Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி வாங்கிய விலையுயர்ந்த கார்... இந்த காரை வாங்கிய முதல் அமெரிக்கரே இவர்தானாம்!
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் புதிய தலைமுறை காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வருபவர் க்ரிஸ் ஜென்னர். இந்த பெண்மணியே ரோல்ஸ் ரோய்ஸ் காரின் புதிய தலைமுறை கோஸ்ட் காரை டெலிவரி பெற்றவர் ஆவார். அமெரிக்காவிலேயே முதல் நபராக இக்காரை இவரே பெற்றிருக்கின்றார். இதனால் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் கண்களும் அவரின் பக்கம் திரும்பியிருக்கின்றது.

2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் அண்மையிலேயே இந்தியாவில் தனது கால் தடத்தைப் பதித்தது. விரைவில் இந்தியர்களில் சிலரும் இக்காரை டெலிவரிபெற இருக்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் இந்த தரமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. லக்சூரி அம்சங்களை அதிகம் விரும்பும் தொழிலதிபர்களின் தேடலில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளே முதல் இடத்தில் இருக்கின்றன.

இதன் அதிகபட்ச விலை சில செல்வந்தர்களுக்குகூட இக்காரை எட்டாக் கனியாக மாற்றிவிடுகின்றது. எனவேதான் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி இக்காரைப் பெற்றிருப்பது அநேகர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மெட்டாலிக் கருப்பு நிற காரையே கிரிஸ் ஜென்னர் தேர்வு செய்திருக்கின்றார். அக்காருடன் சேர்ந்து நிற்கும் அவரது புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

இதுபோன்று பல்வேறு லக்சூரி கார்களை க்ரிஸ் ஜென்னர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக அவரிடத்தில் 15 விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துமே லக்சூரி மற்றும் விலையுயர்ந்த கார்கள் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய கராஜை கூடுதலாக அலங்கரிக்கும் விதமாக புதிதாக புதிய தலைமுறை ரோல்ஸ் ராயஸ் கோஸ்ட் காரை அவர் களமிறக்கியிருக்கின்றார்.

இந்த காரில் 6.75 லிட்டர் ட்வின் ட்ரோசார்ஜட் வி12 பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 563 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இக்காரின் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரில் கூடுதல் சிறப்பு வசதியாக சேட்டலைட்டுடன் இணைக்கப்பட்ட டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஜிபிஎஸ் வாயிலாக சாலையின் நிலையை முன்கூட்டியே அறிந்து கியரை மாற்றியமைக்க உதவும். இந்த தனித்துவமான வசதியை வேறெந்த காரிலும் காண முடியாது.

இத்துடன், தானாகவே, உயரத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் திறன் கொண்ட ஏர் சஸ்பென்ஷன் பின் வீலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, சாலையில் பயணிக்கும்போது தண்ணீரில் மிதப்பதைப்போன்ற அனுபவத்தை வழங்கும். அதாவது, கார் பள்ளம், மேடுகளில் ஏறிச் சென்றாலும், அதுகுறித்த அனுபவத்தை துளியளவும் இக்கார் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தகுந்தது. 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டின் விலை கிட்டத்தட்ட ரூ.6.95 கோடிகள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.