Just In
- 15 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காரை எப்படி பார்க் செய்வதுனு இவருகிட்ட கத்துக்கோங்க... ஆனா, மிஸ் ஆச்சுன காரோட கத குளோஸ்தான்..!
அசாத்திய திறனைக் கொண்டு இளைஞர் ஒருவர் காரைப் பார்க்க செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் தற்போதும் கார்களைப் பார்க் செய்வதில் மிகப் பெரிய சிக்கல் நிலவுகின்றது. குறைந்த இடம், அதிகரித்து வரும் வாகனங்கள் போன்றவற்றால் வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களை சாலையோரம் அல்லது வேறு இடங்களில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்காரணமாகவே பெரும்பாலானோர் சிறிய கார்களை வாங்குகின்றனர்.

பெரிய கார்களின் மீதான மோகம் மற்றும் குடும்ப தேவை ஆகியவற்றிற்காக அக்கார்களை வாங்கினாலும் அவற்றை எங்கு பார்க் செய்வது என்பது கேள்வியாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே பலரை சிறிய உருவம் கொண்ட மற்றும் ஹேட்ச் பேக் கார்களின் பக்கம் தள்ளி வருகின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையில் இளைஞர் ஒருவர் தான் வைத்திருக்கும் பிரமாண்ட உருவமுடைய காருக்கு போதிய பார்க்கிங் இடமில்லை என்றாலும், வம்புகட்டி மிகவும் ஆபத்தான இடத்தில் இன்னோவா காரை பார்க் செய்திருக்கின்றார். மிகக் குறுகிய இடத்தில் பார்க் செய்திருக்கும் காரை எப்படி அந்த இளைஞர் வெளியேற்றுகின்றார் என்பதை வெளிப்படுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பார்க் செய்ய துளியளவும் ஏற்பு இல்லாத ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இன்னோவா கார், வெளி வருவதே சந்தேகம் என்ற நினைப்பை ஏற்படுத்தும் வேலையில், தன்னுடைய அசாத்திய கார் ஓட்டும் திறனைக் கொண்டு மிகச் சொற்பமான நேரத்திலேயே அக்காரை இளைஞர் வெளியேற்றுகின்றார்.

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் இன்னோவா காரின் வீல் பேஸைக் காட்டிலும் சில நூறு மிமீ அளவு மட்டுமே அக்கார் நிறுத்தப்பட்ட இடத்தில் இடைவெளி அமைந்திருக்கின்றது. எனவேதான், அக்கார் வெளியேறுமா என்ற சந்தேகம் வீடியோவைப் பார்த்த அனைவரின் மத்தியிலும் தோன்றுகின்றது. மேலும், அக்காரை வேறு ஏதேனும் கருவியைக் கொண்டு வெளியேற்றுவார்களோ என்ற எண்ணத்தைத் தோன்ற செய்கின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையில், நொடிப்பொழுதில் எந்தவொரு கருவியின் உதவியுமின்றி அக்காரின் உரிமையாளர் மிகவும் அசால்டாக காரை வெளியேற்றிருக்கின்றார். இது சற்று ரிஸ்கான செயலான இருந்தாலும் அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்று வருகின்றது. அதேசமயம், அக்காரின் ஓட்டுநர் சிறிது கவனத்தைச் சிதற விட்டிருந்தாலும் மிக மோசமான சூழ்நிலையை இன்னோவா எஸ்யூவி சந்தித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காரை வெளியேற்ற அந்த இளைஞர் தனது நண்பரின் உதவியை நாடியிருக்கின்றார். அதாவது வெளிப்புறத்தில் இருந்து ஓர் இளைஞர் செல்போன் வாழியிலாக வழிகாட்ட, கார் மெல்ல மெல்ல வெளியேற்றப்படுகின்றது. நிச்சயம், அந்த நொடி அவ்விருக்கும் திக் திக் தருணத்தை ஏற்படுத்தியிருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

கார் வெளியேற்றப்பட்ட வீடியோ மட்டுமின்றி அதே இடத்தில் இன்னோவா கிரிஸ்டா கார் பார்க் செய்யப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விரு வீடியோக்களும் சாந்தோனில் நாக் எனும் யுட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலமே கேரள இளைஞரின் அசாத்திய திறன் வெளியுலகிற்து தெரிய வந்துள்ளது.

இதுமட்டுமில்லைங்க, இதற்கு முன்பாக பல்வேறு வீடியோக்கள் பார்க்கிங் பற்றி வெளிவந்திருக்கின்றன. அந்தவகையில் மாருதி சுசுகி சென் ஹேட்ச்பேக் காரை பார்க் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியாகி, பலரைக் கவர்ந்தது. ஆனந்த் மஹிந்திராவைக்கூட இந்த வீடியோ வெகுவாக கவர்ந்திருந்தது. அவர், அந்த கார் பார்க் செய்யும் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இம்மாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது இன்னோவா கார் பொருத்தமற்ற இடத்தில் பார்க் செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்ட வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த வீடியோ இன்னும் ஆனந்த் மஹிந்திராவின் கண்களில் சிக்கவில்லை என நினைக்கின்றோம். ஏனெனில் இந்த வீடியோவை இன்னும் அவர் பகிரவில்லை. விரைவில் அவரால் இந்த பகிரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.