டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

டொயோட்டா வெல்ஃபயர் கார் ஆரம்பத்திலேயே பெரிய அளவிலான வரவேற்பை இந்தியாவில் பெற்றிருக்கிறது. இந்தியாவில் இந்த புதிய சொகுசு காருக்கான புக்கிங் முதல் மூன்று மாதங்களுக்கு முடிந்துவிட்டதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

இன்னோவா எம்பிவி கார் மூலமாக டொயோட்டா நிறுவனம் இந்தியர்களை வசியப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக புதிய வெல்ஃபயர் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

இந்த கார் புதிய இறக்குமதி சட்டத்தின் கீழ் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. ரூ.79.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்திருக்கும் இந்த கார் இந்தியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காருக்கு இணையான விலையில் வந்தாலும், டொயோட்டா மீதான நம்பகத்தன்மை காரணமாக, இந்த காருக்கு துவக்கத்திலேயே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம். முதல் மூன்று மாதங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கார்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாம்.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

அதாவது, வரும் ஏப்ரல் மாதம் வரை மூன்று லாட்டுகளில் 180 வெல்ஃபயர் கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. ஒவ்வொரு லாட்டிற்கும் தலா 60 கார்கள் வீதம் இறக்குமதி செய்யப்படும். இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வரை இந்த காருக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

புதிய டொயோட்டா கார் சொகுசு எம்பிவி கார் மாடலாக கூறப்பட்டாலும், இது சொகுசு ரக மினி வேன் போல காட்சியளிக்கிறது. மிக பிரம்மாண்டமான முகப்பு வடிவமைப்பு, வேன் போன்ற தோற்றம், உட்புறத்தில் சிறப்பான அம்சங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் இந்த கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக நன்மதிப்பை பெற்றிருக்கிறது. அதனை வைத்தே, இந்தியர்கள் இந்த காரை சுலபமாக மதிப்பிட்டு முன்பதிவு செய்துள்ளனர்.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஸ்லைடிங் வகை பின்புற கதவுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. உட்புறத்தில் மூன்று வரிசை இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. 6 பேர் பயணிக்கலாம். இந்த காரின் நடுவரிசை இருக்கைகள்தான் ஹைலைட்டான விஷயம்.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

நடுவரிசையில் புஷ் பேக் வசதியுடன் இரண்டு கேப்டன் இருக்கைகளும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும். இந்த காரின் நடுவரிசை இருக்கைகளை எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் முறையில் சாய்த்துக் கொள்வதற்கான வசதி, ஆர்ம் ரெஸ்ட், லெக் ரெஸ்ட் வசதிகள் மிக சொகுசான பயண அனுபவத்தை தரும்.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

இரண்டு சன்ரூஃப் அமைப்புகள், இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், டிவி திரை, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

பாதசாரிகள் சாலை குறுக்கே கடப்பதை முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி, மோதல் தடுப்பு தொழில்நுட்பம், ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் மற்றொரு முக்கிய விஷயமாக, இது பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் துணையுடன் இயங்கும் ஹைப்ரிட் வகை மாடலாக வந்துள்ளது. இதன் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 198 என்எம் டார்க் திறனையும் வழங்கும். முன் ஆக்சில் மின் மோட்டார் 141 பிஎச்பி பவரையும், பின் ஆக்சில் மின் மோட்டார் 67 பிஎச்பி பவரையும் வழங்கும்.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

இந்த காரில் எஞ்சின் சக்தியானது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹைப்ரிட் கார் லிட்டருக்கு 16.35 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு முதல் மூன்று மாதங்களுக்கான புக்கிங் முடிந்தது!

அடிக்கடி வெளியூர் செல்லும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், நட்சத்திர விடுதிகளில் விருந்தினர் போக்குவரத்து பயன்பாடு உள்ளிட்டவற்றை மனதில் வைத்து இந்த கார் மாடலை டொயோட்டா களமிறக்கியுள்ளது. இதற்கு கை மேல் பலன் கிட்டியுள்ளதாக கருதலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2020, 11:22 [IST]
English summary
Toyota Vellfire has received overwhelming response in India and sold for first 3 months till April, 2020.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+