத்தி வருகின்றது. இதற்காக அக்கார்களை புது ஸ்டைல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அப்கிரேட் செய்து வருகின்றது.

இதனடிப்படையிலேயே டொயோட்டா ஹேரியர், வென்சா என்னும் புதிய பெயரில் அப்கிரேட் செய்யப்பட்டு வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹேரியர் எஸ்யூவி கார் டொயோட்டாவின் தயாரிப்பில் மிக நீண்ட காலமாக இருந்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, கடந்த 1997ம் ஆண்டில் இருந்து இந்த கார் சர்வதேச சந்தையில் விற்பனையில் இருந்து வருகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் இருக்கும் டொயோட்டா ஹேரியர் 2013ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகமான தலைமுறையாகும்.

இதைத்தொடர்ந்தே, இந்த காரின் புதிய தலைமுறை தற்போது உலக நாடுகள் பலவற்றில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் இந்த க்ராஸோவர் காரின் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டது. அதில், முந்தைய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை ஹேரியருக்கு இடையேக் காணப்படும் வித்தியாசங்கள், அப்கிரேஷன் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பழைய தலைமுறையைக் காட்டிலும் புதிய தலைமுறை ஹேரியர் ஸ்டைல் மற்றும் அதிக திறனை வெளிப்படுத்தும் அசாத்திய அப்கிரேஷனுக்கு உயர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதற்காக, டொயோட்டா நிறுவனம் டிஎன்ஜிகே (ஜிஏ-கே) என்ற பிளாட்பாரத்தின் வைத்து ஹேரியரை உருவாக்கி வருகின்றது. இந்த பிளாட்பாரத்தில்தான் அதன் பிற பிரபல மாடல்களா ஆர்ஏவி5 மற்றும் லெக்ஸஸ் ஆர்எக்ஸ் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








