டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்!

இந்தியாவின் எம்பிவி ரக கார் மார்க்கெட்டில் தன்னிகரற்ற மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் உள்ளது. இந்தியர்களின் கனவு கார் மாடல்களில் ஒன்றாக இருந்து வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கியா கார்னிவல் மற்றும் புதிய மாருதி எர்டிகா கார்களால் போட்டி அதிகமாகி உள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்!

இந்த நிலையில், சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்த்து, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட இன்னோவா க்ரிஸ்ட்டா கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விஎக்ஸ் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக இந்த மாடல் வந்துள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்!

இந்த மாடலில் கருப்பு வண்ண கூரை, இரட்டை வண்ண பம்பர்கள், கருப்பு வண்ண டோர் சில் கார்கள், வீல் ஆர்ச் கிளாடிங், கருப்பு வண்ண அலாய் வீல்கள் இதற்கு தனித்துவத்தை அளிக்கிறது. உட்புறத்திலும் முழுமையான கருப்பு வண்ண தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்!

வெளிப்புறத்திலும் உட்புறத்தில் சீட் கவர்கள் உள்ளிட்டவற்றில் லீடர்ஷிப் எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பது இதன் கூடுதல் சிறப்பு சேர்க்கின்றது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்!

தவிரவும், விஎக்ஸ் வேரியண்ட்டில் அளிக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்!

ஆனால், சாதாரண விஎக்ஸ் வேரியண்ட்டைவிட இந்த ஸ்பெஷல் விஎக்ஸ் வேரியண்ட்டில் காரை ஆஃப் செய்யும்போது தானாக மடங்கிக் கொள்ளும் சைடு வியூ மிரர்கள், 360 டிகிரி கேமரா ஆகியவை கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்!

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் மாடலில் 2.4 லிட்டர் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் விலை விபரம்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் லீடர்ஷிப் எடிசன் மாடலுக்கு ரூ.21.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண விஎக்ஸ் வேரியண்ட்டைவிட ரூ.62,000 கூடுதல் விலையில் இந்த ஸ்பெஷல் மாடல் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 10, 2020, 10:29 [IST]
English summary
Toyota has launched Innova Crysta Leadership Edition with additional features in India.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+