டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

அசத்தும் அம்சங்களுடன் டொயோட்டா நிறுவனத்தின் புதிய யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி ஐரோப்பிய மார்க்கெட்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையில் இருக்கும் டொயோட்டா யாரிஸ் ஹேட்ச்பேக் காரின் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவிக்கு யாரிஸ் க்ராஸ் என்று டொயோட்டா பெயரிட்டுள்ளது.

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

கடந்த மாதம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற இருந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பிரச்னையால் ஜெனிவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டதால், தற்போது ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

தற்போதைய நிலையில், டொயோட்டா கார் நிறுவனத்தின் மிகச் சிறிய எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. இந்த எஸ்யூவி ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் எஸ்யூவி மாடலானது ஐரோப்பாவில் டொயோட்டா சி எச்ஆர் எஸ்யூவியை விடை குறைவான விலையில் நிலைநிறுத்தப்படும்.

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் எஸ்யூவி பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், வசீகர தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 4.18 மீட்டர் நீளமும், 2.56 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கிறது.

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

யாரிஸ் ஹேட்ச்பேக் காரின் ஹெட்லைட் டிசைன் ஒத்திருந்தாலும், க்ரில் அமைப்பு, பம்பர் ஆகியவை எஸ்யூவி காருக்குரிய மிடுக்குடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் எஸ்யூவியில் பிளாஸ்டிக் க்ளாடிங் சட்டங்கள், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், அழகிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் ஃப்ளோட்டிங் வகை தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஸ்பிளிட் பின் இருக்கைகள் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் எரிபொருள் நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 116 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்காக புதிய காம்பேக்ட் எஸ்யூவி உருவாக்கப்படுவதை டொயோட்டா நிறுவனமும் கூட சூசகமாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. அது டொயோட்டா யாரிஸ் க்ராஸ் அடிப்படையில் இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

டொயோட்டா யாரிஸ் க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு!

ஏனெனில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலை இந்தியாவில் தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. எனினும், இதுபோன்ற தனது சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட மாடலை டொயோட்டா அறிமுகம் செய்ய வேண்டும் என்பது இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 24, 2020, 6:28 [IST]
English summary
Japanese car maker, Toyota has revealed all new compact SUV based on Yaris supermini hatchback car and it will go sale on European markets soon.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+