விரைவில் வருகிறது டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு தனித்துவமான அம்சங்களுடன் டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

விரைவில் வருகிறது டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் டொயோட்டா யாரிஸ் கார் முக்கிய தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எனினும், அண்மையில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் மற்றும் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. போதாக்குறைக்கு, மாருதி சியாஸ் காரும் கடும் போட்டியை தந்து வருகிறது. இதனால், டொயோட்டா யாரிஸ் கடும் நெருக்கடியில் உள்ளது.

விரைவில் வருகிறது டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

இதனை கருத்தில்கொண்டு, கவர்ச்சிகரமான அம்சங்களுடன் யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடலை டொயோட்டா விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

விரைவில் வருகிறது டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

டொயோட்டா யாரிஸ் பிளாக் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வர இருக்கிறது. பெயருக்கு தக்கவாறு, க்ரில் அமைப்பு, பம்பர், பானட், ரியர் வியூ மிரர்கள், பில்லர்கள் ஆகியவை பிரத்யேக கருப்பு வண்ண பூச்சுடன் வர இருக்கிறது. இதனால், சாதாரண யாரிஸ் காரிலிருந்து இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் தனித்துவமாகவும், அதிக கவர்ச்சியாகவும் இருக்கிறது.

விரைவில் வருகிறது டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

இந்த காரில் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் அலங்கார பாகங்களுடன் வசீகரிக்கிறது. புதிய டிசைனிலான 15 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விரைவில் வருகிறது டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

இந்த லிமிடேட் எடிசன் மாடலில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

விரைவில் வருகிறது டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 106 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

விரைவில் வருகிறது டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

இந்த காரின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 18.10 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.

விரைவில் வருகிறது டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

டொயோட்டா யாரிஸ் கார் ஜே, ஜி, வி மற்றும் விஎக்ஸ் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், டாப் வேரியண்ட் அடிப்படையில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. சாதாரண வேரியண்ட்டைவிட ரூ.30,000 கூடுதல் விலையில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் கொண்டு வரப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 4, 2020, 10:29 [IST]
English summary
Toyota is all set to launch Yaris black limited edition model in India soon.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+