புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

டொயோட்டா வெல்ஃபயர் காரில் இடம்பெற இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

டொயோட்டா நிறுவனம் அல்ஃபார்டு என்ற சொகுசு மினி வேன் வகை வாகனத்தை வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் மிக விலை உயர்ந்த வேரியண்ட்டாக வெல்ஃபயர் மாடல் விற்பனையில் உள்ளது. இந்த மாடலை இந்தியாவில் நாளை மறுதினம் (பிப்ரவரி 26) விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது டொயோட்டா நிறுவனம்.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில், புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் எக்ஸிகியூட்டிவ் லான்ச் என்ற ஒரே வேரியண்ட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் அதிகபட்சமான வசதிகளை அளிக்க டொயோட்டா முடிவு செய்துள்ளது.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் நடுவரிசையில் விஐபி இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. புஷ்பேக் வசதியுடன் கால்களை வைத்துக் கொள்வதற்கான வசதிகளும் உள்ளன.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

இதன்படி, இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், இரண்டு சன்ரூஃப் அமைப்புடன் வர இருக்கிறது. இந்த சொகுசு எம்பிவி காரில் உட்புறத்தில் வாடிக்கையாளர்களை திணற அடிக்கும் விதத்தில், ஏராளமான வசதிகள் அளிக்கப்படுகின்றன.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

இந்த காரில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பவர் ஸ்லைடிங் கதவுகள், உட்புறத்தில் 13 அங்குல டிவி திரைகள், வைஃபை இணைய வசதி, 17 ஸ்பீக்கர்களுடன் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

இந்த காரில் 10 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், பனோரமிக் ரியர் வியூ மானிட்டர், வெஹிக்கிள் டைனமிக் இன்டகிரேட்டட் மேனேஜ்மென்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன. இந்த கார் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு மின் மோட்டார்கள் கொண்ட ஹைப்ரிட் மாடலாக வர இருக்கிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎஸ் பவரையும், 198 என்எம் டார்க் திறனையும் வழங்கும். முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார் 143 பிஎஸ் பவரையும், பின்புற ஆக்சிலில் இருக்கும் மின் மோட்டார் 68 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும்.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

இந்த கார் ஹைப்ரிட் மைலேஜ் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 16.35 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான காருக்கு இது மிகச் சிறப்பானதாக கருதலாம்.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் முக்கிய அம்சங்கள் விபரம்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் 4,935 மிமீ நீளமும், ,1850 மிமீ அகலமும், 1,895 மிமீ உயரமும், 3,000 மிமீ வீல் பேஸ் நீளமும் பெற்றிருக்கிறது. இந்த காருக்கு நேரடி போட்டியாக இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காருக்கு நேரடி போட்டியாக கருதலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 24, 2020, 10:10 [IST]
English summary
Japanese auto giant, Toyota Vellfire feature details revealed for India ahead of its launch on 26 February.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+