உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல!

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் எதற்காக என்பது பற்றிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

இந்தியாவில், கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போதே கொரோனா வைரஸ் பரவலின் வேகம் மிக கடுமையாக அதிகரித்து காணப்படுகின்றது. எனவேதான் பொதுமுடக்கம் தற்போதும் நாட்டில் நீடித்த வண்ணம் உள்ளது. இருப்பினும், பொருளாதாரம், மக்களின் அத்தியாவசிய தேவை உள்ளிட்டவற்றைக் காரணத்தில் கொண்டு இதில் லேசான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

அதேசமயம், மக்களை பாதுகாப்பாக வழி நடத்தும் முயற்சியிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, சமூக இடைவெளி விட்டு பயணித்தல், மாஸ்க் அணிதல் மற்றும் தூய்மையாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை மக்களுக்கு அரசுகள் வழங்கி வருகின்றன.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

இந்த நிலையில், காட்டுத் தீயைப் போன்று மிக அதிக வேகத்தில் பரவி வரும் வைரசிடம் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக மேற்கு வங்க மாநிலத்தின் காவல்துறை மற்றும் உபேர் கால் டாக்சி நிறுவனம், ஆகிய இரண்டும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டமிட்டுள்ளன.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையில் இந்த புதியம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பைக் காட்டிலும் வைரஸ் பரவலின் வேகம் தற்போது மிக அதிக வேகத்தில் காணப்படுகிறது. எனவே, பெரும்பாலான மக்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணித்தால் எளிதில் தொற்று ஏற்படலாம் என அஞ்சுகின்றனர்.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

மேலும், அரசின் பொது வாகனங்களைக் காட்டிலும் தனியார் வாடகை வாகனங்கள் சற்று மேலானவை என ஒரு சிலர் நம்புகின்றனர். அதாவது கும்பலாக பயணிப்பதைக் காட்டிலும் தனியாக ஒற்றைக் காரில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பானது என நினைக்கின்றனர். ஆகையால், தனியார் கால் டாக்சியை நாடும் மக்களின் எண்ணிக்கை லேசாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

இந்த நிலையால் தற்போது தனியார் வாடகை வாகனங்களின் வாயிலாகவும் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. முன்பைக் காட்டிலும் மக்கள் மத்தியில் கால் டாக்சி சேவை அதிகரித்திருப்பதால் இந்த நிலை உருவாகியுள்ளது. எனவேதான் உபேர் நிறுவனம் மற்றும் மேற்கு வங்கத்தின் பித்தன்நகர் காவல்துறையினர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செய்திருக்கின்றனர்.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

மேற்கு வங்கம் மாநிலத்திலேயே இம்மாதிரியான புதுவிதமான நடவடிக்கையில் களமிறங்கும் முதல் காவல் நிலையாக பித்தன்நகர் போலீஸ் ஸ்டேஷன் மாறியிருக்கின்றது. இந்த ஒப்பந்தத்தின்மூலம், காவல்துறை அதிகாரிகள் உபேர் ஓட்டுநர்களுக்கு தேவையான சில அடிப்படை பயிற்சி மற்றும் பொது விழிப்புணர்வுகளை வழங்க இருக்கின்றனர்.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

மேலும், சுகாதார நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பாக இருப்பதன் அவசியம் பற்றிய தகவல்களையும் போலீஸார் உபேர் ஓட்டுநர்களுக்கு வழங்க இருக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு (World Health Organization) கோவிட்-19குறித்து வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையிலே மேற்கூறிய நெறிமுறைகளை ஓட்டுநர்களுக்கு போலீஸார்கள் வழங்க இருக்கின்றனர்.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

இப்பயிற்சியின் முடிவில் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் சான்றிதழ் அளிக்கப்பட இருக்கின்றது. இதனை அவரவர் கார்களில் ஒட்டிக் கொள்ள முடியும். இதன்மூலம், தாங்கள் நோய் எதிர்ப்பு விவகாரத்தில் கைதேர்ந்தவர்கள் என்பதனை பயணிகளுக்கு வெளிக்காட்ட முடியும். ஏற்கனவே முதல் 100 பேருக்கான பயிற்சி வகுப்புகள் முடிவடைந்துவிட்டநிலையில், தற்போது அவர்களுக்கு சான்று வழங்கப்பட்டிருக்கின்றது.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

போலீஸார் மற்றும் உபேர் டிரைவர்கள் ஆகியோர் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு கோவிட்-19 விழிப்புணர்வு தகவல் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அதிகளவில் அளிக்கப்பட்டு வருவதன் அடிப்படையில் இந்த தனித்துவமான கூட்டு முயற்சியில் உபேர் மற்றும் பிதன்நகர் காவல்துறை அதிகாரிகள் களமிறங்கியிருக்கின்றனர்.

உபேருடன் மேற்கு வங்க காவல்துறை ஒப்பந்தம்... இப்படியொரு நடவடிக்கையை நாட்டின் எந்த போலிசும் எடுக்கல! சூப்பர்..!

இதன்மூலம் ஓட்டுநர்களை மட்டுமின்றி அவர்களின் வாகனங்களின் பயணிப்போர் மற்றும் சக வாகன ஓட்டிகளையும் பாதுகாக்க முடியும் என நம்பப்படுகின்றது. இந்த தனித்துவமான ஒப்பந்தத்தை பித்தா நகர் காவல்நிலையத்தைத் தவிர நாட்டின் வேறெந்த காவல்துறையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uber and West Bengal Police have signed an agreement for safer mobility amid Covid-19. Read In Tamil.
Story first published: Thursday, October 8, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X