Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழகத்தில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் சேஸிங் சம்பவம்! பட்டப்பகலில் அரங்கேறிய உறைய வைக்கும் நிகழ்வு
திருச்சி போலீஸார் சுமார் 60 கிமீ விடாமல் விரட்டிச் சென்று லாரி ஒன்றை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் அரங்கேறிய சேஸிங் சம்பவம் பற்றிய தகவலை இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.

திருச்சி போலீஸார் சுமார் 60 கிமீ விடாமல் விரட்டிச் சென்று லாரி ஒன்றை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் அரங்கேறிய சேஸிங் சம்பவம் பற்றிய தகவலை இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.

திருச்சியைச் சேர்ந்தவர் முத்தப்பன். இவர் அரிசி மில் ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு சொந்தமாக குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் லாரிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில், ஒன்றை மர்ம நபர் ஒருவர், லாரியின் டிரைவர் மதிய உணவிற்காக சென்றிருந்தபோது லாவமாக திருடிச் சென்றார்.

இதைக் கண்டுபிடித்த மில்லின் கணக்காளர் குமார், உரிமையாளர் முத்தப்பாவிற்கு எச்சரிக்கைக் கொடுத்தார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் லாரியை விரட்டவும் செய்தார். இவர் மட்டுமின்றி உரிமையாளர் முத்தப்பா மற்றும் ஒரு சிலர் காரின் மூலமாகவும் லாரி விரட்டினர்.

இதற்கிடையில், சம்பவம்குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், லாரியை திருடியவர் விடாமல் வாகனத்தை வேகமாக இயக்கிய வண்ணமே இருந்தார். இந்த நிலையில், ரயில்வே கிராஸிங் பகுதியில் லாரி நிற்க நேரிட்டது. அப்போது ஒரு சிலர் லாரியில் ஏறிக் கொண்டனர்.

இருப்பினும், அந்த திருடர் லாரியை விட்டு இறங்காமலே தொடர்ச்சியாக லாரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் முயற்சியிலேயே ஈடுபட்டார். போலீஸார் சிலர் முயன்றும், அவர்களை தள்ளிவிடும் செயலில் அந்த மர்ம நபர் இறங்கினார். இருப்பினும், இரு போலீஸார் மற்றும் லாரிக்குள் இருந்த அரிசி மில் பணியாளர்கள் இணைந்து அவரை கீழே தள்ளி போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.

இந்த சம்பவத்தால் திருச்சி நெடுஞ்சாலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமீபகாலமாக தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைத் தடுக்கப் போலீஸார் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் திருட்டு தினந்தோறும் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றது.

இந்த நிலையிலேயே சினிமாக் காட்சிகளை மிஞ்சுமளவிற்கு லாரி திருட்டுச் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. சுமார் 60 கிமீ விரட்டுதலுக்கு பின்னரே திருடப்பட்ட லாரி மற்றும் திருடனைப் போலீஸார் மடக்கிப்பிடித்திருக்கின்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த திருட்டுச் சம்பவம் திருச்சி நகரவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று பெரிய வாகனங்களை திருடிக் கொண்டு செல்லும் நபர்களைக் கையாளும்போது சற்று கவனத்துடனேயே கையாள வேண்டும். ரயில் கிராஸிங்கில் நின்ற திருடன் தப்பிப்பதில் இன்னும் வேகத்தையும், தீவிரத்தையும் காட்டியிருந்தால் நிலைமை மிக மோசமானதாக மாறியிருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு அசம்பாவிதமும் இந்த சம்பவத்தின்போது அரங்கேறவில்லை.