டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு எப்போது முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

சந்தைப் போட்டி மிகுந்த காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா கார் நிறுவனம் விரைவில் களமிறங்க உள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலானது வரும் பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில், இந்த மாதம் இறுதியில் அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட உள்ளதாக டொயோட்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

இதைத்தொடர்ந்து, செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் பாதியில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கும், டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கும் இடையில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு வேறுபடுத்தப்பட்டு இருக்கும். குறிப்பாக, புதிய க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கும். அத்துடன், டொயோட்டா லோகோவுடன் வர இருக்கிறது. 4 மீட்டர் நீளத்திற்குள் அடக்க வகை எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய அலாய் வீல்கள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் வழங்கப்படும் பேஸ் வேரியண்ட்டுகள், புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் தவிர்க்கப்படும் வாய்ப்புள்ளது. இதனால், பிரெஸ்ஸாவைவிட ஆரம்ப விலை அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. க்ளான்ஸா காருக்கு குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு கிடைத்த நிலையில், அதே பாணியில் தற்போது அர்பன் க்ரூஸர் எஸ்யூவியையும் மிகுந்த நம்பிக்கையுடன் டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: மாதிரிக்காக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா படங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, August 15, 2020, 10:55 [IST]
English summary
டொயோட்டா அர்பன் க்ரூஸர், டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங், டொயோட்டா கார், டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஞ்சின் விபரம்
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+