தீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்? - புதிய தகவல்கள்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய டெயோட்டா அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் ரக எஸ்யூவி வரும் தீபாவளி பண்டிகையொட்டி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

தீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்?

கார் வர்த்தகத்தை செம்மைப்படுத்தும் விதத்தில், மாருதி சுஸுகி - டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இதன்படி, முதலீடுகளை குறைத்து, கார் வர்த்தகத்தில் அதிக லாபத்தை ஈட்டும் வகையிலான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில், மாருதி பிராண்டில் விற்பனையாகும் கார்களை டொயோட்டா நிறுவனமும் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்கிறது.

தீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்?

முதல் மாடலாக மாருதி பலேனோ காரை ரீபேட்ஜ் செய்து க்ளான்ஸா என்ற பெயரில் டொயோட்டா களமிறக்கியது. இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது மாடலாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாருதி பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் இந்த ரீபேட்ஜ் எஸ்யூவி சந்தைக்கு வர உள்ளது.

தீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்?

கொரோனா பிரச்னை காரணமாக, டொயோட்டா அர்பன் க்ரூஸர் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வரும் அக்டோபரில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக காடிவாடி செய்தி தெரிவிக்கிறது.

தீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்?

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அடிப்படையிலான மாடலாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி வர இருக்கிறது. வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது. மாருதி சுஸுகி லோகோவுக்கு பதிலாக டொயோட்டா லோகோ இடம்பெற்றிருக்கும். இதற்காக, மிகச் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது.

தீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்?

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கலாம். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்படும்.

தீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்?

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், வாய்ஸ் கமாண்ட் வசதி, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் இடம்பெற்றிருக்கும்.

குறிப்பு: மாருதி விட்டாரா பிரெஸ்ஸா படங்கள் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்?

இந்த எஸ்யூவியில் இரண்டு ஏர்பேக்குகல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி தொழில்நுட்பம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்லிட்ட பாதுகாப்பு வசதிகள் உயர் வேரியண்ட்டுகளில் வழங்கப்படும்.

தீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்?

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.


More from DriveSpark

Article Published On: Monday, July 20, 2020, 16:30 [IST]
English summary
Toyota is planning to launch new Urban Cruiser SUV around the festive season this year.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+