குட்இயர் டயர் நிறுவனம் மீது டிரம்ப் கோபம்... தனது காரிலிருந்து குட்இயர் டயர்களை மாற்றவும் முடிவு!

குட்இயர் டயர் நிறுவனம் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், தனது பீஸ்ட் காரில் உள்ள குட்இயர் டயர்களை மாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 குட்இயர் நிறுவனம் மீது அதிபர் டிரம்ப் கடும் கோபம்... தனது காரிலிருந்து குட்இயர் டயர்களை மாற்றவும் முடிவு!

அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் நவம்பர் 3ந் தேதி நடைபெற உள்ளது. மீண்டும் அதிபராக வேண்டும் உத்வேகத்தில் டொனால்டு டிரம்ப் பணியாற்றி வருகிறார். மேலும், தனக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் மற்றும் அணுகுமுறைகளை கடைபிடிக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

 குட்இயர் நிறுவனம் மீது அதிபர் டிரம்ப் கடும் கோபம்... தனது காரிலிருந்து குட்இயர் டயர்களை மாற்றவும் முடிவு!

இந்த வரிசையில், தற்போது குட்இயர் நிறுவனம் அதிபர் டிரம்ப்பின் பார்வையில் சிக்கி இருக்கிறது. அதாவது, மீண்டும் அமெரிக்காவை உயரிய இடத்திற்கு மாற்றுவோம் என்ற பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்துள்ளார். இந்த பிரச்சார வாசகம் அடங்கிய தொப்பிகள் மற்றும் சட்டைகளுடன் டிரம்ப் ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 குட்இயர் நிறுவனம் மீது அதிபர் டிரம்ப் கடும் கோபம்... தனது காரிலிருந்து குட்இயர் டயர்களை மாற்றவும் முடிவு!

இந்த நிலையில், குட்இயர் டயர் நிறுவனம் தனது நிறுவனங்கள் மற்றும் ஆலை வளாகங்களில் பணியாளர்களுக்கான கோட்பாடுகள் குறித்த விளக்க வீடியோ ஒன்றை தயாரித்துள்ளதாக தெரிகிறது. வளாகத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் ஏற்றுக்கொள்ள இயலாத கோட்பாடுகள் குறித்த விஷயங்கல் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், ஏற்றுக்கொள்ள இயலாத கோட்பாடுகளின் பட்டியலில் டிரம்ப் தொப்பி மற்றும் பிரச்சார சட்டை இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இது அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவர் மூலமாக வெளிவந்துள்ளது.

 குட்இயர் நிறுவனம் மீது அதிபர் டிரம்ப் கடும் கோபம்... தனது காரிலிருந்து குட்இயர் டயர்களை மாற்றவும் முடிவு!

இந்த தகவல் ஆதரவாளர்கள் மூலமாக டிரம்ப் காதுகளுக்கு எட்டியுள்ளது. இதனை கேட்டவுடன் அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். மேலும், தனது பிரச்சார தொப்பிக்கு தடை விதிப்பது, ஒரு சாராருக்கு ஆதரவாக குட்இயர் நிறுவனம் செயல்படுவதாக கருதி அவர் ட்விட்டரில் நேரடியாக தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

 குட்இயர் நிறுவனம் மீது அதிபர் டிரம்ப் கடும் கோபம்... தனது காரிலிருந்து குட்இயர் டயர்களை மாற்றவும் முடிவு!

இதுகுறித்து ட்விட்டர் பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பதாவது,"குட்இயர் டயர்களை வாங்காதீர்கள். அவர்கள் எனது பிரச்சார தொப்பிக்கு தடை விதித்துள்ளனர். இதைவிட சிறந்த டயர்களை தேர்வு செய்யுங்கள்," என்று கூறி இருக்கிறார்.

 குட்இயர் நிறுவனம் மீது அதிபர் டிரம்ப் கடும் கோபம்... தனது காரிலிருந்து குட்இயர் டயர்களை மாற்றவும் முடிவு!

மேலும், அவர் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில்," குட்இயர் நிறுவனம் மீது கடும் அதிருப்தியில் உள்ளேன். அவர்கள் அரசியல் விளையாட்டு ஆடுகிறார்கள். பிற பிரச்சாரங்களுக்கு அனுமதிக்கும் அவர்கள், எனது ஆதரவாளர்கள் தொப்பி அணிய தடை விதித்தது அதிருப்தி அளிக்கிறது," என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 குட்இயர் டயர் நிறுவனம் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபம்!

இந்த குற்றச்சாட்டுக்கு குட்இயர் டயர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. எங்களது நிறுவனத்தின் கோட்பாடுகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அறிகிறோம். எந்த ஒரு அரசியல் தரப்பிற்கும் சார்பாக நடந்து கொள்வதில்லை என்றும் தனது பணியாளர்களுக்கும் அரசியல் சார்புடன் எந்த அழுத்தங்களுடன் கொடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 குட்இயர் நிறுவனம் மீது அதிபர் டிரம்ப் கடும் கோபம்... தனது காரிலிருந்து குட்இயர் டயர்களை மாற்றவும் முடிவு!

இதனிடையே, டிரம்ப் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ காரான தி பீஸ்ட் காரில் குட்இயர் டயர்கள்தான் பொருத்தப்பட்டுள்ளதாம். தனது ஆதரவாளர்களை குட்இயர் டயர்களை புறக்கணிக்க கூறி இருப்பதுடன், தான் பயன்படுத்தும் தி பீஸ்ட் லிமோசின் காரிலும் குட்இயர் டயர்களை அவர் மாற்ற முடிவு செய்துள்ளாராம். எனவே, தி பீஸ்ட் காரில் விரைவில் புதிய நிறுவனத்தின் டயர்கள் பொருத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles
English summary
US President Donald Trump called on his supporters to boycott Goodyear tyres due to Maga hat ban on its premises.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X