சர்வீஸ் கட்டணத்தை மாதத் தவணையாக செலுத்தும் வசதி: டொயோட்டா அறிமுகம்

டொயோட்டா கார்களுக்கான சர்வீஸ் கட்டணத்தை மாதத் தவணைகளில் செலுத்தும் தி்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா கார் சர்வீஸ் கட்டணத்தை தவணையாக செலுத்தும் வசதி!

கொரோனா பிரச்னை காரணமாக லட்சக்கணக்கானோர் வருவாய் இழப்பு காரணமாக பெரும் நிதி நெருக்கடிகளில் சிக்கி இருக்கின்றனர். மேலும், இந்த நிலை சீரடைவதற்கு பல மாதங்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மனதில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகை திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

டொயோட்டா கார் சர்வீஸ் கட்டணத்தை தவணையாக செலுத்தும் வசதி!

அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. முதலாவதாக, பராமரிப்பு மற்றும் பழுது நீக்குப் பணிகளுக்கான கட்டணத்தை மாதத் தவணைகளில் செலுத்தும் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டொயோட்டா கார் சர்வீஸ் கட்டணத்தை தவணையாக செலுத்தும் வசதி!

தற்போது வருவாய் இழப்பு மற்றும் சம்பள குறைப்பு பிரச்னையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் குறித்த நேரத்தில் தங்களது டொயோட்டா கார்களை சர்வீஸ் செய்து கொள்வதற்கு ஏதுவாக இந்த மாதத் தவணை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், சர்வீஸ் கட்டணத்தை மாதத் தவணைகளில் செலுத்தும் கடன் திட்டத்திற்கு 100 சதவீதம் பிராசஸிங் கட்டணத்திலிருந்து விலக்கு பெறும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கார் வாங்குவதற்கு அனைத்து நிறுவனங்களும் சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்து வந்த நிலையில், டொயோட்டா நிறுவனம் பழுதுநீக்கு கட்டணத்திற்கும் சிறப்பு மாதத் தவணை திட்டத்தை அறிவித்துள்ளது.

டொயோட்டா கார் சர்வீஸ் கட்டணத்தை தவணையாக செலுத்தும் வசதி!

இதுதவிர்த்து, வாட்ஸ் அப் மூலமாக டொயோட்டா நிறுவனத்தை எளிதாக தொடர்பு கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. காரை சர்வீஸ் செய்வதற்கான புக்கிங், கார் பழுதானால் உடனடியாக உதவி பெறுவதற்கான வசதிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக இந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா கார் சர்வீஸ் கட்டணத்தை தவணையாக செலுத்தும் வசதி!

இந்த வாட்ஸ் அப் எண் மூலமாக புதிய டொயோட்டா கார் குறித்த விபரங்கள், வாங்குவதற்கான வழிமுறைகள், பழைய காரை விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன்மூலமாக உடனடியாக உதவி மற்றும் சேவைகளை பெற வழிகிடைத்துள்ளது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motor (TKM) has announced the introduction of two new service offerings to ensure convenience and ease - Flexible EMI Option and Toyota Official Whatsapp. These two services have been introduced to provide the best customer experience based on changing needs and customer expectations.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X