அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க! சந்தோஷமான தகவலை சொன்ன ஜெம்!

அரசு அதிகாரிகளை குஷிப்படுத்தும் வகையில் அரசு இ மார்க்கெட் பிளேஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டாவின் பிரபல யாரிஸ் மாடல் அரசின் இ-மார்க்கெட் பிளேஸில் (GeM) சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஓர் சி-செக்மெண்ட் செடான் காராகும். இந்த மாடலின் ஜே எம்டி பெட்ரோல் வேரியண்ட் மட்டும்தான் தற்போது அரசு இ-மார்க்கெட் பிளேஸில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

இந்த கார் ஓர் அதிநவீன மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதனை பயன்பாட்டிற்கும் பெறும் அரசுத் துறை அதிகாரிகள் அதிக பாதுகாப்பான மற்றும் சொகுசான பயண அனுபவத்தைப் பெறுவார்கள் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. எனவே, இந்த கார் பட்டியலில் சேர்ந்ததை அடுத்து ஒரு சில அதிகாரிகள் குஷியில் திகைத்துள்ளனர்.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

அரசு இ-மார்க்கெட் பிளேஸ் என்றால் என்ன?

அரசின் இ-மார்க்கெட் பிளேஸ் பற்றிய அறியாதவர்களுக்காக சுருக்கமாக, கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட இ-காமர்ஸ் தளம்தான் இது. அரசு துறைகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்வதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டது.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

இந்த தளத்தில்தான் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் யாரிஸ் செடான் ரக கார் விற்பனைக்கு வந்துள்ளது. பொதுவாக, நல்ல தரம் மற்றும் அதிக பயனுடைய தயாரிப்புகளை மட்டுமே இந்த தளத்தில் காண முடியும். அதன்படி, டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் மடாலுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரமாக இந்த சம்பவம் இருக்கின்றது.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

பொதுவாக, ஓர் குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பு அரசின் இந்த வணிக தளத்தில் இடம்பெற வேண்டுமானால், முதலில் அப்பொருள்குறித்த அனைத்து தகவலை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதன் பின்னரே அரசு தரப்பில் அந்த பொருளாக்கான அங்கீகாரம் வழங்கப்படும். இதைத்தொடர்ந்தே, அரசுத் துறைகள் மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும்.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

இதனடிப்படையில்தான் தற்போது டொயோட்டா யாரிஸ் காருக்கும் அரசு துறை மற்றும் பொதுத்துறையில் பயன்படுத்துவதற்கான அங்கீரம் கிடைத்துள்ளது. எனவே, விரைவில் அரசு அதிகாரிகளின் பயன்பாட்டில் இக்கார் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காருக்கு அரசின் இ-மார்க்கெட் பிளேஸில் ரூ. 9,12,382 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளு. இதில் டெலிவரி சார்ஜும் அடங்கும்.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

டொயோட்டா நிறுவனம் சமீபத்திலேயே இந்த யாரிஸ் காரை அப்கிரேட் செய்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன்படி, ட்யூவல் டோன் நிறம் என பல்வேறு அம்சங்கள் இதில் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் இரு நிற தேர்வைக் கொண்ட மாடலாக இருக்கும் வி எம்டி மற்றும் சிவிடி ஆப்ஷன் டொயோட்டா யாரிஸ் மாடலின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்ந்தது.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

இந்த புதிய அப்கிரேடுடன் ஒற்றை நிற தேர்வுகளான வி எம்டி, வி சிவிடி மற்றும் விஎக்ஸ் எம்டி உள்ளிட்ட மாடல்கள் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டன.

அரசின் இ-மார்க்கெட் பிளேஸில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டொயோட்டா யாரிஸ் ஏழு ஏர் பேக்குகளைக் கொண்ட காராக காட்சியளிக்கின்றது. அதுவே, சந்தையில் பார்த்தோமேயானால் இரு ஏர் பேக் கொண்டதாக மட்டுமே கிடைக்கின்றது.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

சமீபத்தில் அப்கிரேட் செய்யப்பட்டதில் பிஎஸ்-6 தர உயர்வும் ஒன்று. இந்த தரத்திலான 1.5 லிட்டர் ட்யூவல் விவிடி-ஐ, நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின்தான் யாரிஸில் காணப்படுகின்றது. இது அதிபட்சமாக 105 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 140 என்எம் டார்க்கை 4,200 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

இத்துடன் பல்வேறு சிறப்பு பிரீமியம் அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஆல் வீல் டிஸ்க் பிரேக், டயர் பிரஷ்ஷர் மாணிட்டர், ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், ஹிலோ ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல், முன்பக்க பார்க்கிங் சென்சார், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர், ரூஃப் மவுண்டட் ஏர் வெண்ட் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

இவற்றுடன், லெதர் இருக்கை, 60:40 ஸ்பிளிட் ஃபோல்டிங் பின்பக்க இருக்கைகள், டச் ஸ்கிரீன் கெஸ்ட்சர் கன்ட்ரோல்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் அதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்ட யாரிஸ் செடான் காரின் ஆரம்பநிலை மாடலின் விலை ரூ. 8.86 லட்சமாக உள்ளது. இது பிஎஸ்-4 மாடலைக் காட்டிலும் ரூ. 10 ஆயிரம் மட்டுமே அதிகம்.

அரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா? கொடுத்து வச்சவங்க சார் அவங்க... சந்தோஷமான செய்தியை சொன்ன ஜெம்...

இந்த மாடலின் உயர்நிலை மாடலுக்கு ரூ. 14.30 லட்சமாக இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இது, பிஎஸ்4-ஐக் காட்டிலும் ரூ. 12 ஆயிரம் உயர்வாகும்.

டொயோட்டாவின் யாரிஸ் கார் மட்டுமே அரசின் இ மார்க்கெட் பிளேஸில் விற்பனைக்கு கிடைக்கலிங்க, இன்னோவா க்ரிஸ்டா எம்பிவியும் அதில் விற்பனைக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 25, 2020, 12:29 [IST]
English summary
Toyota Yaris Available On Government e-Marketplace: Prices Start At Rs 9.12 lakh. Read In Tamil.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+