டாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்ப யாரிஸ்... டொயோட்டா எடுத்த அதிரடி முடிவு!

டாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்பும் வகையில், யாரிஸ் காரில் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

டாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்ப யாரிஸ்... டொயோட்டா எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா ஏற்படுத்தி உள்ள பிரளயம் போன்றே, பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் இந்திய வாகன சந்தையில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த பல கார், பைக் மாடல்கள் சந்தையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

டாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்ப யாரிஸ்... டொயோட்டா எடுத்த அதிரடி முடிவு!

அந்த வகையில், டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்கள் விற்பனயைில் இருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், எட்டியோஸ் செடான் கார் இந்தியாவின் டாக்சி மார்க்கெட்டில் முக்கிய இடத்தை வைத்திருந்தது. ஆனால், பிஎஸ்6 தர எஞ்சின்களுடன் மேம்படுத்தும் முடிவை டொயோட்டா கைவிட்டது.

டாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்ப யாரிஸ்... டொயோட்டா எடுத்த அதிரடி முடிவு!

இதனால், எட்டியோஸ் செடான் கார் மூலமாக கிடைத்து வந்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கான முதலீடு அதிகமாக இருப்பதால், விலக்கிக் கொள்வதே சிறந்தது என்று டொயோட்டா முடிவு செய்துவிட்டது.

டாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்ப யாரிஸ்... டொயோட்டா எடுத்த அதிரடி முடிவு!

இந்த சூழலில், எட்டியோஸ் செடான் கார் மூலமாக ஏற்பட்டுள்ள விற்பனை இழப்பை ஈடுகட்டவும், டாக்சி உரிமையாளர்களுக்கு புதிய தேர்வை வழங்கவும் டொயோட்டா புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

டாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்ப யாரிஸ்... டொயோட்டா எடுத்த அதிரடி முடிவு!

அதன்படி, தனது யாரிஸ் மிட்சைஸ் செடான் கார் மாடலில் டாக்சி மார்க்கெட்டுக்கு உகந்த அம்சங்களுடன் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. இது விலை குறைவான பேஸ் வேரியண்ட்டின் அடிப்படையில் டாக்சி மார்க்கெட்டுக்கு தக்க ஒரு சில கூடுதல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும்.

டாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்ப யாரிஸ்... டொயோட்டா எடுத்த அதிரடி முடிவு!

இந்த டாக்சி வேரியண்ட்டில் வேகக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் இடம்பெற இருக்கின்றது. ஆனால், ஏசி சிஸ்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மட்டுமே இந்த மாடலில் கொடுக்கப்படும். அதிக வசதிகள் இருக்காது.

டாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்ப யாரிஸ்... டொயோட்டா எடுத்த அதிரடி முடிவு!

டொயோட்டா யாரிஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 107 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டாக்சி மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே வரும் என்று எதிர்பார்க்கலாம்.

டாக்சி மார்க்கெட்டில் எட்டியோஸ் இடத்தை நிரப்ப யாரிஸ்... டொயோட்டா எடுத்த அதிரடி முடிவு!

டொயோட்டா யாரிஸ் கார் ரூ.8.77 லட்சம் முதல் ரூ.14.19 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், டாக்சி வேரியண்ட்டானது ரூ.9 லட்சத்தை ஒட்டிய எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Japanese auto manufacturer, Toyota, is focusing on increasing sales for its mass-market offering in the country - the Toyota Yaris. The company is readying itself to launch a new variant meant for cab aggregators.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X