டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

அர்பன் க்ரூஸர் என்ற பெயரிலான புதிய காம்பேக்ட் எஸ்யூவியுடன் டொயோட்டா கார் நிறுவனம் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் களம் காண உள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக வர இருக்கும் புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு நாளை முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

அடுத்த மாதம் முறைப்படி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் டெலிவிரிப் பணிகள் அடுத்த மாத பிற்பாதியில் துவங்கப்பட உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

இந்த நிலையில், நாளை முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கியத் தகவல்கள் காடிவாடி தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது. காரின் விபரங்கள் அடங்கிய கையேடு மூலமாக இந்த விபரங்கள் உறுதியாகி இருக்கின்றன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் இடம்பெற உள்ளன. புதிய க்ரில் அமைப்புடன், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி ஸ்டாப் லைட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. மற்றபடி, விட்டாரா பிரெஸ்ஸாவின் ஒட்டுமொத்த டிசைனில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

இந்த காரின் உட்புற டிசைனிலும் மாற்றங்கள் அதிகம் இல்லை. அதே டேஷ்போர்டு அமைப்புதான் கொடுக்கப்படுகிறது. ஆனால், கருப்பு - பழுப்பு வண்ண இன்டீரியர் தீம் இடம்பெறுகிறது. இதனால், உட்புறம் பிரிமீயமாக தெரிகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் இருக்கும் அதே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் இந்த காரிலும் வழங்கப்பட உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியும் கொடுக்கப்படும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம், எலெக்ட்ரோக்ரோமிக் உட்புற ரியர் வியூ மிரர், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளிட்ட பல முக்கிய வசதிகளும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் இடம்பெறுகிறது. இந்த கார் 6 ஒற்றை வண்ணத் தேர்விலும், 3 இரட்டை வண்ணக் கலவை தேர்வுகளிலும் கிடைக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின்தான் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் விபரம் இதோ!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் விரைவில் வரும் கியா சொனெட் ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 21, 2020, 16:30 [IST]
English summary
Toyota Kirloskar Motors (TKM) is all set to introduce their new sub-4-metre compact-SUV, the Urban Cruiser in the Indian market. The new Toyota Urban Cruiser, which is essentially a rebadged version of the Maruti Suzuki Vitara Brezza is said to go on sale in India sometime next month.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+