இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

பேருந்து பயணங்களை சொகுசானதாக மாற்றும் வகையில் ஓர் அறிவிப்பை மத்திய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

ஒற்றை உயிர் கொல்லி கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை தனது கோரப்பிடியால் வாட்டி வைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வைரஸ் பரவலின் காரணமாக உலகம் நாடுகள் முழுவதிலும் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

அதாவது, மக்கள் ஒருவருக்கு ஒருவர் இடையே சமூக இடைவெளி விட்டு பயணித்தல், மாஸ்க் மற்றும் கையுறைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடித்து வருகின்றனர். இத்துடன், வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் சானிட்டைசர் மற்றும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுதல் போன்ற நற்பண்புகளையும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

இத்துடன், அரசு சார்பிலும் பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பொது போக்குவரத்துகளில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் விதமாக இருவர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், மூவர் அமரும் வசதிக் கொண்ட இருக்கைகளில் மையப்பகுதியைக் காலியாக விட்டுவிட்டு இரு முனைகளில் மட்டுமே பயணிகளை அமர அனுமதிக்கமாறு அறிவுறுத்தியுள்ளது.

இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களைக் காட்டிலும் சற்று பெரிய அளவில் குறிப்பிட்ட வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, போக்குவரத்து அமைச்சகம், கூட்ஸ் கேரியர்ஸ், பேருந்து மற்றும் லாகிஸ்டிக்ஸ் போன்ற வாகனங்களின் உயரம் மற்றும் நீளத்தை அதிகரித்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

இதன்படி, புதிய பேருந்தின் நீளம் 13.5 மீட்டர் வரை உயர இருக்கின்றது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் வழக்கமான பேருந்தின் அளவு 12 மீட்டராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அளவு உயர்வானது 10 முதல் 15 சதவீதம் வரை இருக்கையின் அமைப்பை உயர்த்த உதவும்.

இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

எனவே, எதிர்கால பேருந்துகள் அதிக இடவசதி மற்றும் லெக் ரூம்களைக் கொண்டதாக இருக்கும் என தெரிகின்றது. இதேபோன்று, லாரிகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றம் அதில் 25 சதவீதம் வரை சரக்குகளை அதிகமாக ஏற்றிச் செல்ல உதவும். இதனால் டிரக் மற்றும் கன்டெய்னர் லாரிகள் கூடுதல் சுமைகளை ஏற்றச் செல்லும் திறனைப் பெறவிருப்பது உறுதியாகியுள்ளது.

இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அரசு இந்த அளவுகளை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின்படி, முழுமையாக அடைக்கப்பட்ட உருவத்தைக் கொண்ட ஓர் டிரக் அல்லது ஐஎஸ்ஓ செரீஸ் சரக்கு வாகனம் ஒட்டுமைொத்தமாக 4.52 மீட்டர் வரை உயரத்தைக் கொண்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

இதுவே மற்ற டிரக்குகள் 4 மீட்டர் வரை மட்டுமே உயரத்தைக் கொண்டிருக்க வேண்டும். முன்னதாக 3.8 மீட்டர்கள் வரை இதன் உயரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

வாகனங்களின் உயரத்தை உயர்த்தும் இந்த திடீர் முடிவு, சரக்கு அதிகம் ஏற்றிச் செல்ல மற்றும் முழுமையாக அடைக்கப்பட்ட வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதுமே முக்கிய நோக்கமாக உள்ளது.

இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

எனவே இந்த மாற்றம் கொரோனா வைரஸ் காரணமாக கொண்டுவரப்பட்டது அல்ல என்பது மிகத் தெளிவாகய தெரிய வந்துள்ளது. அதேசமயம், வைரஸைக் காரணம் காட்டி நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் அதன் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் மைய இருக்கையை நீக்கியிருக்கின்றன.

இனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...

மேலும், ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே சமூக இடைவெளியை உறுதிச் செய்கின்ற வகையில் இடையில் இருக்கும் நீக்கப்பட்டும் வருகின்றன. இதேபோன்று வழிகாட்டுதலே தனியார் பேருந்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களை தனி வாகனங்களில் அழைத்துச் செல்லும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 29, 2020, 19:37 [IST]
English summary
Transport Ministry Allowed To Increa Length & Height Of Buses & Goods Carriers. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+